32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 14 / 34
செய்திகள் வரிசை (பக்கம் 14)
Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர் இது புதிது

Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) ஆகும். இப்படம் ஹைபர் லூப் வகைமையைச் சார்ந்த த்ரில்லராக உருவாகியுள்ளது. கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி […]

29/08/2024 Dinesh R
போகுமிடம் வெகுதூரமில்லை – திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டம் இது புதிது

போகுமிடம் வெகுதூரமில்லை – திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டம்

ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் போகுமிடம் வெகு தூரமில்லை ஆகும். இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்கில் ஓடிக்வ்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களைக் […]

28/08/2024 Dinesh R
ஹிப் ஹாப் ஆதி | கோவை இசைக்கச்சேரி | செப்டம்பர் 8 இது புதிது

ஹிப் ஹாப் ஆதி | கோவை இசைக்கச்சேரி | செப்டம்பர் 8

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் ஐகானாகக் ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் (Return Of The Dragon)” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. டார்க் என்டர்டெயின்மென்ட், ராஜ் மெலடிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மிகப் பிரம்மாண்டமான முறையில், கோயம்புத்தூரின் மிகப்பெரிய கொடிசியா மைதானத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமிழக சுயாதீன இசைத்துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ்த் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் […]

24/08/2024 Dinesh R
கொட்டுக்காளி விமர்சனம் இது புதிது

கொட்டுக்காளி விமர்சனம்

கூழாங்கல் படத்தினை இயக்கிய P.S.வினோத்ராஜின் இரண்டாவது படம். முதற்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவா தயாரித்திருந்தனர்; இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடகக்ஷன்ஸில் இயக்கியுள்ளார். வழக்கமான வணிக, மசாலா படங்களைத் தவிர்த்து பார்வையாளர்களின் சிந்தனையைக் கோரும் படங்களை எடுப்பதற்காகவே இயக்குநருக்கு பாராட்டுக்கள்.  கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள் கொள்ளலாம். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மீனாவை சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர் மீனாவின் பெற்றோரும், பாண்டியின் குடும்பத்தினரும். மீனாவின் முறைமாமன் பாண்டி ஆவார். வீட்டிலிருந்து கிளம்பி சாமியாரின் இருப்பிடம் வரையிலான […]

23/08/2024 Dinesh R
வாழை விமர்சனம் இது புதிது

வாழை விமர்சனம்

வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். […]

23/08/2024 Dinesh R
தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி இது புதிது

தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி

(தங்கலான் விமர்சனத்தில், ரஞ்சித்தின் அரசியலில் முரண் உள்ளதென்ற கூற்றுக்கு வந்த எதிர்வினையே இக்கட்டுரை.) //தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலையே சுய பகடி செய்கிறது. // படத்தில், தங்கம் என்பது ஓர் உருவகமாகக் (Metaphor) கையாளப்பட்டுள்ளது. தங்கம் என்பது இங்கே பெளதீக வடிவத்தில் இருக்கும் […]

22/08/2024 Dinesh R
சாலா விமர்சனம் இது புதிது

சாலா விமர்சனம்

விட்னெஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களைத் தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது. ஒரு பாருக்கான (Bar) போர் என்பதுதான் படத்திம் டேக்-லைன். படத்தின் ஒரு வரிக்கதையும் அதுவே! குணாக்கும் தங்கதுரைக்கும் இடையேயான தகராறில் ராயபுரம் பார்வதி பார் இழுத்து மூடப்படுகிறது. குணாவின் வளர்ப்புத் தம்பியான சாலா, பார்வதி பார் அண்ணனுக்குத்தான் என சபதம் எடுக்கிறார். இருபத்து மூன்று வருடங்களிற்குப் பிறகு, பார்வதி பார் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வென்றது குணாவா, தங்கதுரையா என்பதே படத்தின் முடிவு. […]

22/08/2024 Dinesh R
போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம் இது புதிது

போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

அன்பே சிவம், மாநகரம், அயோத்தி முதலிய படங்கள் வரிசையில், சக மனிதனுக்கு ஒன்றெனில் உதவ முன்வரவேண்டும் என்ற கருத்துடன் வெளிவந்துள்ள படம். படத்தைத் தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு வாழ்த்துகள். அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துக் கொண்டு செல்கிறார். அடிக்கடி நின்றுவிடும் தனது வண்டியைத் தள்ளுவதற்காக நளினமூர்த்தியை ஏற்றிக் கொள்கிறார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் குமார். அச்சிக்கலில் இருந்து […]

21/08/2024 Dinesh R
பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது அயல் சினிமா

பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘பிரபாஸ்ஹனு’, ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது. கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக ‘பிரபாஸ் ஹனு’ எனும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். இந்தக் கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு […]

20/08/2024 Dinesh R
“பிரியங்கா மோகன் தான் நேச்சுரல் ஸ்டார்” – நானி | சூர்யா’ஸ் சாட்டர்டே அயல் சினிமா

“பிரியங்கா மோகன் தான் நேச்சுரல் ஸ்டார்” – நானி | சூர்யா’ஸ் சாட்டர்டே

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் “சூர்யா’ஸ் சாட்டர்டே” எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘நேச்சுரல் […]

18/08/2024 Dinesh R
வேதா விமர்சனம் இது புதிது

வேதா விமர்சனம்

“சூத்திரர்கள் ஏன் காலில் உருவானார்கள்?” – கல்லூரி மாணவி வேதா. “அதான் பெரியய்யா சொன்னாரே! அதெல்லாம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்டதுன்னு” – வேதாவின் அக்கா. “அப்புறம் ஏன் சட்டத்தைச் சொல்லித் தர்றாங்க? சமத்துவம்னு பேசுறாங்க?” ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரரும், நூற்றைம்பது கிராமங்களுக்குத் தலைவருமான பெரியய்யா என்றழைக்கப்படும் ஜிதேந்தர் பிரதாப் சிங் ஒரு மாமன்னன் போல் வலம் வருகிறார். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அனைவரும் முன்னேற வேண்டும், ஆனால் மற்ற சமூகத்தினரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமுடையவர். […]

16/08/2024 Dinesh R
தங்கலான் விமர்சனம் இது புதிது

தங்கலான் விமர்சனம்

சார்பட்டா பரம்பரையின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ் பிரபாவும், பா. ரஞ்சித்தும் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாகவே பார்வையாளர்களிடம் நிலவியது. ‘மாய எதார்த்தம் (Magical Realism)’ வகைமையைச் சேர்ந்த படம் என இசை வெளியீட்டின் போது, எதிர்பார்ப்பில் எண்ணெயை ஊற்றினார் தமிழ் பிரபா. அத்தனைக்கும் ஆசைப்படு என்கிற ஜக்கி வாசுதேவின் புத்தகத் தலைப்புதான், தங்கலான் படத்தின் மையச்சரடு. நாடாளும் மன்னன், ஆங்கிலப் பேரரசின் அதிகாரி, எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அத்தனை பேரும் தங்கத்திற்கு ஆசைப்படுகின்றனர். […]

16/08/2024 Dinesh R
ரகு தாத்தா விமர்சனம் இது புதிது

ரகு தாத்தா விமர்சனம்

ஹிந்தித் திணிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. திராவிட இயக்கத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவராக கதையின் நாயகி வலம் வருகிறார். க.பா. எனும் கயல்விழி பாண்டியன் ஓர் எழுத்தாளருமாவார். தனது தாத்தாவிற்குப் புற்றுநோய் என்பதாலும், அவரது கடைசி ஆசை தனது திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்பதாலும், திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் கயல்விழி. ஆனால், தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் பசு தோல் போர்த்திய புலி என்றுணர்ந்து, எப்படியாவது கல்யாணம் தானாகவே நிற்கவேண்டும் எனப் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறுகின்றதா […]

16/08/2024 Dinesh R
கவுண்டம்பாளையம் விமர்சனம் இது புதிது

கவுண்டம்பாளையம் விமர்சனம்

ஓரு சிங்கத்தைக் கொளுத்தி விடுகின்றனர். அது எரிச்சல் தாங்காமல் ஆக்ரோஷமாக ஓடி வந்து கவுண்டம்பாளையம் என்ற தலைப்பில், வலி வேதனை கதறலுடன் பாய்கிறது. இப்படித் தலைப்பிலேயே வன்முறை தொடங்கிவிட, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அமர்ந்தால், பசுபதி மே/பா. ராசாக்காபாளையம் படத்தில் இருந்து இன்ஸ்பையராகி முதற்பாதியை ஒப்பேற்றியுள்ளார். ரஞ்சித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘குழந்தை’ ஆகும். வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத வடிகட்டின அப்பாவி. அவர் உடன் வேலை செய்யும் சேச்சி சினுங்கலான குரலில், ‘வா பிசையலாம்’ […]

12/08/2024 Dinesh R
அந்தகன் விமர்சனம் இது புதிது

அந்தகன் விமர்சனம்

அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். ‘அந்தாதுன்’ எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் […]

09/08/2024 Dinesh R