சமூகம்நீட் எனும் அவலட்சணம்
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இப்போது அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவச் செல்வத்திடம் நீட் கோச்சிங் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பிள்ளை படித்தது தமிழகத்தின் டாப் 10 பள்ளிகளில் (யார் சொன்னா – அவங்களே சொல்லிப்பாங்க) ஒன்றில். பதிலைக் கேட்டு நொந்தது தான் மிச்சம். 40 நாட்கள். வேதியியல், உயிரியலில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் திரும்பத் திரும்பத் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்களாம். இயற்பியலைப் படிக்கவே தேவையில்லையாம் (நெகடிவ் மார்க்கைத் தவிர்க்க அந்த […]














