32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1274 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 11 / 85
செய்திகள் வரிசை (பக்கம் 11)
பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review இது புதிது

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான். மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் […]

03/07/2025 Dinesh R
3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review இது புதிது

3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review

தனக்கென்றொரு வீடு வாங்கவேண்டும் என்பது வாசுதேவனின் ஆசை. ஆனால் சூழலும், குடும்பப்பாடுகளும் அக்கனவைத் தொட்டுவிடும் நிலைக்கு வரும்பொழுதெல்லாம் தட்டி விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்தக் கனவைத் தன் மகன் பிரபு நிறைவேற்றுவான் என்று சமாதானமாகிறார். பிரபுவின் வாழ்க்கையோ, தோல்வியடைதலுக்கும் (Failure), எதிலும் வெற்றியோ முன்னேற்றமோ காணாத மிகச் சராசரியான வாழ்விற்கும்  (Average) இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வாசுதேவனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். பதினேழு […]

02/07/2025 Dinesh R
கண்ணப்பா விமர்சனம் | Kannappa review அயல் சினிமா

கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

கண்ணப்பர் எனும் சிவ பக்தரின் கதையை பாகுபலி போல் ஒரு பிரம்மாண்டமான புனைவுப் படமாக உருவாக்கியுள்ளனர். திண்ணன் எனும் வேட்டுவக் குல வீரன், கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறான். அவன் வசிக்கும் காட்டிலுள்ள வாயுலிங்கத்தை அபகரிக்க காளாமுகன் என்பவன் பெரும்படையுடன் வருகிறான். திண்ணனின் தந்தை நாதநாதன், தீவிலுள்ள ஐந்து இனக்குழுக்களயும் ஒன்றிணைத்து காளாமுகனை எதிர்க்க ஒன்றிணைக்கிறான். கைலாயத்தில் வாழும் சிவனோ, ருத்ரனை அனுப்பி திண்ணனைத் தடுத்தாட்கொண்டு, அவனைப் பக்திமானாக்குவதோடு, அவனது தீவிரமான பக்தியை உலகறியச் செய்வதோடு, தனிநபர் […]

28/06/2025 Dinesh R
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review இது புதிது

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90’ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா […]

28/06/2025 Dinesh R
மார்கன் விமர்சனம் | Maargan review இது புதிது

மார்கன் விமர்சனம் | Maargan review

‘ககன மார்க்கன்’ என்றால் வான் வழியே பயணிப்பவன் எனப் பொருள். அது அப்படியே சுருங்கி மார்கன் ஆகிவிட்டது. ஒரு ஊசி போட்டால் உடல் கருகி வினோதமான முறையில் இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை உருவாக்கி வைத்துள்ளார் வில்லன். அப்படிக் கொடூரமாக இறக்கும் ரம்யாவின் மரணத்துடன் படம் தொடங்குகிறது. தனது மகளைப் போலவே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க சென்னை வருகிறார் காவல்துறை அதிகாரியான துருவ் கோரக். அவரது முகத்தின் இடது பக்கம் கூடக் கருப்படைந்து அரைகுறையாகச் […]

27/06/2025 Dinesh R
28 Years Later விமர்சனம் | 28 YL review அயல் சினிமா

28 Years Later விமர்சனம் | 28 YL review

28 Days Later (2002), 28 Weeks Later (2007) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவதாக இப்படம் வெளியாகியுள்ளது. முந்தைய இரு பாகங்களைப் பார்க்காவிட்டாலும் இப்படத்தை நேரடியாகப் பார்க்கலாம். முதல் பாகத்தை இயக்கிய டேனி பாயிலும், திரைக்கதை எழுதிய அலெக்ஸ் கார்லேண்டும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதினைப் பெற்றுக் கொடுத்த ‘ஸ்லம்டாக் மில்லியனர் (2008)’ படத்தை இயக்கியவர் டேனி பாயில் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கொடுமையான வைரஸ் கிரேட் பிரிட்டனைத் தாக்கி 28 […]

24/06/2025 Dinesh R
குபேரா விமர்சனம் | Kuberaa Review சினிமா

குபேரா விமர்சனம் | Kuberaa Review

திருப்பதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் தேவாவின் பெயரில் ஷெல் கம்பெனி தொடங்கப்பட்டுப் பத்தாயிரம் கோடி டெபாசிட் செய்யப்படுகிறது. அப்பணத்தை மீண்டும் அவரிடமிருந்து வில்லன் பெறுவதற்குள், தேவா உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்துவிடுகிறார். அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வில்லனிடமிருந்து பத்தாயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரன் தேவாவால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. ஒரு பொருளாதாரக் குற்றப் பின்னணியில் தொடங்கும் படம். அக்குற்றத்தைச் சாத்தியமாக்குவதற்கான செயற்முறை, சிறைப்பட்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரியில் இருந்து சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் வரை நீள்கிறது. மிக […]

20/06/2025 B R Murali Krishnan
Chennai City Gangsters விமர்சனம் இது புதிது

Chennai City Gangsters விமர்சனம்

பசுபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க பாண்டியும் பூச்சியும் சைக்கோ சலீமிடம் பணத்தைத் திருடி, அதை டாஸ்மாக்கில் தொலைக்கின்றனர். அந்தப் பணத்தை ஈடு செய்ய, ஸ்பிலிட் சூசை, மெமரி தாஸ், டமார லால், குடி குமார் எனும் கொள்ளையர்களுடன் இணைந்து வாவ் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். இந்த கேங்ஸ்டர்களின் முயற்சி என்னானது என்பதே படத்தின் கதை. எழுதி இயக்கியுள்ள இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வரும், அருண் கேசவும் கதாபாத்திர வடிவமைப்பில் அசத்தியுள்ளனர். ஸ்பிலிட் சூசையாக ஆனந்த்ராஜும், மெமரி தாஸாக மொட்டை […]

20/06/2025 B R Murali Krishnan
டிஎன்ஏ விமர்சனம் | DNA review இது புதிது

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை […]

19/06/2025 Dinesh R
கட்ஸ் விமர்சனம் | Guts review சினிமா

கட்ஸ் விமர்சனம் | Guts review

ஒரு திருநங்கை அரசு அலுவலரைக் கொன்ற கார்ப்பரேட் முதலாளியைக் கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி ரங்கராஜ். அவ்வழக்கில் இருந்து மிகச் சுலபமாக வெளியில் வரும் வில்லன், ரங்கராஜின் கர்ப்பவதி மனைவியான அனுவைக் கொல்கிறான். கோபத்தில் ரங்கராஜும் வில்லனைக் கொன்று விட, காவல்துறையும், வில்லனின் ஆட்களும் நாயகனைத் தேடுகின்றனர். மகளுடன் தலைமறைவாகித் தனது பூர்வீக ஊரில் தஞ்சமடைகிறார் ரங்கராஜ். அவரது அப்பாவுக்கும், வில்லனின் அப்பாவுக்கும் உள்ள தீர்க்கப்படாத சிக்கலொன்றும் சேர்ந்து நாயகனைத் துரத்துகிறது. அச்சிக்கல் என்னவென்றும், அதிலிருந்து ரங்கராஜ் […]

12/06/2025 Dinesh R
பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review சினிமா

பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review

அந்நியர்கள் நுழையத் தடை விதைத்திருக்கும் சுப்ரமணியபுரத்து பரமசிவனும், சாத்தான்கள் நுழையத் தடை விதித்திருக்கும் யோக்கோபுரத்து பாத்திமாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மதத்தைக் காரணம் காட்டி இருவும் கொல்லப்படுகிறார்கள். பரமசிவனும் பாத்திமாவும் தங்கள் மரணத்திற்குப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை. ஒன்றாக இருந்த ஊரைப் பணத்தாசை காட்டி மதம் மாற்றி இரண்டாக உடைக்கிறார்கள் எனக் காத்திரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இதுதான் படத்தின் பிரதான நோக்கம். வசனங்கள், காட்சிகள் என அனைத்தும் அதை நோக்கியே நகர்கின்றன. பரமசிவன், பாத்திமா […]

06/06/2025 Dinesh R
பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் | Peranbum Perungobamum review சினிமா

பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் | Peranbum Perungobamum review

குழந்தையைக் கடத்தினான் என அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் ஜீவாவைக் காவல்துறை கைது செய்கிறது. குழந்தையைத் தான் கடத்தவில்லை ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது, தானென்ன செய்தேன் என்று ஒரு பெரும் பஞ்சாயத்தை இழுத்து விடுகிறான் ஜீவா. ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தினின்று அதிகாரத்திற்கு வருபவர்களை ஜீவா பெருங்கோபம் கொண்டு எப்படிப் பழிவாங்குகிறான் என்பதுதான் படத்தின் கதை. சாதிவெறி பிடித்த சகோதரர்கள் முத்துப்பாண்டி, ரத்னவேலுவாக முறையே மைம் கோபியும், அருள்தாஸும் நடித்துள்ளார்கள். சகோதர வில்லன்களாக நடிக்க […]

06/06/2025 Dinesh R
மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review இது புதிது

மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review

எழுத்தாளர் ஜோதி ராமய்யாவிற்கு, நடுத்தர வர்க்கத்தைப் பற்றி நாவல் எழுதவேண்டுமெனப் பிரியப்படுகிறார். அந்தத் தேடலில், டாஸ்மாக்கில் சந்திக்கும் கண்ணன் எனும் ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறார். கண்ணன், அவரது குடும்பம், அவரது வாழ்க்கைப் பாடுகள், அவரது மகள் தீபிகா, மகன் தினேஷ், மனைவி கமலம் என ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சியான கதை தான் மெட்ராஸ் மேட்னி படத்தின் கதையும். கட்சி விட்டுக் கட்சி தாவும் அரசியல்வாதி பச்சோந்தி பிரேமாவாகக் கீதா கைலாசம் நடித்துள்ளார். அம்மா பாத்திரங்களில் மட்டும் […]

06/06/2025 Dinesh R
தக் லைஃப் விமர்சனம் | Thug Life review இது புதிது

தக் லைஃப் விமர்சனம் | Thug Life review

காவலர்களிடமிருந்து உயிருடன் தப்பிக்க ரங்கராய சக்திவேல் அமரனைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு நன்றிக்கடனாக அமரனைத் தனது மகன் போல் வளர்க்கிறார். அமரன் பெரியவன் ஆனதும், சக்திவேல் தப்பிப்பதற்காக வேண்டுமென்றே தனது தந்தையைத் கொன்றதாக அறிந்து கொள்கிறான் அமரன். அமரன், சுடப்பட்ட சக்திவேலை நேபாளத்தின் பனிப் பள்ளத்தாக்குகளில் தள்ளிவிடுகிறான். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பும் அஞ்சானான சக்திவேல் ரங்கராயன் துரோகிகளைப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை. காட்சிப்படுத்தியதிலிருந்த அதீத தொழில்நுட்ப மெனக்கெடல், திரைக்கதை அமைத்ததில் சுத்தமாக […]

05/06/2025 Dinesh R
ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review இது புதிது

ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review

தனது மகன் பட்டா மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார் செல்லய்யா. அவனை வேலைக்கே அனுப்பாமல் அரசனின் மகன் போல் சொகுசாக வளர்க்கிறார் செல்லய்யா. பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பட்டா, உண்டியல் பணத்தைப் பட்டுவாடா செய்யும் தொழிலில் ஈடுபட்டுப் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். தனது மகனை அப்பிரச்சனையில் இருந்து செல்லய்யா மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. செல்லய்யாவாக பிரபு நடித்துள்ளார். ஒரு மகிழ்ச்சியான தந்தையாக மிகப் பூரிப்பாகப் படம் முழுவதும் வருகிறார். முக்கால்வாசி படம் […]

30/05/2025 Dinesh R