32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1274 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 12 / 85
செய்திகள் வரிசை (பக்கம் 12)
Mission: Impossible – The Final Reckoning விமர்சனம் அயல் சினிமா

Mission: Impossible – The Final Reckoning விமர்சனம்

இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ‘மிஷன் இம்பாசிபள் (1996 – 2025)’ படத்தொடர் அதன் கடைசி அத்தியாயத்தை எட்டியுள்ளது என்று கசிந்த செய்தியே படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியிருந்தது. அதற்கேற்ற வகையில், ஈத்தன் ஹன்ட்க்கு ட்ரிப்யூட் செய்வது போல், படத்தலைப்பிற்கு முன்பே பழைய படங்களில் இருந்து கையாளப்பட்ட ஷாட்ஸ்களைக் காட்டுகின்றனர். படம் நெடுகேவும், நண்பர்களுக்காக அவர் மிஷனில் எடுத்த ரிஸ்க்களைப் பற்றி மற்ற கதாபாத்திரங்கள் அங்கலாய்த்துக் கொண்டே உள்ளனர். ‘இப்படியாப்பட்ட உன்னை வழிக்குக் கொண்டு வருவது ரொம்பச் […]

29/05/2025 Dinesh R
வேம்பு விமர்சனம் | Vembu review சினிமா

வேம்பு விமர்சனம் | Vembu review

அழகான கிராமத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் படமாகக் கவர்கிறது வேம்பு. சிலம்பாட்டத்தில் சாதிக்கவேண்டும் என்பதும், அதன் மூலமாக அரசு வேலைக்குச் செல்லவேண்டும் என்பதும் வேம்பு எனும் இளம்பெண்ணின் ஆசை. அதற்கு உற்றதுணையாக இருக்கும் வேம்புவின் தந்தை, மூப்பின் காரணமாக மகளுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைக்கவேண்டுமென எண்ணி, தங்கை மகன் வெற்றிக்கு மகளைக் கட்டிக் கொடுக்கிறார் வேம்புவின் தந்தை. கல்யாணமான அன்றே வெற்றிக்குப் பார்வை பறிப் போக, வேம்புவின் வாழ்க்கை எத்தகைய சிக்கல்களுக்கு உள்ளாகிறது என்றும், அதிலிருந்து அக்குடும்பம் […]

25/05/2025 Dinesh R
மையல் விமர்சனம் | Myyal review சினிமா

மையல் விமர்சனம் | Myyal review

ஆடு திருடனான மாடசாமிக்கும், மந்திரம் – தந்திரம் தெரிந்த அல்லிக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் சமய சந்தர்ப்பம் சாதகமாக இல்லாததால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. மையல் என்பது மயக்கம் அல்லது மோகம் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன். மைனா படத்தில் கிளைச்சிறை பொறுப்பதிகாரி பாஸ்கராக நடித்திருந்த சேது, இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மையல் படத்தின் இயக்குநர் APG ஏழுமலை, […]

24/05/2025 Dinesh R
ஏஸ் விமர்சனம் | Ace review இது புதிது

ஏஸ் விமர்சனம் | Ace review

சீட்டுக்கட்டு விளையாட்டில், மிகக் குறைந்த மதிப்பும், அதே சமயம் அதிக மதிப்புமிக்க சீட்டாக ஏஸ் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கடினமான சவாலைத் தனது இடு இணையற்ற திறமையால் முடிக்கும் நபரைச் சுட்டுகிறது. குற்றப் பின்னணியுடைய நபர், மலேஷியாவிற்குச் செல்கிறார். பிரச்சனைகளில் சிக்காமல் அமைதியான வாழ நினைப்பவரைப் போல்ட் கண்ணன் எனக் கருதி வேலையில் சேர்த்து விடுகிறார் அறிவுக்கரசன். கண்ணன்க்கு வேலை கொடுத்த கல்பனாவிற்கு வங்கியில் கடன் சிக்கல், கண்ணனின் காதலி ருக்மிணிக்கு வேலையில் நீட்டிக்கவும், […]

23/05/2025 Dinesh R
மாமன் விமர்சனம் | Maaman review சினிமா

மாமன் விமர்சனம் | Maaman review

அக்கா மகனுடன் நாயகனுக்கு ஏற்படும் அதீத பிணைப்பும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை. மாமனுக்கு மிஞ்சிய உறவில்லை என்பது பழமொழி. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள், ‘தாய்மாமன்’ உறவிற்கு எப்பொழுதும் கூடுதல் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அளித்து வந்துள்ளனர். இரண்டு, மூன்று தசாப்தங்களாக உறவினர்களின் பாராமுக மனப்போக்கைக் கிண்டல் செய்யும் வழக்கம் மிகுந்துவிட்ட போதிலும், நண்பர்கள் தங்களுக்குள் ‘மாமா – மச்சான்’ என்றே உறவுமுறை கொண்டு அழைத்துக் கொள்வது 80 களில் தொடங்கி, போன தசாப்தம் வரையிலுமே கூட […]

16/05/2025 Dinesh R
கஜானா விமர்சனம் | Ghajaana review சினிமா

கஜானா விமர்சனம் | Ghajaana review

நாகமலையில் புதையுண்டிருக்கும் பொக்கிஷத்தை யாளி எனும் மிருகம் காவல் காக்கிறது. அப்பொக்கிஷத்தை அடைய நினைக்கும் மனிதர்கள் அனைவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். காசியப முனிவர்க்கு ஆரி, சூரி என இரண்டு மனைவிகள் என ஒரு கிளைக்கதை பிரிகிறது. ஹிந்துப் புராணத்தின்படி, காசியப முனிவர், தக்ஷனின் எட்டு மகள்களை மணம் புரிந்தவர். அதில், கத்ரு எனும் மனைவியின் மூலமாக 1000 நாகர்களும், கத்ருவின் இளைய சகோதரி வினதா மூலமாக அருணன், கருடன் என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்தப் […]

09/05/2025 Dinesh R
நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review சினிமா

நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். நிழற்குடையின் அருமையோ வெயில், மழை என இரண்டிலும் தெரியும். நிழற்குடையை மனித உறவுகளுக்கான குறியீட்டுத் தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். நிரஞ்சனும் லான்சியும் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலா என்றொரு குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர்-டேக்கரை நியமிக்கிறார்கள். ஆனால் கேர்-டேக்கர் ஒத்து வராததால், ஆசிரமத்தில் இருந்து ஜோதிம்மாவை அழைத்து வருகின்றனர். திடீரென நிலா காணாமல் […]

09/05/2025 Dinesh R
தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review இது புதிது

தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review

தானோஸ் மார்வெலில் ஏற்படுத்திய வெறுமைக்குப் பிறகு, மீண்டும் மார்வெலின் மேஜிக் இப்படத்தில்தான் துளிர்ந்துள்ளது. ‘பன்னண்டம்’ என இடியாப்ப குழப்பம் இல்லாத எளிமையான நேரடிக் கதையென்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சி.ஐ.ஏ.-வின் இயக்குநர் வேலன்டினா, அவெஞ்சர்ஸ் இல்லாத குறையைப் போக்குவதற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், “சென்ட்ரி” எனும் சூப்பர் பவர் மிக்க ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில், O.X.E. எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சட்டவிரோதமான முறையில் மனிதர்களைக் கொண்டு பல சோதனைகளை நடத்தி, அதில் தோல்வி காணும் […]

06/05/2025 Dinesh R
HIT: The Third Case விமர்சனம் | Hit 3 review அயல் சினிமா

HIT: The Third Case விமர்சனம் | Hit 3 review

விசாரணையை மையமாகக் கொண்ட முதலிரண்டு பாகங்களைப் போலல்லாமல், கொஞ்சம் விசாரணை — பக்கா ஆக்‌ஷன் த்ரில்லராக ஹிட் 3-ஐ இறக்கியுள்ளார் இயக்குநர் சைலேஷ். தலைக்கீழாகத் தொங்க விட்டு, ஒரு மனிதரின் கழுத்தை அறுத்துக் கொள்ளும் வழக்கினை அர்ஜுன் சர்க்கார் விசாரிக்கிறார். இந்தியா முழுவதும் இந்த பாணியில் பல்வேறு கொலைகள் நடப்பதைத் தெரிந்து கொள்கிறார். டார்க் நெட் மூலமாக, இந்தக் கொலைகாரர்களை இயக்குபவனைக் கண்டறியக் களமிறங்குகிறார் அர்ஜுன் சர்க்கார். மிருதுளா எனும் ASP பாத்திரத்தில், KGF நாயகி ஸ்ரீநிதி […]

02/05/2025 Dinesh R
ரெட்ரோ விமர்சனம் | Retro review இது புதிது

ரெட்ரோ விமர்சனம் | Retro review

ரெட்ரோ எனும் சொல் பின்னோக்கிய காலத்தைக் குறிக்கிறது. கதையின் காலகட்டம் செல்ஃபோன்கள் பரவலாகாத தொண்ணூறுகளின் இறுதியாகும். தூத்துக்குடியில், ஒரு டானால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்படுகிறார் பாரிவேல் கண்ணன். அடிதடியே வாழ்க்கையென வாழும் பாரிக்கு சுமார் 35 வயதானதும், அவரது காதலி ருக்மிணியின் விருப்பத்திற்கிணங்க வன்முறையைக் கைவிட முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகத் அவரது திருமண நாளன்றே, ருக்மிணியை வெட்ட வரும் வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டி விடுகிறார் பாரி. பாரி சிறைக்குச் செல்கிறார், மனம் நோகும் ருக்மிணி தலைமறைவாகிறார், மகனிடம் […]

01/05/2025 Dinesh R
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review இது புதிது

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் […]

30/04/2025 Dinesh R
கேங்கர்ஸ் விமர்சனம் | Gangers review இது புதிது

கேங்கர்ஸ் விமர்சனம் | Gangers review

ஒரு பள்ளிச்சிறுமி காணாமல் போக, அவ்வூரில் நடக்கும் பல குற்றங்களையும் பட்டியலிட்டு, பள்ளி ஆசிரியை ஒருவர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். அப்புகாரைப் புலனாய்வு செய்ய காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவ்வூரிற்கு ஆசிரியரராக வரும் சரவணன், பள்ளிச்சிறுமி காணாமல் போனதன் மர்மத்தைக் கண்டுபிடிப்பதோடு, அந்த ஊரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூறு கோடியையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார். அதற்கு அவருடன் இணையும் கேங்கர்ஸ் உதவுகின்றனர். ஆசிரியை சுஜாதாவாகக் கேத்தரின் தெரசாவும், விளையாட்டு ஆசிரியர்கள் சிங்காரமாகவும் சரவணனாகவும் வடிவேலுவும், சுந்தர்.சி-யும் நடித்துள்ளனர். […]

25/04/2025 Dinesh R
வல்லமை விமர்சனம் | Vallamai review சினிமா

வல்லமை விமர்சனம் | Vallamai review

திறன், பலம், வலிமை, ஆற்றல், சக்தி என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். விவசாயப் பின்னணியையுடைய சரவணனும், அவரது மகள் பூமிகாவும் கல்விக்காகச் சென்னைக்கு வருகிறார்கள். எவரோ சிறுமி பூமிகாவை மயக்கமடையச் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிடுகின்றனர். அது யாரெனக் கண்டுபிடித்து, தான் அனுபவிக்கும் வலிக்குப் பழி வாங்கவேண்டுமென விரும்புகிறாள் பூமிகா. அக்கொடியவனைச் சரவணனும் பூமிகாவும் எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. சரவணனாக பிரேம்ஜி நடித்துள்ளார். மிகவும் பாவப்பட்டவராக, நடக்கவும் நடிக்கவும் மிகவும் சிரமப்படுபவராக, ஆள் […]

24/04/2025 Dinesh R
டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review இது புதிது

டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review

ஒரு இளம்பெண் கடத்தப்படுகிறாள், மூன்று காவலர்களைக் காரில் செல்லும் ஒரு குழு சுட்டுக் கொல்கிறது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஒரு இளைஞன் கொல்லப்படுகிறார், கள்ளக்குறிச்சி பை-பாஸ் பாலத்தினருகே சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ, ஓரிரவில், பத்து மணி நேரத்திற்குள் இந்நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. நேரடியாக முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்று, கதையை விட்டு அகலாமல் திரைக்கதை பயணிப்பது படத்தின் மிகப் பெரிய […]

18/04/2025 Dinesh R
அம்… ஆ விமர்சனம் | Am… aa review அயல் சினிமா

அம்… ஆ விமர்சனம் | Am… aa review

மலையாளப் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவந்தா எனும் மலைக்கிராமத்திற்கு, சாலை ஒப்பந்தக்காரரான ஸ்டீஃபன் வருகிறார். அந்தக் கிராமத்தில் ஒரு அம்மிணியம்மாவும், செவிப்புலன் திறன் கம்மியாக இருக்கும் அவர் பேத்தி குயிலியும் வசிக்கின்றனர். ஸ்டீஃபன் அவர்களைப் பற்றிக் கிராமத்தாரிடம் விசாரிக்க, யாருக்கும் அவர்கள் எங்கிருந்து அந்தக் கிராமத்திற்கு வந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அந்த ஊரின் ரகசியங்களை அறிந்த கண் தெரியாத முதியவர் ஒருவர், அம்மிணியம்மாவைப் பற்றி […]

18/04/2025 Dinesh R