
சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம்
முதல் சீசனின் தொடர்ச்சியாக, கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இத்தொடரில் இடம்பெறுகின்றனர். சக்கரவர்த்தியாக வரும் கதிரும், கொலை குற்றவாளி நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷும், நீதிமன்ற விசாரணையில் உள்ளனர். இவ்விருவர் சார்பாகவும், மக்கள் நல வழக்குகளை எடுத்து சமூக நீதிக்காகப் போராடும் வக்கீல் செல்லப்பா வாதாடுகிறார். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவரது பண்ணை வீட்டில் கொல்லப்படுகிறார் செல்லப்பா. அவரது வளர்ப்பு மகனான சக்கரை எனும் சக்கரவர்த்தி, அக்கொலையைப் புலனாய்வு செய்ய நியமிக்கப்படுகிறார். சிறைக்குள் இருந்தவாறே, சக்கரைக்கு உதவுகிறாள் நந்தினி.
முதல் சுழலில் எப்படி மயான கொள்ளை பின்னணியில் கதை நகர்ந்ததோ, இத்தொடரில், அஷ்ட காளி திருவிழா பின்னணியில் கதையின் ஓட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கொடியேற்றம் முதல் சூரசம்ஹாரம் வரை, திருவிழாவை (குலசை தசரா) ஒட்டித் தொடரின் முக்கியமான நிகழ்வுகளை சித்தரித்துள்ளனர்...