32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

கட்டுரை

337 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 20 / 23
செய்திகள் வரிசை (பக்கம் 20)
18 தீக்குச்சிகளும் யட்சியும் கட்டுரை

18 தீக்குச்சிகளும் யட்சியும்

ஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம். ப்ரிவியூ தியேட்டரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டையும் இயக்கியது மணிமாறன் எனும் திரைப்படக் கல்லூரி மாணவர். அரங்கம் நிறைந்திருந்தது. நின்று கொண்டும் சிலர் பார்த்தார்கள். இதற்கே படத்தை இரண்டு முறை திரையிட்டனர்.  முதற்படம் 18 STICKS. முதலில் ஆங்கிலக் குறும்படமோ என நினைத்தேன். நல்லவேளையாக தமிழ்ப்படம். அதுவும் ஈழம் சம்பந்தமான படம். 2009 இல் தன் குடும்பத்தை இழந்த யோகன், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்படும் இடத்தில் […]

08/12/2013 Dinesh R
சுவிட்சர்லாந்து கட்டுரை

சுவிட்சர்லாந்து

மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான். ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் […]

21/11/2013 Dinesh R
பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே! கட்டுரை

பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!

சாதிய உள்முரண்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தான் எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ மீது எழுந்த குற்றச்சாட்டு.  அதற்கு, “சமூகத்தின் மொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிற பறையர் சமூகம், தனக்குக் கீழுள்ள வண்ணார், சக்கிலியர் இன சமூகங்களை ஒடுக்குகிற ஓர் ஆதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்பது உண்மை’ என பதிலுரைத்தார் இமையம். நாவல் வெளிவந்த ஆண்டு 1994 ஆகும்.   நாவலின் பிரதான கதாபாத்திரம் ஆரோக்கியம். அவர் வண்ணாத்தி. பறையர் சமூகத்தை நம்பிப் பிழைப்பவர். அவருக்கான கூலிகள் […]

29/10/2013 admin
காவு வாங்கும் புகையிலை கட்டுரை

காவு வாங்கும் புகையிலை

அக்டோபர் 27. முகேஷ் ஹரானே இறந்த தினம். இன்றோடு நான்காண்டுகள் நிறைவாகிறது. அவர் இறக்கும் பொழுது அவர் வயது 24. திரைப்படங்களில் வரும் நாயகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்லர் அவர். இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று, தனது தம்பியைப் படிக்க வைத்துள்ளார். திணறடிக்கும் ஏழ்மை நிலையிலும், விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு பணமேதும் வாங்கிக் கொள்ளவில்லை முகேஷ். இன்று நாயகர்களாகத் திரையில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களை விட மிகவும் உயர்ந்தவர் முகேஷ். ஓர் ஆண்டுக்கு சுமார் 1,30,000 பேர் இந்தியாவில், வாய் […]

27/10/2013 Dinesh R
வட அமெரிக்காவில் இலையுதிர்காலம் கட்டுரை

வட அமெரிக்காவில் இலையுதிர்காலம்

இந்த வர்ணஜாலங்களைக்கண்டுகளிக்க ஏதுவாகப்பலரும் பிரயாணம் செய்யும் வகையில் மலையோர ரயில்களும், மலைப்பிரதேசங்களும் ஆயத்தமாக இருக்கும். Vermont, NY மாநிலங்களைச் சுற்றி இருக்கும் மலைச் சூழந்த காடுகளின் அழகை ரசிக்க வேண்டிப் பலரும் படையெடுக்கும் நேரமிது. ஒவ்வொரு மரத்திலும் பல வண்ண வண்ண இலைகள். அவை தரையெங்கும் உதிர்ந்துக் கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் அழகே அழகு! இந்தப் பருவத்தில் வரும் மழையும், காற்றும் இலைகளை உதிர வைத்து இலையுதிர்காலம் முடிந்தது, பனிக்காலத்திற்குத் தயாராகுங்கள் என்று மொட்டையாய் நிற்கும் […]

15/10/2013 Dinesh R
இனியாவது ஒரு விதி செய்வோம்! கட்டுரை

இனியாவது ஒரு விதி செய்வோம்!

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலம் எல்லாம் மலையேறி, இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் ஒருவரின் வருமானத்தில் குழந்தைகளின் படிப்பு, குடும்பச் செலவுகள், விலைவாசி உயர்வு, மற்றும் இன்ன பிற செலவீனங்களை சமாளிப்பது கடினம் என்றாகி விட்டதால் கணவன் மனைவி என இருவருமே வேலைக்குப் போக வேண்டிது அவசியமாகிறது.  இப்படி வேலைக்குப் போகும் பெண்களில் இரண்டு வகையினர். ஒரு சாரார் தாங்கள் கற்ற கல்வியின் பயனை அடைய வேண்டி, […]

30/09/2013 Dinesh R
அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே! கட்டுரை

அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

  கல்வியையோ, செல்வத்தையோ தேடி வெளிநாடு வருகிறவர்கள், வந்த வேலை முடிந்தவுடன் தாயகம் திரும்புகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் நிதர்சனம். படிக்க வந்தவர்கள் வேலை தேடி செட்டிலாகிறார்கள். வேலை கிடைத்தவர்கள்  மெல்ல மெல்ல வெளிநாட்டு வாழ்க்கையில் உழல ஆரம்பித்து,  இன்னும் சில வருடம் சில வருடம் எனத்  தள்ளிப் போட ஆரம்பித்து, திருமணம் முடியட்டும் எனக்  காத்திருந்து,  பிறகு குழந்தை, அப்பா, அம்மா, மாமனார், மாமியார் விஜயம் எல்லாம் முடிந்த பிறகு, சரி! ஊருக்குப் […]

18/09/2013 Dinesh R
மேகமலை ஒரு பயணம் கட்டுரை

மேகமலை ஒரு பயணம்

சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.  அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான், மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன். அனைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம். கடல் மட்டத்திலிருந்து […]

24/08/2013 Dinesh R
இக்கரைக்கு அக்கரை பச்சை! கட்டுரை

இக்கரைக்கு அக்கரை பச்சை!

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. […]

06/08/2013 Dinesh R
கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை கட்டுரை

கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

“நம்மிடம் ஒரு பொருள் இருந்து, அதை நாம் உபயோகிக்கா விட்டால்.. அந்தப் பொருள் நம்மிடம் இல்லாததற்கு சமம்.”  இந்த அற்புத தத்துவத்தை சொன்னது எந்தவொரு மேதையும் இல்லை. ஏவாளை வழிக்குக் கொண்டு வந்து ஆப்பிளைச் சாப்பிட வைக்க சாத்தான் சொன்னது. அதையே இப்ப நான் உங்களுக்கு சொல்கிறேன். நம்மிடம் உள்ளது என்ன? “என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்” என நான் பாட்டாவே படிச்சிடுவேன். சரி வேணாம் விடுங்க. சித்தரியல் என்ற அரிய விஷயம் நம் முன்னோர்கள் நமக்கு […]

29/07/2013 Dinesh R
மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி? கட்டுரை

மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

எங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து படி வீடு எப்படி கட்டுறதுன்னு கருத்து சொல்ல முடியுமா? ஆனா ஒரு கவிஞனா இருந்தா எதுக்கு வேணும்னாலும் கருத்து சொல்லலாம். சாதி பிரச்சினையில இருந்து சாம்பார்ல உப்பு குறைஞ்சா என்ன பண்றதுங்கற வரைக்கும் எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற ஒரே தகுதி.. இந்தக் கவிஞர்களுக்குத்தான் இருக்கு. அதுனால நீங்களும் கவிஞர் ஆகறீங்க. எப்படி? அதுக்குத்தான் இந்தப்பதிவு. முதலில் கவிதை எழுதனும்னு தீர்க்கமா ஒரு முடிவு பண்ணுங்க. ஆமா கவிதை […]

22/07/2013 Dinesh R
இது நம்ம ஊருங்க!! கட்டுரை

இது நம்ம ஊருங்க!!

நம்ம ஊர். அது என்ன ஊர்?  “கோயம்புத்தூர்.”  கோயம்புத்தூரின் பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு? நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன். கன்னியரின் இதழழகை கோவையென்பார்! கனிமழலை முழுவடிவை கோவையென்பார்! தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு. திறமான கவிதொகுத்த கோவை யுண்டு. இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்? எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்? என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர் இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக! வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின் மன்னருக்கு மக்களென இருவர் வந்தார். செஞ்சரத்து […]

11/07/2013 Dinesh R
கற்பழிக்கப்படும் மைனர்கள் கட்டுரை

கற்பழிக்கப்படும் மைனர்கள்

2007 – 5,045 2008 – 5,446 2009 – 5,336 2010 – 5,484 2011 – 7,112 2012 – 8, 541 கடைசி ஆறாண்டில், இந்தியாவில் கற்பழிக்கப்பட்டுள்ள மைனர்களின் எண்ணிக்கை என National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கை இது. *டெல்லியில் மட்டும் எப்பொழுதும் 300க்கு குறையாமல் போலீசாரிடம் வழக்குகள் பதியப்படுமாம். 2012 இல் 415 வழக்குகள் பதியப்பட்டிருக்காம். *எப்பொழுதும் மத்தியப் பிரதேசம் தான் முதலிடமாம் (2008 இல் மட்டும் […]

19/06/2013 Dinesh R
சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்! கட்டுரை

சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்!

சித்தமருத்துவம் சித்தர்களால் பாடல்களாகப் பாடப்பட்டு தலைமுறை தலைமுறையாக கொண்டு வரப்பட்டது. அது பின்னாளில் குடும்ப சொத்தாக கருதப்பட்டு, சுயநலத்துடன் மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதால் மெல்ல அழியத் தொடங்கியது. பின்னர் நல்லோர் சிலரால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சித்தமருத்துவ நூல்கள் பாதுகாக்கப்பட்டதுடன், அந்தத் தகவல்கள் மக்கள் மத்தியில் சென்றடையவும் தொடங்கியது. ஆயினும் இன்றும் கூட, சிலர் தங்களது சொத்துப்போல் சித்தமருத்துவத்தினைக் கருதுவது சித்தமருத்துவதிற்கு ஏற்பட்ட சாபக்கேடாகும். சித்த மருத்துவ விழிப்புணர்வை மக்களிடையே இணையம் மூலமாக ஏற்படுத்தும் பதிவர்கள் […]

07/06/2013 Dinesh R
ஐவரிட்ட ஞானம் கட்டுரை

ஐவரிட்ட ஞானம்

மு.கு.: கடவுள் வந்திருந்தார் || சுஜாதா || பாரதி மணி || நடிப்பனுபவம் (!?) விதியாகப்பட்டது வலியது. சிவனேயென அனைத்துக்கும் பார்வையாளனாக இருந்த என்னை கவிஞர் பத்மஜா நாராயணன் பாரதி மணியின் நாடகத்தில் கோர்த்து விட்டு விட்டார். ‘ஒன்னுமில்ல தினேஷ். சின்னதா மாப்பிள்ளை கேரக்டர். அஞ்சாறு வசனம் தான். சிரிச்சுட்டே இருக்கணும். உங்களால் பண்ண முடியாதா? சும்மா நடிக்காதீங்க!!’ என்றார் நான் நடிக்க மறுத்த பொழுது. அவருக்கென்ன அச்சு அசல் மாமியாய் கலக்கி விட்டார். முதல் நாள் […]

29/04/2013 admin