Shadow

Tag: அருண் விஜய்

வணங்கான் விமர்சனம்

வணங்கான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் வணங்கான் ஆகும். படத்திற்கும் அக்கதைக்கும் சம்பந்தமில்லை. தலைப்பை மட்டும் பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனிடம் அனுமதி கேட்டுள்ளார் இயக்குநர் பாலா. காது கேளாத, வாய் பேச முடியாத நாயகன், எவர்க்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத, வணங்காத அப்பழுக்கற்ற நல்ல முரடன் என்பதால், வணங்கான் எனும் தலைப்பு படத்திற்குச் சாலப் பொருந்துகிறது. சுனாமியால் பெற்றோரை இழந்தவர்கள் கோட்டியும், அவனது தங்கை தேவியும். முரடனான கோட்டிக்கு, ஒரு காப்பகத்தில் வேலை வாங்கித் தரப்படுகிறது. அக்காப்பகத்தில், குளிக்கச் செல்லும் கண்பார்வையற்ற பெண்களை மூவர் ஒளிந்து நின்று ரசிக்கின்றனர். கொதித்தெழும் கோட்டி, வழக்கமாக பாலா முன்மொழியும் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறான். பாவம் செய்தவனை வதம் செய்துவிடுவதே அந்த தர்மம்! ஒரு படைப்பாளனாகக் குறைந்தபட்ச அறம் கூட இல்லாமல், படத்தின் முதற்பாதியி...
மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன், பரத் போபண்ணா, அபிஹாசன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “மிஷன் சாப்டர் -1”.பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ மீது அதிகமான எதிர்பார்ப்புகள் குவிந்திருக்க, சத்தமில்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானதும், ஆங்காங்கே அடுத்து என்ன…? என்கின்ற எதிர்பார்ப்பை அழகாக படத்தின் திரைக்கதையில்  அடுக்கி ப்ரசண்ட் செய்திருக்கும் விதமும் படத்திற்கு பலமாக மாறியிருக்கிறது.ஆரம்பத்தில் என்னடா இது, நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற பரிதவிப்பைக் கொடுத்து கொஞ்சமாய் கலங்கவிட்டாலும், அடுத்தடுத்து வந்த காட்சிகளில் ஹீரோ ...
‘மிஷன் சாப்டர் 1’ திரைத் துறையில் எனக்கு புதிய இன்னிங்ஸ்” – நடிகை ஏமி ஜாக்சன்!

‘மிஷன் சாப்டர் 1’ திரைத் துறையில் எனக்கு புதிய இன்னிங்ஸ்” – நடிகை ஏமி ஜாக்சன்!

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தமிழ் திரையுலகில் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஏமி ஜாக்சன், ‘மிஷன் சாப்டர் 1’ மூலம் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் புரோமோக்களில் நடிகை ஏமி ஜாக்சனின் ஆக்‌ஷன் அவதாரம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஏமி பகிர்ந்துள்ளார்.ஏமி ஜாக்சன் கூறியிருப்பதாவது, "இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். இந்த கதாபாத்திரங்களின் தாக்கம் மிகவும் ஆழமானது. எந்தளவுக்கு தாக்கம் என்றால், திரைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். ...
”மிஷன் சாப்டர் 1ல் ஆக்‌ஷன் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை அல்ல” – அருண் விஜய்

”மிஷன் சாப்டர் 1ல் ஆக்‌ஷன் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை அல்ல” – அருண் விஜய்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)' டிரெய்லர் அவரது ஆக்‌ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறும்போது, ​​“எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். 'மிஷன் சாப்டர் 1' படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பெயருக்காக நாங்கள் எ...
”மிஷன் – சாப்டர்- 1 என்னை வேறுமாதிரி இப்படத்தில் பார்ப்பீர்கள்” – அருண் விஜய்

”மிஷன் – சாப்டர்- 1 என்னை வேறுமாதிரி இப்படத்தில் பார்ப்பீர்கள்” – அருண் விஜய்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, "படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது".நடிகர் ருத்ரன், "தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி".நடிகர் விராஜ், "இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி".நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது, "இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான் இத்...
யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

சினிமா, திரைச் செய்தி
அருண் விஜயும், இயக்குநர் ஹரியும் இணையும் யானை திரைப்படம், ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜயும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எடு...
ஓ மை டாக் விமர்சனம்

ஓ மை டாக் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அருண் விஜயின் மகன், மாஸ்டர் அர்னவ் விஜய் நாயகனாக அறிமுகமாகும் குழந்தைகளுக்கான படம். கண் தெரியா நாய்க்கும், சிறுவன் ஒருவனுக்குமான பந்தத்தை மையமாகக் கொண்டது படத்தின் கதைக்களம். சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை படம் உணர்த்தினாலும், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளினை அழுத்தம் திருத்தமாகப் படத்தின் இறுதியில் சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் முடித்துள்ளனர். வீட்டிலுள்ள சுட்டீஸ் குட்டீஸோடு பார்க்க வேண்டிய 'டிஸ்னி' பாணி கதை. வினயை டெம்ப்ளேட் வில்லனாக உபயோகிக்கத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. ஒரு நாயின் வரவு, எமோஷ்னலாக ஒரு குடும்பத்தை எப்படிப் பிணைக்கிறது என்றில்லாமல், சிறுவனுக்கும் நாயுக்குமான பந்தத்திலேயே நிலைகொண்டுள்ளது படம். அந்த பந்தம், ஹார்ஸ் ட்ரெயினரான அருண் விஜயின் சாமர்த்தியங்களையும் விஞ்சுவதாக உள்ளது. இயல்பு வாழ்க்கையில் சாத்தியமே இல்லாத பல விஷயங்கள் ஜ...
ஓ மை டாக் | 100 நாய்களுக்குப் பயிற்சி கொடுத்த ட்ரெய்னர் ராஜா

ஓ மை டாக் | 100 நாய்களுக்குப் பயிற்சி கொடுத்த ட்ரெய்னர் ராஜா

சினிமா, திரைத் துளி
‘ஓ மை டாக்’ படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணியாற்றியுள்ளனர் படக்குழு.அவ்வனுபவம் பற்றிப் பேசிய அருண் விஜய், “இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளது. ட்ரெய்னர் ராஜாவிற்கு ஒரு பெரிய நன்றி. மேலும் இயக்குநர் சரோவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார்” என்றார்.இயக்குநர் சரோவ் சண்முகம் பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம்.இந்தக் கணிப்புகளையும், நே...
ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிமுக குழந்தை நட்சத்திரம் அர்னவ் விஜய் பேசுகையில்,'' இந்தப் படத்தில் நடிப்பதற்...
ஓ மை டாக் | ‘அப்பா, நான், மகன்’ – அருண் விஜய்

ஓ மை டாக் | ‘அப்பா, நான், மகன்’ – அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
திரைப்படத்துறையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது ‘ஓ மை டாக்’ திரைப்படம். மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். தாத்தா, தந்தை மற்றும் மகன் என்ற நிஜமான உறவை இவர்கள் திரையிலும் சித்தரித்திருக்கிறார்கள். அருண் விஜய், ''இது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை. நான் கடந்த காலத்தில் என் அப்பாவுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமானது. தனது அப்பா மற்றும் தாத்தாவுடன் அறிமுகமாவது, அர்னவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருக்கும். இது எங்களால் மறக்க இயலாத ஒன்று'' என்றார். மேலும், படப்பிடிப்பு அனுபவம் குறித்து அவர் பேசுகையில், ''மிகவும் அருமை...
பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர்

பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்ஷன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் 'அருண்விஜய்யின் பார்டர்'. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் அருண் விஜயும் ஒருவர். 'அருண்விஜய்யின் பார்டர்' படத்திலும் துணிச்சல் மிக்க கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையு...
அருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்

அருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்

கேலரி, சினிமா
     View this post on InstagramTeam #AV31 Celebrated #Holi at #Agra after a Packed Schedule! @arunvijayno1 @ReginaCassandra @dirarivazhagan @stefyPatel #VijayaRaghavendra @SamCSmusic @editorsabu @SaktheeArtDir @reddotdzign1 @DoneChannel1 @shiyamjack @proyuvraaj #AV31HoliCelebration A post shared by இது தமிழ் (@ithutamil) on Mar 11, 2020 at 6:47am PDT
ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய்

ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
அருண் விஜய் தனக்கான அடையாளத்தைப் போராடி வென்றவர். தோல்விகளில் பாடம் கற்று, தொடர் வெற்றியைப் பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கைப் பாடம். சமீபமாக அவரைக் காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி 22 அன்று கோயம்புத்தூர் INOX திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்தார். அங்கு ரசிகர்கள் அருண் விஜயை நேரில் கண்டதில் உற்சாக மிகுதியில் கொண்டாடித் தீர்த்தனர். இது குறித்து, "கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய  நட்சத்திரங்களைக் கண்மூடித்தனமாகக் கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான ப...
மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை. Ground to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. காட்டில் தானொரு நரி எனச் சொல்லிக் கொள்ளும் அவர், அது போன்று குயுக்தியாக எதுவும் செய்வதில்லை. நாயகனைக் காதலிக்கவும், ஸ்லோ-மோஷனில் நடக்கவும், ஆரியனின் குழு உறுப்பினர் சத்யாவாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இன்னொரு குழு உறுப்பினர் வருணாக பாலா ஹாசன் நடித்துள்ளார். வில்லனின் குடோனைத் தாக்கும் மிக முக்கிய பணியை இருவரும் ...
தடம் விமர்சனம்

தடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழிலும் கவினும் ஓருரு இரட்டையர்கள் (Identical twins). அவர்களில் ஒருவர் கொலையாளி என்பதற்கான புகைப்படத் துப்பு காவல்துறையினர்க்குக் கிடைக்கிறது. அவ்விரட்டையரில் கொலையாளி யாரென்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க படாதபாடுபடுகின்றனர். கொன்றது யார், ஏன் கொன்றார், அவர் அழிக்காமல் விட்ட தடம் எது என்பதன் தான் படத்தின் கதை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யத் தொடங்கும் முதல் ஃப்ரேமிலேயே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறார் மகிழ் திருமேனி. சிகரெட் பிடிக்கும் சேச்சி; பெண்களின் மார்புக்கச்சைக்கும், கொல்கத்தா ஹெளரா பாலத்துக்கும் ஒரே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது எனும் நாயகனின் இன்ஜினியரிங் மேஜிக் வசனம் எனப் படத்தின் முதல் 35 நிமிடங்களுக்குக் கதைக்குள் போகாமல் காட்சிகளாலும் பாடல்களாலும் மட்டுமே ரசிக்க வைக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தின் ரசனையான எடிட்டிங்கே அதற்குக் காரணம். ஒரு கொலை நடந்து, இர...