
கூலி – செப்டம்பர் 11 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில்
லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய கூலி படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, செளபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரச்சிதா ராம், கண்ணா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் கூலி படத்தைத் தமிழ் மொழியில், மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளிலும், ப்ரைம் வீடியோவில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.விசாகப்பட்டினம் துறைமுகத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், முன்னாள் கூலியாக இருந்த தேவா (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்), தனது நண்பனின் சந்தேகத்திற்கிடமான மரணத்தை ஆராயும் போது கொடிய கடத்தல் கும்பலை எதிர்கொள்கிறார். அந்த விசாரணை அவரை ஒரு ரகசிய மின்சார நாற்காலி, புதைந்த உண்மைகள், உள்ளார்ந்த துரோகங்களை வெளிப்படுத்த...