Shadow

இது புதிது

சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024

சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024

இது புதிது, சமூகம்
தென் மெட்ராஸ் கலாச்சார சங்கத்தின் (SMCA – South Madras Cultural Association) 46 ஆவது ஆண்டு இலையுதிர்கால விழாவான "ஷரதோத்சவ்", அக்டோபர் 9 முதல் 13 வரை கொண்டாடப்படுகிறது. இதுவே சென்னையில் நிகழும் மிகப் பெரிய துர்கா பூஜை கொண்டாட்டமாகும். இந்த பிரம்மாண்டமான நிகழ்வை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தொடங்கி வைத்தார். SMCA இன் தலைவர் திரு. சுதீப் மித்ரா, "நாங்கள் துர்கா பூஜையை 46 ஆண்டுகளாகச் சென்னையில் கொண்டாடி வருகிறோம். இப்போது இரண்டாவது ஆண்டாக, இந்த இடத்தில் (கைலாஷ் கன்வென்ஷன்ஸ், ECR), மிகப் பிரம்மாண்டமான முறையில் துர்கா பூஜையைக் கொண்டாட பிரத்தியேகமான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். நிகழ்த்துகிறோம். நாங்கள் விஷயங்களைச் செய்துள்ளோம். எங்கள் பூஜையின் பிரமாண்டம், எங்கள் நிர்வாக அறங்காவலர் எங்களின் தொலைநோக்கு மற்றும் பணி பற்றி விளக்குவார். SMCA, தனது அறக்கட்டளையின் மூலமாக நிறைய நற்பணிக...
ஹிட்லர் விமர்சனம்

ஹிட்லர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படைவீரன் (2018), வானம் கொட்டட்டும் (2020) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் SA தனாவின் மூன்றாவது படம். 'வானம் கொட்டட்டும்' எனக் கதைக்குப் பொருந்தும் கவித்துவமான தலைப்பை வைத்தவர், இப்படத்திற்கு 'ஹிட்லர்' எனும் பொருந்தாத தலைப்பை வைத்திருக்கும் வாய்ப்புக் குறைவாகவுள்ளது. 'பிச்சைக்காரன்' எனும் எதிர் தலைப்பு ஈட்டிக் கொடுத்த வெற்றியினால் உந்தி, 'சைத்தான் (2016)', 'எமன் (2016)', 'திமிரு பிடிச்சவன் (2018)', 'கொலைகாரன் (2019)' என எதிர் தலைப்புகள் வைப்பதில் ஆர்வம் காட்டினார் விஜய் ஆண்டனி. அதன் தொடர்ச்சியாக 'ஹிட்லர்' எனும் தலைப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார் எனப் படுகிறது. மற்ற தலைப்புகளில் இல்லாத அரசியல் பிழைத்தனம் 'ஹிட்லர்' எனும் தலைப்பில் உள்ளது. நாயகனை ஹிட்லர் என அழைத்து, அம்மனிதகுல விரோதியை மகிமைப்படுத்துவது பெருங்குற்றத்தில் வரும். இயக்குநர், வில்லனின் சர்வாதிகாரத்தன போக்கைக் குறிக்கும் வி...
தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம் “தில் ராஜா” ஆகும். வருகிற 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய அம்ரீஷ், "தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் ப்ரோமோஷனுக்கு மாஸாகப் பாடல் கேட்டார்கள். ஹ்யூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள். ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ. வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார். அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய் ச...
கடைசி உலகப்போர் விமர்சனம்

கடைசி உலகப்போர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐ.நா.வில் இருந்து பிரியும் சீனாவும் ரஷ்யாவும், 'ரிபப்ளிக் (O.N.O.R.)' எனும் கூட்டமைப்பை உருவாக்கி, அமீரகம், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் முதலிய எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கிறது. ரிபப்ளிக்கில் இணையாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இந்தியாவுடனான தொடர்பில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு அல்லலுகிறது. இலங்கையின் தனிப்படையினர் உதவியோடு, தமிழ்நாட்டை தன்வசத்திற்குக் கொண்டு வருகிறான் சீனன் ஒருவன். தமிழ்நாட்டு முதல்வர் நாசரை மிரட்டி தமிழ்நாட்டை ரிபப்ளிக்கில் சேர்த்துவிடுகிறான். நாயகன் தமிழ் எப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை சீன ரிபப்ளிக் ஆதிக்கத்தில் இருந்து மீட்கிறான் என்பதே கதை. கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், தயாரிப்பு என இந்தப் படத்தின் ஆல்-இன்-ஆல் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான். ஆசையும் அனுபவமின்மையும் சேரும் புள்ளிதான் இப்படத்தின் மையக்கரு. ...
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாமனிதன் படத்தின் நீட்சியாகவே உள்ளது. ஒரு ஆண், தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்குச் செல்வான் என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகப் பதிந்துள்ளார் சீனு ராமசாமி. செல்லதுரையும், அவன் தங்கையும் நிராதரவாக ஆண்டிபட்டிக்கு வருகின்றனர். கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமியின் ஆதரவில் வளர்கின்றனர். தன் தங்கைக்காகவே வாழுகிறான் செல்லதுரை. வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பமாக, செல்லதுரையின் தங்கை ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்; சிறு வயதில் தன்னை விட்டுச் சென்ற தாயைப் பார்க்கின்றான்; வேறொரு மணம் புரிந்து கொள்ளும் தந்தையும் அவனைத் தேடி வருகிறார். இவற்றை செல்லதுரை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. கதையின் மாந்தர்களைத் துரிதமாக அறிமுகப்படுத்திவிட்டு, முதல் பாதி முழுவதும் கோர்வையற்ற காட்சிகளாலும் வசனங்களாலும் ஒப்பேற்றியுள்ளார். இடைவேளைக்குப் பிறகே படம் தொடங்குகிறது. முதற்பாதியை ஒப்பேற்ற நாயகி...
நந்தன் விமர்சனம்

நந்தன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆண்டை கோப்புலிங்கத்திற்குப் பரம விசுவாசியாக உள்ளார் கூழ்பானை என்றழைக்கப்படும் அம்பேத்குமார். ஆதலால், தனித்தொகுதியாக்கப்படும் வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குக் கூழ்பானையைத் தேர்வு செய்கிறார். தான் ஆட்டுவிக்கும் பாவையாகக் கூழ் பானை இருப்பான் என்ற நம்பிக்கை சிதையும் வண்ணம், தங்களுக்கென ஒரு தனிச் சுடுகாட்டைத் தன்னிச்சையாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுகிறார் அம்பேத்குமார். அதனால் கோபமுறும் கோப்புலிங்கத்தின் எதிர்வினையும், அதை அம்பேத்குமார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் முடிவு. தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களை, சமூகத்தில் ஆழ வேரூன்றிவிட்ட சாதியக் கட்டமைப்பு எப்படி நடத்துகிறது என்பதுதான் படத்தின் மையக்கரு. படத்தின் ஆகப் பெரிய பலவீனம் படத்தின் கதாபாத்திர வார்ப்புகளே ஆகும். என்ன சொல்லப் போகிறோம் என இயக்குநர் இரா. சரவணனுக்கு இருந்த தெளிவு, முதன்ம...
“எது நல்ல படம்?” – இயக்குநர் ஹெச். வினோத்

“எது நல்ல படம்?” – இயக்குநர் ஹெச். வினோத்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், "இயக்குநர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தைத் தொடங்கினார். அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்தப் படத்தைத் தொடங்கினார் என்பது எனக்குத் தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார். இந்தக் கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், 'சோப்புலிங்கம்' கேரக்...
“நந்தன்: வலியின் மொழி” – சீமான்

“நந்தன்: வலியின் மொழி” – சீமான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, "ஒரு நல்ல கதையை நாம் எழுதிவிட்டால் போதும், அதுவே அதனை உருவாக்கிக் கொள்ளும். நாம் யாரையாவது நினைத்து எழுதியிருப்போம். ஆனால் அது முடிவு செய்வதுதான். அப்படித்தான் சசிகுமார் இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் இந்த கதையில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் என்னையும் நடிக்கச் சொன்னார்கள். முதல் இரண்டு படங்களில், இரா. சரவணனுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை...
“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

இது புதிது, சினிமா, திரைத் துளி
பார்க்கிங் படத்தைப் போல் ஒரு அசத்தலான கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை ஹரிஷ் கல்யாண் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் லப்பர் பந்து படத்தைத் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக அ. வெங்கடேஷ் இணைந்துள்ளார். இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க கதாநாயகிகளாக ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா, சுவாசிகா விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், தேவதர்ஷினி, பாலசரவணன், டி எஸ்கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ளது. படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதற்காக பேசிக்கொண்டிருந்த ...
The GOAT விமர்சனம்

The GOAT விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
The Greatest Of All the Time - எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்தவர். Goat of the SATS (Special Anti Terrorism Squad) என்றழைக்கப்படும் நாயகன், பயங்கரவாதத்திற்கான எதிரான நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். 'இனி நடிக்கப் போவதில்லை' என்ற விஜயின் முடிவிற்குப் பிறகு வந்த படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கு எகிறியிருந்தது. இரண்டு விஜய் இணைந்து கலக்கும் டீசர் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. நாயகன் M.S. காந்தி ஜீவனைத் தொலைத்து விடுகிறார். பதினாறு வருட சோகத்திற்கும் குற்றவுணர்ச்சிக்கும் பிறகு ஜீவன் கிடைத்துவிட்டாலும், அதன் பின் கண் முன்னாலேயே நண்பர்களைக் காப்பாற்ற இயலாமல் இழந்து விடுகிறார் காந்தி. கடைசியில் வில்லன் ராஜிவ் மேனனின் சூழ்ச்சிக்கு பலியாகி, M.S.காந்தி தங்கப்பதக்கத்தினைப் பெறுவதுதான் படத்தின் கதை. இளம் வயது ஜீவனாக நடித்துள்ள மாஸ்...
மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின் ஆகும். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் உதய் K. மேத்தா, "ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜுன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா ...
ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண – நாட்டிய நாடக நிகழ்வு | சீதாலட்சுமி விஜய்

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண – நாட்டிய நாடக நிகழ்வு | சீதாலட்சுமி விஜய்

இது புதிது, சமூகம்
சென்னை தி.நகர் கிருஷ்ணகான சபாவில் சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக 'பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம்' என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தைக் கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது. திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான டாக்டர் சோபனாவின் மாணவியான சீதாலட்சுமி விஜய் அவர்கள் தனது மாணவிகளுடன் இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார். ஒய்.ஜி.மகேந்திரன் தலைமை ஏற்க, நடனக் கலைஞர் உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு, ஆகஸ்ட் 31 அன்று தி.நகர் கிருஷ்ணகான சபாவில் 10 ஆவது முறையாக அரங்கேறியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரங்கம் நிறைந்த மக்களுடன் விழா நடைபெற்றது. "நமது அடையாளத்தை, நமது கலாச்சாரத்தை, அனைவரையும் ஈர்க்கும் விதமாக அற்புதமான நாடகமாக அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள்" என்று ஒய்.ஜி.மகேந்திரன்...
Gembrio Pictures – அர்ஜுன் தாஸின் ‘பாம்’ ஃபர்ஸ்ட் லுக்

Gembrio Pictures – அர்ஜுன் தாஸின் ‘பாம்’ ஃபர்ஸ்ட் லுக்

இது புதிது
ஜெம்ப்ரியோ (Gembrio) பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK, கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் என்டர்டெயினர் ட்ரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவினில் பேசிய தயாரிப்பாளர் சுதா சுகுமார், "ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம். நல்லதொரு குழுவின் உழைப்பில், மிகச் சிறந்த படைப்பாக இப்படம் வந்துள்ளது. ...
சிலம்பப் பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

சிலம்பப் பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

இது புதிது, சினிமா, திரைத் துளி
உடற்தகுதியை நேர்த்தியாகப் பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும், தற்காப்புக் கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான (மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இப்பயிற்சி இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்புக் கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.  இது தொடர்பாக அவர் குறிப்பிடும்போது, ''எனது தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்...
Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) ஆகும். இப்படம் ஹைபர் லூப் வகைமையைச் சார்ந்த த்ரில்லராக உருவாகியுள்ளது. கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் கண்ணன், "படத்தில் எனக்கும் இயக்குநருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தன. எனக்கு சரியெனப்படுவது அவருக்கு தப்பு; அவருக்குத் தப்புன்னுபடுறது எனக்கு சரியா இருக்கும். இப்படியும் ஒன்னு எடுத்துக்கோங்க எனச் சொல்லி அவர் ந...