மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்ஷன் த்ரில்லர்
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.
ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் பேசிய தயாரிப்ப...