
இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’
நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும் ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும்.
‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி.
“திரைப்படக் கல்லூரியில் இருந்துவரும் ஒவ்வொருவருக்கும் விஜயகாந்தை வைத்து இயக்குவதுதான் கனவாக இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும், அவர் அலுவலகம் இருக்கும் ராஜாபாதர் தெருதான் அவர்கள் செல்லும் முதலிடமாக இருக்கும். திரைப்பட கல்லூர் ம...