
அகண்டா 2: தாண்டவம் | 2025 ஆம் ஆண்டின் அதிரடி பக்திப்பாடல்
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு நான்காவது முறையாக இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்ஷன் திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்” இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா, கோபிசந்த் ஆசம்டா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. நேற்று முழுப் பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இசையமைப்பாளர் எஸ்.தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம்.-கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில்...















