
#AA22xA6 அறிவிப்பு – 5 மில்லியன் பார்வையார்கள்
'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ, சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால் திரையரங்குகளுக்குச் சென்று சினிமாவைக் கொண்டாடும் இந்திய அளவிலான ரசிகர்களிடத்தில் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மிகப் பெரிய அளவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திர வெற்றிகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வரும் அல்லு அர்ஜுன், அட்லீ, சன் பிக்சர்ஸ் கூட்டணி #AA22xA6 எனும் திரைப்படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இவர்களின் இணைவு, இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான சினிமா ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் படத்தைப் பற்றிய அப்டேட்டைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
#A...