Shadow

இது புதிது

ராயர் பரம்பரை விமர்சனம்

ராயர் பரம்பரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பரம்பரை பரம்பரையாக நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான் ராயர் பரம்பரை திரைப்படத்தின் கதை. ஒரு முனையில் காதல் பிடிக்காத அப்பா, க மறுமுனையில் காதலிக்கும் மகள், சண்டை, பிரச்சனை, இறுதியில் சுபம். இதுதான் ராயர் பரம்பரை. பரம்பரைக்கே பழக்கப்பட்ட கதையாக இருப்பது ஒன்றும் ஆகப் பெரிய தவறில்லை. ஆனால் அந்தக் கதை சுவாரசியமும் இல்லாமல், உணர்வோடும் ஒன்றாமல், சிரிக்கவும் வைக்காமல் அலைக்கழிப்பதைத் தவிர்த்திருக்கவேண்டும். கதை வலுவில்லாமல் இருக்கும் போது, அதன் திரைக்கதையாவது வலுவாக நின்று கதையைத் தாங்க வேண்டும். இப்படத்திலோ திரைக்கதை எங்கே போகிறது என்றே தெரியாமல் ஏதோ ஒரு திசையில் போய்க் கொண்டிருக்கிறது. முதற்பாதி முழுவதும் நாயகன் - நாயகி இருவரும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள். நாயகன் கழுகு கிருஷ்ணாவைக் காதலிப்பதாக சொல்லி அவரின் இரண்டு தோழிகள் லூட்டி அடிக்கிறார்கள். தங்கை ஓடிப் போனதால் காதலே பிடிக்காத ராயரா...
பம்பர் விமர்சனம்

பம்பர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பம்பர் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது. பம்பர் ப்ரைஸ் தானே. பல்வேறு விதமான பம்பர் ப்ரைஸ் இருக்கின்றன. ஆனால் லாட்டரியின் பம்பர் ப்ரைஸுக்கு தனி மவுசு. கூவிக் கூவி மூலை முடுக்கெல்லாம் லாட்டரி சீட்டை விற்ற காலம் 2003ஆம் ஆண்டோடு தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்னும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் தடையின்றி இயங்கி வருகின்றன. குறிப்பாக நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டை அரசாங்கமே ஏற்று நடத்தி வருகிறது. எதற்கு இந்தத் தகவல் என்றால், படத்தின் டைட்டிலைப் போல், படத்தின் மையமே அந்தப் பம்பர் தான். பம்பர் பரிசாக விழும் 10 கோடி ரூபாய் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றது, அதே நேரம் ஒரு மனிதனை மட்டும் மாற்ற முடியாமல் எப்படி அவன் காலடியில் அது தோற்கிறது என்பதே இந்த “பம்பர்” திரைப்படத்தின் கதை. மேற்சொன்ன விசயங்களை வைத்தே நீங்கள் நூல் பிடித்தாற் போல் இதுதான் கதையென்...
மாமன்னன் விமர்சனம்

மாமன்னன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ...
ரெஜினா விமர்சனம்

ரெஜினா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில், ரெஜினாவின் கணவரும் வங்கி ஊழியருமான ஜோ கொடூரமாகக் கொல்லப்படுகிறார். ஒரே நாளில் தன் வாழ்வை ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கின கொள்ளையர்களைத் தேடிச் சென்று எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் ரெஜினா படத்தின் கதை. ரெஜினாவாக சுனைனா நடித்துள்ளார். மீனுக்காக ஒற்றைக் காலில் காத்திருக்கும் கொக்கு போல் பழி வாங்குவதற்கான தருணத்தை எதிர்நோக்கிப் பொறுமையாகக் காத்துள்ளார் சுனைனா. ரிது மந்தாராவைக் கடத்தி, நிவாஸ் ஆதித்தனை மிரட்டி தன் பழிவாங்கும் பயணத்தை நகர்த்துகிறார் சுனைனா. நண்பர்கள் உதவி செய்கின்றனர் எனக் காட்டப்பட்டாலும், சுனைனா தன் இரையை மிகச் சுலபமாக நெருங்குவது திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது. பவா செல்லத்துரை, டெர்மினேட்டர் அர்னால்டை நினைவுறுத்துவது போல் ஆடாமல் அசையாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வசனம் பேசுபவராக உள்ளார். ‘ஐயோ, பாவம்’ என அவர் இரக்கப்பட்டால...
பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கண் பார்வைக் குறைபாடுள்ள நாயகனுக்கு, தன் குடும்ப உறவைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொலையாளி யார், கொலையாளியை எப்படிக் கண்டுபிடித்தார், குடும்ப உறவுக்கும் கொலையாளிக்கும் என்ன பகை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை. படத்தின் ஆரம்பக் காட்சியில் ஆட்டோவில் பயணம் செய்யும் விக்ரம் பிரபு நடுரோட்டில் பைக் பஞ்சர் ஆனதால் தவித்துக் கொண்டிருக்கும் ஓர் இளம் கணவன் மனைவிக்கு லிஃப்ட் கொடுத்து உதவுகிறார். ஆட்டோவில் ஏறும் அந்த இளம்பெண்ணோ விக்ரம் பிரபுவை மயக்கமடையச் செய்ய முயற்சி செய்கிறார். ‘ஏன்?’ என்கின்ற விறுவிறுப்போடு படம் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் திரைக்கதையைச் சுவாரசியமாக்குகின்றன. ஒரு கட்டத்தில் அவர்கள் குறி வைப்பது விக்ரம் பிரபுவையா இல்லை அவரது வீட்டில் உள்ளவர்களையா என்கின்ற குழப்பம் வரும் ...
அஸ்வின்ஸ் விமர்சனம்

அஸ்வின்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஒரு உலகில் கண் மூடினால் மறு உலகில் கண் திறக்கலாம்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த உலகில் வரக்கூடிய ஒரு பிரச்சனையை வேறு ஒரு உலகில் சென்று தீர்க்க வேண்டும். அதற்கு இந்த உலகில் உயிர்விடவேண்டும். அப்போது தான் அந்த உலகில் உயிர்பெற முடியும். இப்படியான ஒரு சூழல் நாயகன் வசந்த் ரவிக்கு வருகிறது. இது படத்தின் பின்பாதியில் வரக்கூடிய கதை. அப்போ முன்பாதி கதை? லண்டனில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அப்பால் ஒரு பாழடைந்த மேன்சன் இருக்கிறது. அந்த மேன்சனுக்குள் பல அமானுஷ்யங்களும் கண்டுபிடிக்கப் படாத பிரச்சனைகளும் இருக்கின்றன. அந்த மேன்சனுக்குள் செல்கிறார்கள் வசந்த் ரவி டீம். காரணம்? ஒரு பிரபலமான யூட்யூப் தளத்திற்காக. சென்றவர்களுக்கு என்னானது என்பதே முன்பாதி கதை. முதலில் சொன்ன அந்த மறு உலகக் கதையே இவர்களின் மேன்சன் பிரவேசத்தால் தான் நிகழ்கிறது. ஒரு ஸ்கிர...
தலைநகரம் 2 விமர்சனம்

தலைநகரம் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைநகரம் சென்னையை மூன்று ரெளடிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மூவருக்குமே தான் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையை ஆள வேண்டும் என்பது ஆசை. இதனால் ஒருவரையொருவர் போட்டுத் தள்ளத் துடிக்கின்றனர். அதே நேரம் பழைய ரெளடியான ‘ரைட்டு’, ‘இந்தக் கத்தி, இரத்தம் இதெல்லாம் வேண்டாம்’ என்று ஒதுங்கி, மாலிக் பாய் (தம்பி இராமையா) உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். ஆனால் காலமும் சூழலும் ரைட்டைத் தன் கையில் மீண்டும் கத்தி தூக்க வைக்க, ஒட்டு மொத்த சென்னையும் அவன் கட்டுப்பாட்டில் வருகிறது. அது எப்படி என்பதைச் சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறது தலைநகரம் 2. படத்தின் மிகப் பெரிய பலமே அந்த மூன்று ரெளடிகளும், அவர்களின் பின்கதையும் தான். நஞ்சப்பா, வம்சி, மாறன் என மூன்று ரெளடிகள். இந்த மூன்று ரெளடிகளுக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திர வடிவமைப்பு. நஞ்சப்பா 5 - 6 இளம் ரெளடிகளை வைத்துக் கொண்டு தொழி...
அழகிய கண்ணே விமர்சனம்

அழகிய கண்ணே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை எழுதிக் கொடுத்து கரெக்ட் செய்து காதலிக்க தொடங்கியவுடன் சரி இது காதல் கதைதான் என்று தீர்மானித்திற்குத் தள்ளியது படம். இடையில், அறிமுக நாயகன் லியோ சிவகுமார் இயக்குநர்களுக்கு கடிதமாக எழுதித் தள்ளி இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகப் போகிறேன் என்று சென்னை கிளம்புகிறான். லியோ சிவகுமார், திண்டுக்கல் லியோனியின் மகனாவார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். அங்குப் போன...
தண்டட்டி விமர்சனம்

தண்டட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை. இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி. 57 வயது தங்கப் பொண்ணாக ரோகிணி. குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பைக் கொடுப்பதில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் செவ்வனே செய்திருக்கிறார். சிறு வயது ரோகிணி கதாபாத்திரத்தி...
பொம்மை விமர்சனம்

பொம்மை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை. ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, பொம்மையைத் தன்னோடு வைத்துக் கொள்ள எஸ்.ஜே. சூர்யா போராட, எப்படியான முடிவு அமைந்தது என்பதே படத்தின் கதை. எஸ்.ஜே. சூர்யா நல்ல நடிகர் என்பதைப் பல படங்களில் நிறுவியிருக்கிறார். அதே போல் கொஞ்சம் ஓவராக நடிப்பார் என்பதையும் சில படங்களில் நிறுவியிருக்கிறார். அந்தச் சில படங்களில் ஒன்றாக இந்தப் படமும் அமைந்தது ரசிகனின் துரதி...
சான் டி-யின் ‘லார்ட் போயட்ரி (Lord Poetry)’ இசை ஆல்பம்

சான் டி-யின் ‘லார்ட் போயட்ரி (Lord Poetry)’ இசை ஆல்பம்

இது புதிது
சினிமா படங்களின் பாடல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்குமோ அந்த அளவிற்கு, தற்பொழுது ஆல்பம் பாடல்களும் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சான் டி என்று அறியப்படும் இசைக் கலைஞரின் புதிய ஆல்பம் வெளியாகிப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “லார்ட் போயட்ரி” (Lord Poetry) எனும் தலைப்பில் வெளியாகி இருக்கும் சான் டி-யின் புதிய ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. அடென்டன்ஸ், மை நேம் இஸ், கழிவரா, மம்பிள், நோ ஜோக் மற்றும் லார்ட் போயட்ரி என ஆறு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சப்லையர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இருக்கும் லார்ட் போயட்ரி ஆல்பத்தின் மிக்சிங் பணிகளை க்ரோனிக்ஸ், மாஸ்டரிங் பணிகளை ஆகாஷ் ஷ்ரவன், கவர் ஆர்ட்-ஐ மிக்கியும் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆல்பத்தை ஒட்டுமொத்தமாக கே.ஒய்.என். ரெக்கார்ட்ஸ் லேபல் செய்திருக்கிறது. இசைக் கலைஞரான சான் டி, அல்தாஃப்...
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம்

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன ரோபாட்ஸ்க்கு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (உருமாறிகள்) எனப் பெயர். வாகனங்களாக உருவெடுக்கும் உருமாறிகளுக்குப் பெயர் ஆட்டோபாட்ஸ். இந்தப் படத்தொடரின், நாயகர்கள் இந்த ஆட்டோபாட்ஸே! இந்தப் பாகத்தில், உலகைக் காக்க ஆட்டோபாட்ஸ்களுடன் இணையும் புது உருமாறிகளாக மேக்ஸிமல்ஸ் அறிமுகமாகின்றனர். கொரில்லா, புலி, பறவை போன்ற மிருகங்களாக மாறும் ரோபாட்கள் அவை. கிரகங்களை உண்டு கொழிக்கும் இருள் கடவுளான யுனிக்ரான், மேக்ஸிமல்ஸின் கிரகத்தை அழித்து உண்கிறது. யுனிக்ரான் கையில், ‘ட்ரான்ஸ்வார்ப்’ எனும் நவீன தொழில்நுட்பத் திறவுகோல் கிடைக்கக் கூடாதென மேக்ஸிமல்ஸ் அதை எடுத்துக் கொண்டு மறைகின்றனர். ட்ரான்ஸ்வார்ப் கிடைத்தால், காலத்தையும் தூரத்தையும் வளைத்து, பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுதும் வேண்டுமானாலும் செல்லக்கூடும். மேக்ஸிமல்ஸ், ட்ரான்ஸ்வார்பைப் பூமியில் கொண்ட...
போர் தொழில் விமர்சனம்

போர் தொழில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை. காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணி என்ன, கொலைகளை நிகழ்த்திய கர்த்தா யார் என சரத் - அசோக் செல்வன் கூட்டணி நூல் பிடித்துக் கண்டுபிடிப்பதே படத்தின் முழுக்கதையும். நாடி நரம்பெல்லாம் க்ரைம் டிப்பார்ட்மென்ட் காவல் அதிகாரி மேனரிசம் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படி நடிப்பில் அசரடிக்க முடியும். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சரத்குமார...
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“என் படத்துல, ஒண்ணு, நாயகன் கத்திப் பேசணும். இல்லன்னா, கத்தியால பேசணும்.” - இயக்குநர் முத்தையாநீதி, நேர்மை, நியாயம். அதற்காக அடி, வெட்டு, குத்து என களத்தில் இறங்கி வெளுக்கிறார் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். நீதி, நேர்மைக்காக அடிக்கிறார் எனப் பார்த்தால், ரிஷி ரித்விக்கை அடித்துவிட்டு அவரது கூலிங் கிளாஸை எடுத்துக் கொள்கிறார். ‘என்னய்யா உன் நியாயம்?’ என யோசித்தால், ‘என்னை அடிச்சுட்டான்’ என ரிஷி ரித்விக்கும் அவரது அப்பாவை மறுபடியும் சண்டைக்கு அழைத்து வருகிறார். 'என்னங்கடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!' என பார்வையாளர்கள் நெற்றியைச் சுருக்க, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமோ அவரையும் சீரியசாகப் போட்டு வெளுக்கிறார். அவர் ஃப்ரேமில் சண்டை செய்து கொண்டேயிருக்க, படத்தில் மூன்று மூத்த வில்லன்கள், அவர்களது வாரிசுகளாக ஏழு இளைய வில்லன்கள். தமிழ்ச்செல்விக்கு 100 ஏக்கர் நிலமும், 6 பெரிய ...
மிஷன் இம்பாசிபிள்: ஆக்‌ஷன் ரெக்கோனிங்

மிஷன் இம்பாசிபிள்: ஆக்‌ஷன் ரெக்கோனிங்

இது புதிது
உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் க்ரூஸின் 'மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கோனிங்' படம் ஜூலை 14 ஆம் தேதி அன்று வெளியாகிறது. இந்தியாவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. பாராமெளன்ட் பிக்சர்ஸ், ஸ்கைடான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து டாம் க்ரூஸும் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.   இப்படத்தொடர், 1996 இல் தொடங்கி, அதன் 7 ஆவது பாகம் தற்போது 2023 இல் வெளியாகவுள்ளது. 'டெட் ரெக்கோனிங்' என்பது நகரும் பொருளின் இருப்பிடத்தை (Position) கணக்கீடு செய்யும் முறையைக் குறிக்கும் பதமாகும். முக்கியமாகக் கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் சொற்றொடராகும். இப்படத்தின் கதை, ப்ரூஸ் கெல்லரின் தொலைக்காட்சித் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் தொடர் படங்கள் எதுவுமே இதுவரை அக்ஷனில் ஏமாற்றியதில்லை. ட்ரெய்லரில் காண...