ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்
கத்தியால் ஒருவர் கண்ணில் வரவழைக்கும் கண்ணீரை விட, கலையால் ஒருவர் கண்ணில் வரவழைக்கப்படும் கண்ணீர் துளி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துவதற்கான உயிர்த்துளி என்பதை ஒருவித கோணத்தில் கூறிய திரைப்படம் ஜிகர்தண்டா. அதே கருத்தை மற்றொரு மாற்றுக் கோணத்தில் இன்னும் அழுத்தமாக, தீவிரமாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
”கலையை நீ தேர்ந்தெடுக்கவில்லை; கலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறது” என்கின்ற கனமான கவித்துவமான வரிகளுடன் துவங்குகிறது திரைப்படம். அந்த வரிகளுக்கான நியாயத்தை ஒவ்வொரு காட்சியிலும் சிறுகச் சிறுக கடத்தி, படம் முடியும் அந்தக் கடைசி ஃப்ரேமில் அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையை நிரூபிக்கிறது.
'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் இருக்கும் சில சாயல்கள் இப்படத்திலும் உண்டு. உதாரணத்திற்கு ஊரே பார்த்து நடுங்கும் ஒரு கொலைகார ரெளடி, அவனை நாயகனாக வைத்து படம் எடுக்க வேண்டிய ...