Shadow

Tag: நிவின் பாலி

நிரபராதியென அறிவிக்கப்பட்ட நிவின் பாலி

நிரபராதியென அறிவிக்கப்பட்ட நிவின் பாலி

அயல் சினிமா
நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும், அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர்.நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது....
நிவின் பாலி | ஜோடிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக வழக்கு

நிவின் பாலி | ஜோடிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக வழக்கு

அயல் சினிமா
நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன், அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணை...
கோடம்பாக்கம் தயாரிப்பாளர்களின் கதையைப் பேசும் நிவின் பாலியின் “வர்ஷங்களுக்கு சேஷம்”

கோடம்பாக்கம் தயாரிப்பாளர்களின் கதையைப் பேசும் நிவின் பாலியின் “வர்ஷங்களுக்கு சேஷம்”

சினிமா, திரைச் செய்தி
நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான 'வர்ஷங்களுக்கு சேஷம்' ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிவின் பாலியின் தனித்துவமான நடிப்பு.. கவனத்தை கவர்கிறது. 'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் அவரது திரை தோற்றம்... அவர் ஆற்றல்மிக்க நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் மட்டுமல்லாமல் இத்திரைப்படம்.. சினிமா ரசிகர்களின் ரசனையை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. இந்தத் திரைப்படம், 70 கள் மற்றும் 80களில் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வியலை பற்றியதாகும். சினிமா ரசிகர்களின் மையமாக திகழும் கோடம்பாக்கம்.. பல திரைப்பட தயாரிப்பாளர்களின் வெற்றியையும், ...
படவெட்டு விமர்சனம்

படவெட்டு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படவெட்டு (Battle) என்ற மலையாளச் சொல்லிற்குப் போராட்டம் எனப் பொருள் கொள்ளலாம். மலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மழை, காட்டுப்பன்றியுடன் போராடுகிறார்கள். அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி தனக்குள்ளேயே மிகப்பெரும் அகப்போராட்டத்தை நடத்துபவனாக இருக்கிறான். மேலும், தன்னுடனான அகப்போராட்ட்த்தில் இருந்து மீண்டு, அக்கிராமத்து நிலங்களை இலவசங்களால் ஆக்கிரமிக்க நினைக்கும் குய்யாலி எனும் அரசியல்வாதியின் அதிகாரத்தை எதிர்ப்பதோடு படம் முடிகிறது. மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனான ரவி, ‘மலூர் எக்ஸ்பிரஸ்’ எனப் புகழப்படுகிறான். ஒரு விபத்தில் அவன் கால் முறிந்து போக, அதோடு தன் வாழ்க்கையை முடிந்து விட்டதாக மனதிற்குள் புழுங்கிப் புழுங்கித் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். அவன் சிரிப்பதையே மறந்துவிட்டிருப்பதால், அவன் முகம் உறைந்து போனதுபோல் எப்பொழுதும் இறுகியே உள்ளது. அவனது முன்னாள் காதலியுடனான பார்வைப் பரிமாற்றங்கள்...
மஹாவீர்யர் விமர்சனம்

மஹாவீர்யர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஃபேண்டசி கோர்ட் ரூம் டிராமாவைத் தயாரித்துள்ளார் நிவின் பாலி. எம். முகுந்தனின் கதையைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அப்ரீட் ஷைன். அனுமார் சிலையைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அபூர்ணாநந்தா எனும் சாமியார் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இது படத்தின் முதற்பாதி. விக்கல் நிற்காத ஸ்ரீ ருத்ர மகாவீர அக்ரசேனா மஹாராஜா, அவரது தளபதி வீரபத்திரன், தளபதியால் கடத்தப்பட்ட தேவயானி ஆகியோரது வழக்கு தற்கால நீதிமன்றத்தில் நடக்கிறது. இது படத்தின் இரண்டாம் பாதி. வழக்கம் போல், மலையாள சினிமாவில் இருந்து மற்றுமோர் அற்புதமான பரீட்சார்த்த முயற்சி. பப்ளிக் ப்ராக்சிக்யூட்டராக லாலு அலெக்ஸும், நீதிபதி விரேந்திர குமாராக சித்திக்கும் நடித்துள்ளனர். கோர்ட் ரூம் டிராமா என்பதால்,படம் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கின்றனர் கதாபாத்திரங்கள். அதை அவர்களது அனுபவம் மிகுந்த நடிப்பாலும், முக பாவனைகளாலும் சுவாரசியப்படுத்து...
மஹாவீர்யர் – டீசர்

மஹாவீர்யர் – டீசர்

Teaser, காணொளிகள்
நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையைத் தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். மஹாவீர்யார் திரைப்படம்...
நிவின் பாலியின் “மஹாவீர்யார்” – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நிவின் பாலியின் “மஹாவீர்யார்” – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி
புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. நிவின் பாலி, ஆஷிஃப் அலி ஆகிய இருவரும்  முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றது.Pauly Jr Pictures நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் Indian Movie Makers சார்பில் PS சம்னாஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். கொச்சியில் நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர் M.முகுந்தன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அ...
தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

சினிமா, திரைத் துளி
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தனது திரையுலகப் பயணத்திலேயே மிகப் பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் து...
காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கேரளத்து நாடோடிப் பாடல்களின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் 19 ஆம் நூற்றாண்டு காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டல்காரர்களான பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். காலங்கள் கடந்தும், செவி வழியாக மக்களின் மனங்களில் நுழைந்து, இன்றளவும் தன் நாயக பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சகாப்தம் அவர். தன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் கொச்சுண்ணி மீது சுமத்தி, நையப்புடைத்து, மரத்தில் தலைகீழாகத் தொங்க விடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கும் கொள்ளைக்காரரான 'இத்திக்கர பக்கி', கொச்சுண்ணியை மீட்டு, பார் போற்றும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். அதன் பின், அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, காயங்கு...
மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

சினிமா, திரைத் துளி
மதன் கார்க்கி பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான 'நடிகையர் திலகம்' படத்துக்கும் வசனம் எழுதி, வசனகர்த்தாவாகவும் தன் முத்திரையை ஆழப் பதித்துள்ளார். இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு 'நுழைவாயில்' ஆகியுள்ளார் என்றே சொல்லவேண்டும். தற்போது, நிவின் பாலியின் பிரம்மாண்டமான மலையாளத் திரைப்படமான 'காயம்குளம் கொச்சூன்னி' படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்தப் படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளது. படத்தைச் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, "இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும் மையக்கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே தனித்துவமாக இதைக் கையாள முடிவு செய்தோம். இது மிகவும...
ஹே ஜூட் விமர்சனம்

ஹே ஜூட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நிவின் பாலிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். த்ரிஷாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஹே ஜூட்' என்பது 1968இல் வெளிவந்த 'தி பீட்டில்ஸ்' குழுவின் மிகப் பிரபலமான பாடல். த்ரிஷாவின் கேஃபே மற்றும் இசைக்குழுவின் (Music band) பெயரை 'தி பீட்டில்ஸ் கேஃபே' என வைத்துத் தலைப்பிற்கு ட்ரிப்யூட்டும் செய்துள்ளனர். ஜூடிற்கு மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் பிறந்தது முதலே சிக்கல் உள்ளது. கோபம், மகிழ்ச்சி என மனம் சார்ந்த உணர்வுகளை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. ஆனால், கணிதமோ உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஜூட்க்குப் புரிகிறது. கிட்டத்தட்ட கணித மேதை ராமானுஜம் அளவுக்கு. 28 வயதாகும் ஜூட் கொச்சியில் இருந்து கோவாவிற்குத் தன் பெற்றோர்களுடன் செல்கிறான். நண்பர்களற்ற ஜூட்க்கு, கோவாவில் பக்கத்து வீட்டுக்காரர்களான செபாஸ்டியனும் அவரது மகள் க்ரிஸ்டலும் நண்பர்களாகின்றனர். இருமன ஒழுங்கின்மையால் (Bi-pol...
ரிச்சி விமர்சனம்

ரிச்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரிச்சி எனும் ரிச்சர்ட்டின் வாழ்க்கை எவ்வாறு எதனால் திசை மாறி, அவன் வாழ்க்கை என்னானது என்பதுதான் படத்தின் கதை. 2014இல் வெளியான 'உள்ளிடரு கண்டன்தே' என்ற கன்னடப் படத்தின் ரீமேக் ஆகும். ஓர் அசாத்திய பொறுமையைக் கோருகிறது படம். துண்டு துண்டாய், அத்தனை கதாபாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் கதையை நேர்க்கோட்டிற்குக் க்ளைமேக்ஸில் கொண்டு வரும் முன் ஒரு வழியாகிவிடுகிறோம். படத்தில் கையாண்டுள்ள கதை சொல்லும் பாணிக்கு நாம் தயார் ஆகாதது ஒரு காரணம் என்றாலும், மெதுவாகத் தனித்தனி காட்சிகளாகக் கோர்வையற்று நகரும் திரைக்கதையே அதற்குப் பிரதான காரணம். தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டதால் கிறிஸ்துவப் பின்னணியில் கதை நகர்கிறது. கதை தொடங்கும் முன், அனிமேஷனில் சொல்லப்படும் மீனவன் கதையை உள்வாங்கிக் கொள்ள முடியாதளவு வேகமாகவும் அந்நியமாகவும் உள்ளது. அந்த முன் கதை, படத்தின் கதையைப் புரிந்து கொள்ள அவசியம். அது என்ன சிலை...
அவியல் விமர்சனம்

அவியல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் டாக்கீஸ், நான்கு குறும்படங்களை ஒன்றாக்கி 132 நிமிட அவியலாக்கியுள்ளனர். நான்கும் ஒவ்வொரு விதம். மோஹித் மெஹ்ராவின் 'ஸ்ருதி பேதம்', புறத்திணைப் பிரிவுகளான பெருந்திணையையும் (பொருந்தாக் காதல்) கைக்கிளையையும் (ஒரு தலை காதல்) கலந்து கட்டிய கதை. தன்னை விட ஒரு வயதே மூத்தவரான சித்தி மீது நாயகனுக்கு காதல் வந்து விடுகிறது. இது போன்ற பேசுப்பொருள்களை நாடகப் பாணியில் திரையில் உலவ விடுவதில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சமர்த்தர். ஆனால், மோஹித் மெஹ்ராவோ முற்றிலும் நகைச்சுவையுடன் இதை அணுகியுள்ளார். சில நிமிடங்களே எனினும், இந்தப் பேசுப்பொருள் தருகின்ற கிளர்ச்சி அலாதியானது. ஆனால், கலாச்சாரக் காவலர்களுக்கு வேலை வைக்காமல் படம் சுபமாகவே முடிகிறது. சித்தி ஸ்ருதியாக அம்ருதா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் மணிரத்னம் படத்து நாயகிகளை நினைவுபடுத்துகின்றது. மற்ற மூன...
நேரம் விமர்சனம்

நேரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தோடு இயைந்து, “சூது கவ்வும்” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி. நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின் கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான...