
சட்டமும் நீதியும் – 3 நாட்களில் 51 மில்லியன் நிமிடங்கள்
ஜீ5 வெளியீடாக ஜூலை 18, 2025 இல் வெளியான சட்டமும் நீதியும் தொடரில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தொடர் மூலம் நாயகனாகத் திரும்பியிருக்கிறார் சரவணன்.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ், இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடர், வெளியான மூன்று நாட்களுக்குள் 51 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மக்களைப் பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீ...