நந்தன் விமர்சனம்
ஆண்டை கோப்புலிங்கத்திற்குப் பரம விசுவாசியாக உள்ளார் கூழ்பானை என்றழைக்கப்படும் அம்பேத்குமார். ஆதலால், தனித்தொகுதியாக்கப்படும் வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குக் கூழ்பானையைத் தேர்வு செய்கிறார். தான் ஆட்டுவிக்கும் பாவையாகக் கூழ் பானை இருப்பான் என்ற நம்பிக்கை சிதையும் வண்ணம், தங்களுக்கென ஒரு தனிச் சுடுகாட்டைத் தன்னிச்சையாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுகிறார் அம்பேத்குமார். அதனால் கோபமுறும் கோப்புலிங்கத்தின் எதிர்வினையும், அதை அம்பேத்குமார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் முடிவு.
தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களை, சமூகத்தில் ஆழ வேரூன்றிவிட்ட சாதியக் கட்டமைப்பு எப்படி நடத்துகிறது என்பதுதான் படத்தின் மையக்கரு.
படத்தின் ஆகப் பெரிய பலவீனம் படத்தின் கதாபாத்திர வார்ப்புகளே ஆகும். என்ன சொல்லப் போகிறோம் என இயக்குநர் இரா. சரவணனுக்கு இருந்த தெளிவு, முதன்ம...