Shadow

Tag: சூரி

கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
“என்னைப் பார்க்கப் பார்க்கப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்” – சூரி | கருடன்

“என்னைப் பார்க்கப் பார்க்கப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்” – சூரி | கருடன்

சினிமா, திரைச் செய்தி
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப...
கதாநாயகனாகும் ‘அருவி’ மதன்

கதாநாயகனாகும் ‘அருவி’ மதன்

சினிமா, திரைச் செய்தி
அரும்புமீசை குறும்புபார்வை, வெண்ணிலாவீடு, விசிறி போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன்று, முன்னணி நிறுவனம் தயாரிக்க 'விடுதலை' நாயகன் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம். "சூரியும் நானும் பால்ய கால நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம். பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும். 'விடுதலை' படத்தில் ஒப்பந்தம் ஆனதிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்லிகிட்டே இருப்பார். ‘காமெடியனா என்னை ஏத்துக்கிட்ட மக்கள், இப்போ கதையின் நாயகனா நடிக்கிறத எப்படி ஏத்துக்கப் போறாங்கன்றத நெனச்சாத் தான் கொஞ்சம் பயமா இருக்கு நண்பா' ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். இப்போ, விடுதலை ட்ரெய்லர் வந்த பிறகு கிடைக்க...
“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

சினிமா, திரைச் செய்தி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகை இந்திரஜா, “இப்படத்தில் சூரி மாமாவிற்கு ஜோடியாக நடிக்கிறேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியாத ரகசியம் அவர் மடியில் அமர்ந்துதான் நான் 2 ஆவது மொட்டை அடித்தேன். என்னை அழகாகக் காண்பித்த ஒளிப்பதிவாளர் செல்வா சாருக்கு நன்றி” என்றார். நடிகை சரண்யா, “பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். கார்த்தியுடன் ஏற்கனவே அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததும் மகிழ்ச்ச...
தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

சினிமா, திரைத் துளி
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தனது திரையுலகப் பயணத்திலேயே மிகப் பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் ...
சங்கத்தமிழன் விமர்சனம்

சங்கத்தமிழன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில், விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரே படத்தின் தலைப்பாகும். மருதமங்கலத்தில் காப்பர் ஃபேக்டரி நிறுவ நடக்கும் முயற்சியைச் சட்டத்தின் உதவியோடு சங்கத்தமிழன் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படத்தின் முதற்பகுதி சுமார் 1 மணி 10 நிமிடங்கள் கால அளவு ஓடுகிறது. கதையைத் தொடங்காமல், விஜய் சேதுபதியும் சூரியும் அநியாய மொக்கை போடுகிறார்கள். கதை தொடங்காததால், கதையோடு இயைந்த நகைச்சுவைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விஜய் சேதுபதி மாஸோ மாஸ் என்பதை நிறுவுவதற்காக மட்டுமே படத்தின் முதற்பாதியை உபயோகித்துக் கொண்டுள்ளார் இயக்குநர் விஜய் சந்தர். இரண்டாம் பாதியில், ஸ்டெர்லைட் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர். அப்பிரச்சனையில் நிகழ்ந்த அரசு பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசாமல், வழக்கமான கார்ப்ரேட் வில்லனின் அட்டூழியம் என்பதாகப் படம் பயணிக்கிறது. அந்தப் ப...
நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான். சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி மாறுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. நடிகர் பட்டாளம் நிரம்பிய திருவிழா கோலமாக உள்ளது படத்தின் முதற்பாதி. இன்னார் இன்னின்ன சொந்தங்கள் எனச் சொல்லி முடிப்பதற்கே முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் பாண்டிராஜ். கதையின் ஊடாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த முயலாமல், அதைப் பாட்டாகவே ...
வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி விளையாட்டு என்றால் உயிர். தந்தையின் விருப்பத்தைத் தாமதமாக உணரும் விக்ராந்த், தனது சொந்த ஊரான கணக்கன்பட்டிக்குச் சென்று 'வெண்ணிலா கபடி குழு'வில் இணைகிறார். 1989இல் நடக்கும் பீரியட் படம். கதை மட்டும் அக்காலகட்டத்தில் நிகழ்வது போலல்லாமல், படமே 80களின் இறுதியில் எடுக்கப்பட்டது போல் தொடங்குகிறது. இவர் தான் நாயகி, இவர் தான் நாயகன், இவர் நாயகனின் அப்பா, இது நாயகனின் குடும்பம், அவரது பக்கத்து வீட்டுக்காரர், காமெடியன் கஞ்சா கருப்பு என அறிமுகப் படலத்திற்கென தனித் தனி காட்சிகள் வைத்துள்ளனர். கதையோடு ஒட்டாத நகைச்சுவைத் திணிப்புகள் படத்தின் ஆகப் பெரிய மைனஸ். 2009 இல் வந்த முதற்பாகம் போல், காதல் காட்சிகள் அவ்வளவு ரசனையாகவும் க்யூட்டாகவும் இல்லை. அர்த்தனா பினு, விக்ராந்துக்கும் இடையேயான காதல் காட்சிகளில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம்....
கதிர், சூரி கலந்த சர்பத்

கதிர், சூரி கலந்த சர்பத்

சினிமா, திரைத் துளி
7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்'. அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில், 'சர்பத்' படத்தின் நாயகனாகப் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா ஃபேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமிரா மேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசையமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உ...
தேவராட்டம் விமர்சனம்

தேவராட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. தொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான். கடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக...
சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்

சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே! அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக அவர்கள் இணைந்துள்ள படம் 'சீமராஜா'. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்குப் பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா செ...
பக்கா விமர்சனம்

பக்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விக்ரம் பிரபு முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அரசன்குடியைச் சேர்ந்த ஜமீன்தாரின் மகளான நதியாவிற்கு, திருவிழாவில் பொம்மை கடை வைக்கும் பாண்டி மீது காதல் வருகிறது. தனது அந்தஸ்தினை நினைத்துத் தயங்கும் பாண்டியை ஊர் ஊராய்த் தேடிச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார் நதியா. தாம்பரம் ரயில் நிலையத்தில் நதியாவை உட்கார வைத்து விட்டுச் செல்லும் பாண்டி திடீரெனக் காணாமல் போவதால், தற்கொலை புரிந்து கொள்ள தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார் நதியா. அச்சமயம், குடித்து விட்டு தண்டவாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தோனி குமார் நதியாவைக் காப்பாற்றுகிறார். பாண்டி போலவே இருக்கும் தோனி குமாரிடம் தன் காதல் கதையைச் சொல்கிறார் நதியா. இது படத்தின் முதல் பாதி. நதியாவிடம், ரஜினி ராதாவுடனான தன் காதல் கதையைச் சொல்கிறார் தோனி குமார். இது ப்ரீ க்ளைமேக்ஸ் வரைக்குமான கதை. பாண்டி என்னானார்? நதிய...
ஸ்கெட்ச் விமர்சனம்

ஸ்கெட்ச் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலிருந்தே படத்தின் கதையை யூகிக்கலாம். சேட்டுக்கு வட்டி கட்டாதவர்களின் வண்டிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் நாயகன், தாதாவான ராயபுரம் குமாரின் காரைத் தூக்குவதால் அவனது கோபத்திற்கு உள்ளாகிறான். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ஸ்கெட்சிற்கு வண்டிகளைப் பறிமுதல் செய்ய உதவும் நண்பர்களாக 'கல்லூரி' வினோத், 'கபாலி' விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோர் வருகின்றனர். படத்தில், ஸ்டைலான பளபளப்பான பரோட்டா சூரியும் உண்டு. ஆனால், நாயகனின் நண்பனாகவோ, நகைச்சுவைக்காகவோ இல்லாமல், கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். சேட்டாக ஹரீஷ் பெராடி நிறைவாக நடித்துள்ளார். படத்தின் திரைக்கதை, தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொண்டு சுவாரசியப்படுத்த முற்படவில்லை. விக்ரமின் உடல்மொழியும், வசனம் உச்சரிக்கும் தொனியும் ஒரு டெம்ப்ளட்க்குள் உறைந்துவிட்டதாகவே தெரிகிறது. அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வது மிக அவசியம். கார...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, 'சோட்டா ராஜ்' எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின்  ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை  இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந...
கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின் தந்தை. நாயகனோ சாலையைக் கடக்கக் கூட தொடை நடுங்குபவன். அவன் பயத்தை மீறி எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதே படத்தின் கலகலப்பான் கதை. தாசில்தார் ஆஃபீசில் அட்டெண்டராக சூரியும், ரெவன்யூ இன்ஸ்பெக்டராக விஷ்ணு விஷாலும் பணிபுரிகின்றனர். இருவரும் ஆறாம் வகுப்பில் பிரிந்த நண்பர்கள் என ஒரு காமிக்கல் ஃபிளாஷ்-பேக் காட்டப்படுகிறது. சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாதுரை; விஷ்ணு விஷாலின் பெயர் தம்பிதுரை. நாயகனின் நண்பர்கள் செய்யும் அதே வேலையைத்தான் சூரி இப்படத்தில் செய்கிறார். தம்பியின் காதலுக்கு உதவுவது தான் அண்ணாவின் பிரதான வேலை. நாயகனின் பயத்தைப் பார்த்து, 'ரொம்ப அப்பாவி' எனக் காதலிக்கத் தொடங்கும் அழகு நாயகியாக கேத்ரின் தெரசா. சில காட்சிகள் ஸ்ஃபூப் மூவி போல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் முழுமையான கலகலப்பைத் தரத் தவறி விடுகிறது. முழு நீள நகைச்...