Shadow

Tag: மெளனம் ரவி

அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில், இயக்குநர் பாலு மகேந்திராவின் முதல் படம் 'அழியாத கோலங்கள்'. 1979 இல் வெளியான இப்படம், தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான ஒரு சோதனை முயற்சி. எப்படி குழந்தைப் பருவ நட்பு, அழியாத கோலங்களாய் கெளரிசங்கர் மனதில் பதிந்திருந்தது என்பதே அப்படத்தின் கதை. நாற்பது வருடங்களுக்குப் பின் வெளியாகியிருக்கும், 'அழியாத கோலங்கள் 2' படத்திற்கும், பாலு மகேந்திராவின் முதல் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தலைப்பைத் தவிர்த்து. இன்னொரு ஒற்றுமை, பிரதான கதாபாத்திரத்தின் பெயர் கெளரிசங்கர் என்பதாகும். 'மோகனப் புன்னகை' எனும் புத்தகத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெறுகிறார் கெளரிசங்கர். டெல்லியில் சாகித்திய அகாதெமி விருது பெற்றதும், தான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த மோகனா எனும் தனது கல்லூரிக் காலத்துத் தோழியை, 24 வருடங்களுக்குப் பின் காண சென்னைக்கு வருகிறார். கிண்டியில் தனியாக வசிக்கும் 44 வயதான மோகனாவி...
ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர்  மோத்தி.பா

ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா

சினிமா, திரைத் துளி
மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் கோலா. "போதை - இந்த இரண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு. பணக்காரப் போதை, அதிகாரப் போதை, பெண் போதை, மது போதை, கடைசியாகப் புகழ்ப் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ்ப் போதைக்கு ஆசைப்படுகிறான். அதை அனுபவிக்கவும் செய்கிறான். உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகள்தான். விளக்கின் வெளிச்சத்தைத் தேடிச் சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். ஒரு வித தற்காலிகமான அமைதியை, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஆழமாகவோ, ஒரு முகமாகவோ சிந்தித்து முடிவெடுக்க விடாமல் செய்வதுதான் போதையின் முக்கியமான வேலை. இதை எத்தனையோ ஞானிகளும் மகான்களும் பல விதங்களில் எடுத்துச் சொல்லிய...
இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

சினிமா, திரைச் செய்தி
வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் 'எவனும் புத்தனில்லை'. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை கமலா திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. "எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறிய படம் பெரிய படம் என்றில்லை. எல்லோரும் ஒரே போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது" என்றார் இயக்குநர் மீரா கதிரவன். இசையமைப்பாளர் மரியா மனோகர், " 'எவனும் புத்தனில்லை' என்ற தலைப்பே எல்லோரையும் ஈர்க்கக்கூடியது. எல்லோருமே அயோக்கியர்கள் தான். ஏன்னா எல்லோராலும் நல்லவனா இருக்க முடியாது. காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படி மாறுகிறோம். அதனாலே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் மிகவும் பிடித்...
கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’

கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’

சினிமா
மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, விழாவில் பேசிய ஸ்டன்ட் மாஸ்டர்  ஜாக்குவார் தங்கம், "கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்தி.பா அவர்களுக்கு மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லியிருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவு செய்து நல்ல பழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படி கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய வேண்டும். இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும்" என்றார்.  இயக்குநர் மோ...
இது என் காதல் புத்தகம் – பெண்களுக்குக் கல்வி அவசியம்

இது என் காதல் புத்தகம் – பெண்களுக்குக் கல்வி அவசியம்

சினிமா, திரைத் துளி
ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இது என் காதல் புத்தகம்'. அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ, இப்படத்தின் கதாநாயகியான தேவயாணி கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது. கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர், "விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல்வி?" என்று சொல்லுகிறார். ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணிக்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது. அதனால் தந்தையின் சிந்தனைக்கு எதிராகச் செயல்படத் தொடங்குகிறாள...
நானும் சிங்கிள் தான் – காதல் படம்

நானும் சிங்கிள் தான் – காதல் படம்

சினிமா, திரைத் துளி
THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்'. தினேஷ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தீப்தி திவேஸும் நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னை மற்றும் லண்டன், ஐரோப்பா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. "இது முழுக்க முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் கோபி. ஒரு புது மாதிரியான கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில் உள்ளது. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள...
கடமான் பாறை – நவீன தொழில்நுட்பத்தால் நேரும் ஆபத்தைப் பற்றிய படம்

கடமான் பாறை – நவீன தொழில்நுட்பத்தால் நேரும் ஆபத்தைப் பற்றிய படம்

சினிமா, திரைத் துளி
மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் படம் 'கடமான் பாறை'. இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்."நகைச்சுவை கலைந்த த்ரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவாறன பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்தப...
ப்ரித்விராஜ் – சாந்தினியின் ‘காதல் முன்னேற்ற கழகம்’

ப்ரித்விராஜ் – சாந்தினியின் ‘காதல் முன்னேற்ற கழகம்’

சினிமா, திரைத் துளி
‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விபாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மேலும், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். இயக்குநர் மாணிக்க சத்யா, “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்குப் போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார். துரோகத்தில் மிகக் கொடூரமான துரோகமாகக் கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான். அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிகக் கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். படம் ஜூலை 5 ஆம் தேதி உலக...
முசோலினி ஹிட்லர் இயக்கும் நீர்முள்ளி

முசோலினி ஹிட்லர் இயக்கும் நீர்முள்ளி

சினிமா, திரைத் துளி
ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஹிட்லர்.J.K. கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் படத்திற்கு “ நீர்முள்ளி “ என்று பெயரிட்டுள்ளது. நாயகியாக சுமா பூஜாரி நடிக்கிறார். மற்றும் ரேகா, மெய்வாரா, பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, நளினி, வீரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் அகத்தியன் நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் நடிகர் முசோலினி ஹிட்லர், "இந்தப் படம் கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம். இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் தங்களைச் சார்ந்த ஆண் உறவுகளை எப்படி கையாள்கிறார்கள், அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை. காலத்திற்கேற்ப பெண்களின் எண்ண ஓட்டமும் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடு பற்றி கதை இருக்கும். பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை இந...
மோசடி விமர்சனம்

மோசடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நூறு கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி கிருஷ்ணா எனும் இளைஞனுக்கு. இல்லையெனில் கிருஷ்ணாவின் மனைவி ராதாவைக் கொன்று விடுவார் அமைச்சர். கிருஷ்ணா பல வகையான மோசடிகள் செய்து பணத்தைச் சேர்க்க முயற்சி செய்கிறான். அவனால் தன் மனைவியைக் காப்பாற்ற முடிந்ததா என்பது தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி, சதுரங்க வேட்டையை ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளது. முதலில் ஆசையை நன்றாகத் தூண்டிவிட்டு, அவர்களின் பணத்தைக் கறக்கிறான் கிருஷ்ணா. வயலில் புதையல் இருப்பதாக நம்ப வைத்து, அதை எடுக்கப் பூஜைக்கு அதற்கு பால் ஆமை தேவை எனச் சொல்லி பணம் பறக்கிறான். வெள்ளைப் பூனைக்கு கருப்பு டை அடித்து, கருப்பு வைரம் எனச் சொல்லி ஒரு நபரின் மூட நம்பிக்கையைக் காசாக்குகிறான். வலம்புரி சங்கின் விலை 20 கோடி பெறுமானம் என ஒருவரின் ஆசையைத் தூண்டி, 1 கோடிக்கு ஒரு சங்கை விக்கிறான். குறுக்கு வழியில் பணம் பார்க்க நினைக்...
“விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை யோசித்தே எழுதினேன்” – சிந்துபாத் இயக்குநர்

“விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை யோசித்தே எழுதினேன்” – சிந்துபாத் இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று, “இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்துபாத்தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குனர் அருண்குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எங்கள் குழு மீது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம். விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது தான். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர்...
சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா

சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா

சினிமா, திரைச் செய்தி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “இயக்குநர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து பணியாற்றினேன். எல்லாப் பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய ட்விட்டரில் கூட அண்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று ட்வீட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போ...
‘சிந்துபாத்’ பற்றி விஜய் சேதுபதி

‘சிந்துபாத்’ பற்றி விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, “பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குநர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம், என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து சேதுபதி பட வாய்ப்பைக் கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உ...
இயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி

இயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி

சினிமா, திரைத் துளி
நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் டோரா. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். அவர் தற்பொழுது, “இயக்கி“ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகட்டிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்குக் காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஷானின் "இயக்கி" குறும்படம் அதைத் தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான், அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்கச் சொல்கிறது. 26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுநரின் வலி மிகுந்த வாழ்க்கையை உணர்த்தியுள்ளார் ஷான். "இந்தக் கதையைப் படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுநரானேன்.500 க்கும் மேல் டிரிப் அடித்து அனுபவத்தைக் கற்றுக் கொண்டு அதற்கு மேல் படமாக்கினேன். பட்டம் பெற்றுவிட்டு, உணவு, உறக்கம் எல்லாவற்றையும் இழந்து குடும்பத்திற்காக அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிர...