ஸ்கெட்ச் விமர்சனம்
தலைப்பிலிருந்தே படத்தின் கதையை யூகிக்கலாம். சேட்டுக்கு வட்டி கட்டாதவர்களின் வண்டிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் நாயகன், தாதாவான ராயபுரம் குமாரின் காரைத் தூக்குவதால் அவனது கோபத்திற்கு உள்ளாகிறான். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
ஸ்கெட்சிற்கு வண்டிகளைப் பறிமுதல் செய்ய உதவும் நண்பர்களாக 'கல்லூரி' வினோத், 'கபாலி' விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோர் வருகின்றனர். படத்தில், ஸ்டைலான பளபளப்பான பரோட்டா சூரியும் உண்டு. ஆனால், நாயகனின் நண்பனாகவோ, நகைச்சுவைக்காகவோ இல்லாமல், கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். சேட்டாக ஹரீஷ் பெராடி நிறைவாக நடித்துள்ளார்.
படத்தின் திரைக்கதை, தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொண்டு சுவாரசியப்படுத்த முற்படவில்லை. விக்ரமின் உடல்மொழியும், வசனம் உச்சரிக்கும் தொனியும் ஒரு டெம்ப்ளட்க்குள் உறைந்துவிட்டதாகவே தெரிகிறது. அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வது மிக அவசியம். கார...