Shadow

திரைச் செய்தி

“வில்லனாக நடிக்க ஆசை” – அசோக் செல்வன்

“வில்லனாக நடிக்க ஆசை” – அசோக் செல்வன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோகத் தளங்களில் அவரது படங்களுக்குத் தனித்த மதிப்பு இருக்கிறது. 'ஓ மை கடவுளே', 'மன்மத லீலை' என வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜாலியான உரையாடலை நிகழ்த்தினார். அசோக் செல்வன், "நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்...
சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

சினிமா, திரைச் செய்தி
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழகத் தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி.கே.எம். தமிழ்குமரன், ''பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவி...
நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ...
நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ...
தமிழ்ப்படம் தயாரிக்கும் ‘தோனி’ என்டர்டெய்ன்மெண்ட்

தமிழ்ப்படம் தயாரிக்கும் ‘தோனி’ என்டர்டெய்ன்மெண்ட்

சினிமா, திரைச் செய்தி
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திராசிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தைத் தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கின்றனர். நிர்வாக இயக்குநரான திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாகத் தயாராகும் அந்தப் படைப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கெனத் தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. 'வுமன்'ஸ் டே அவுட்' என்ற ...
“ப்ரின்ஸ்: எனது முதல் தீபாவளி படம்” – சிவகார்த்திகேயன்

“ப்ரின்ஸ்: எனது முதல் தீபாவளி படம்” – சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘ப்ரின்ஸ்’ திரைப்படம். சென்னையில் நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ’‘இந்த ‘ப்ரின்ஸ்’ படம் மிகவும் சிம்பிளான கதை. ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட்தான் படத்தில் புதிய விஷயம். காமெடி என்றால் கவுன்ட்டர் செய்யாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது என புதிய விஷயம் சொல்லியிருக்கிறோம். அனுதீப் தெலுங்கில்தான் சிந்திப்பார். அந்தக் காமெடியைத் தமிழுக்கு மாற்றிக் கொண்டு வர வேண்டும். இரண்டு தரப்பு மக்களுக்கும் பிடிக்க வேண்டும். இதை ஏன் நாம் பரிசோதித்துப் பார்க்க்க் கூடாது என நினைத்தோம். தம...
ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

சினிமா, திரைச் செய்தி
ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய டேவி சுரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். ஹிந்தியில் வெளியான 'திருட்டுப்பயலே 2' படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்தப் படத்திற்கு எடிட்...
தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்

தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களைத் திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயற்பாடன்று. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், ஆஃப்ரிக்க தேசமான தகோமாவில் (Dahomey) 1800 களில், அந்தத் தேசத்தைக் காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி (Agojie) என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். உயரிய உடை அலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி வுமன் கிங்’ படத்தைப் பரபரப்பாக உருவாகியுள்ளனர். ஆராய்ச்சியின் அடிப்படையில், இவ்வாண்டில் A+ Cinema Score கௌரவத்தைப் பெற்ற இரு படங்களில் இதுவும் ஒன்று. இயக்கம் முதல் இதர தொழில்நுட்பக் கலைகள் வரை அதிகபட்சமாகப் பெண்களே பங்குபெறும் ஓர் உன்னதமான தற்காப்பு போர்க் காவியமிது. Vio...
அம்மு – உணர்ச்சிகரமான த்ரில்லர் படம்

அம்மு – உணர்ச்சிகரமான த்ரில்லர் படம்

OTT, அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ப்ரைம் வீடியோ, தனது முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்முவின் உலகளாவிய பிரீமியர் அக்டோபர் 19 அன்று வெளியிடப்படும் என அறிவித்தது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக, கல்யாண் சுப்ரமணியன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸின் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளனர், சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இப்படம், துன்பங்களை எதிர்கொண்டு பீனிக்ஸ் பறவை போல எழும் பெண்ணின் கதையான ஒரு டிராமா த்ரில்லர் படமாகும். குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்ணாக இருந்து, அவளது தன் மன மோதல்களைக் கடந்து, அவளது உள வலிமையைக் கண்டறிந்து, அவளது துஷ்பிரயோகம் செய்யும் கணவனுக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு, அம்மு சிலிர்ப்பான மாற்றத்தைக் காண்கிறாள். இப்படத்தில் நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி டைட்டில் ரோலில் நடிக்கிறார். இந்தியா மற்றும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற...
“தேஜாவு தானே முக்கோண விதியும், தொடர்பியலும்!” – ஜீவி ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்

“தேஜாவு தானே முக்கோண விதியும், தொடர்பியலும்!” – ஜீவி ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ஜீவி-2. கடந்த 2019இல் வெளியாகிப் புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் பாகத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளனர். ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட, முதல் பாகத்தைப் போலவே இப்படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு அருமையாக அமைந்து வருகின்றது. ஜீவி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள பிரவீண் குமார், இப்படங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். "முதல் படத்தில் ப...
கோப்ரா – கணிதப் புதிர்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர்

கோப்ரா – கணிதப் புதிர்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தைத் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் 'கோப்ரா'. கணிதப் புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், 'கோப்ரா' படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம் உண்டாகி இருக்கிறது. இதனை மேலும் தூண்டும் வகையில் சீயான் விக்ரம் தலைமையிலான படக் குழுவினர் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களைச் ...
“22 நாட்களில் எடுக்கப்பட்டது ஜீவி 2” – இயக்குநர் V.J.கோபிநாத்

“22 நாட்களில் எடுக்கப்பட்டது ஜீவி 2” – இயக்குநர் V.J.கோபிநாத்

சினிமா, திரைச் செய்தி
கடந்த 2019இல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் ‘ஜீவி’. யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல நேர்த்தியாகப் படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் V.J.கோபிநாத். இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகிக் கடந்த ஆகஸ்ட் 19 இல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா உள்ளிட்ட அனைவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த ‘ஜீவி 2’ உருவாக்கம் குறித்து சில புதிய தகவல்களை நம்மிடம் பகிர்...
கோப்ரா | கொச்சியில் கொண்டாட்டம்

கோப்ரா | கொச்சியில் கொண்டாட்டம்

சினிமா, திரைச் செய்தி
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மலையாளத் தேசத்தின் மாநகரமான கொச்சிக்குச் சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தைத் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கணித புதிர்களை மை...
“போராட்டம் தரும் உற்சாகம்” – விக்ரம் | கோப்ரா

“போராட்டம் தரும் உற்சாகம்” – விக்ரம் | கோப்ரா

சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திரப் பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளிய...
கோப்ரா டூர் @ கோவை | விக்ரம்

கோப்ரா டூர் @ கோவை | விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம், “கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் த்ரில்லர், எமோஷ்னல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை-ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ எனத் தெரிவித்தார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்தத் திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை, கோவை உள்ளி...