Shadow

Tag: ரமேஷ் திலக்

லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

சினிமா, திரை விமர்சனம்
இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் சாப்பிடுகின்றனர். பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். உயிர் போகும் அப்பிரச்சனையிலிருந்து எப்படி அந்த நால்வரும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. மிமிக்ரி கோபியாக ரமேஷ் திலக், திடீர் திருப்பதியாகக் கருணாகரன், குயில் குமாராக C. மணிகண்டன், பேய் முருகேசனாக ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோ சினிமாஸ் C. மணிகண்டன் தயாரித்த...
சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ப்ளாட்பார்ம் “ஸ்டார்டா”

சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ப்ளாட்பார்ம் “ஸ்டார்டா”

திரைச் செய்தி, திரைத் துளி
தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ என...
”கோடி கோடியாக கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்” – ஜீ.வி.பிரகாஷ்

”கோடி கோடியாக கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்” – ஜீ.வி.பிரகாஷ்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்தில் ‘ஸ்டார்டா’ எனும் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராக ஜீ. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது பாடகர் -இசையமைப்பாளர்- நடிகர்- தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுள்ள ஜீ. வி. பிரகாஷ்குமார், பாடகர்- பாடலாசிரியர்- நடிகர்- இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ், நடிகரும், தொகுப்பாளருமான அபிஷேக் ராஜா, நடிகர் ஷ்யாம் குமார், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார், தனஞ்ஜெயன், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இவ்விழாவில் ஸ்டார்டா பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்ப...
குட் நைட் விமர்சனம்

குட் நைட் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாம் அன்றாடம் வாழ்வில் கடக்கும் தருணங்களை சிறந்த கலைப்படைப்பாக மாற்றும் சினிமாக்கள் மலையாளத்தில் தான் அடிக்கடி வரும் என்ற பிம்பத்தைத் தமிழ் சினிமா நொறுக்கத் துவங்கியுள்ளது. அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது குட்நைட் படம். படத்தின் கதைப்படி ஹீரோ மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அவரை அறியாமல் அவர் விடும் குறட்டைச் சத்தம் தன் வீட்டையும் தாண்டிக் கேட்கும் அளவிற்கு வலிமையுடையது. அந்தக் குறட்டைச் சத்தத்தால் அவரது அக/புற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை. எல்லா மனிதர்களோடும் நிச்சயமாக கனெக்ட் ஆகக் கூடிய கதை என்பதால் கதை மாந்தர்கள் அனைவருமே நமக்கு நெருக்கமாகி விடுகிறார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’ படத்தின் விஜய்சேதுபதியை சில இடங்களில் நினைவூட்டினாலும், அளவுக்கு அதிகமாகவே ரசிக்க வைக்கிறார் ஹீரோ மணிகண்டன். அவரது மச்சானாக வரும் ரமேஷ் தி...
வெல்வெட் நகரம் விமர்சனம்

வெல்வெட் நகரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள் நடப்பதாக அமைந்துள்ளது. முதல் நாள் இரவு கெளரி இறக்க, அவர் சேகரித்த தரவுகள் அடங்கிய கோப்பினைத் தேடி பிரியா வீட்டுக்குச் செல்கிறார் பிரியா. அன்றைய இரவு, பிரியாவின் வீட்டுக்குள் நுழையும் மைக்கேல் குழுவின் தலையீடால் என்னாகிறது என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி. பிரியாவாக மாளவிகா சுந்தர் நடித்துள்ளார். அவரது கணவர் முகிலனாக பிரதீப் பெனி...
டிக்: டிக்: டிக் விமர்சனம்

டிக்: டிக்: டிக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு வெளியேவே அணு குண்டை ஏவிப் பிளக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு, ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, சுமார் 4 கோடி மக்கள் அழிந்துவிடுவர். இந்தியத் தற்காப்புப் படை, எப்படி நான்கு கோடி மக்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி என்ற வகையில் அசத்தியுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கன்னி முயற்சியில், நடை தளருவது இயற்கை எனினும் விழாமல் இலக்கை அடைவது சாதனையே! அந்தச் சாதனையை மெனக்கெடலில்லாத் திரைக்கதையால் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. 1998 இல் வெளிவந்த, 'ஆர்மகெடான்' ஹாலிவுட் படத்தில் இருந்து மையக்கருவை எடுத்துள்ளனர். உள்ளபடிக்குச் சொன்னால், அது ரசிக்கும்படியே உள்ளது. #னாவின் (அதாவது ஏதோ ஒரு நாட்டின்) அணு ஆயுதத்தைத் திருடும் அத்தியாயம் தான் படத்தின் ஸ்பீட் பிரேக்கர். விண்வெளி ஆராய்ச்சி நிலை...
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆந்திராவின் யமசிங்கபுரத்தில் யமதர்மராஜாவைக் குலதெய்வமாக வணங்கித் திருட்டுத் தொழிலைச் செய்யும் திருடர் குலத்தின் தலைவர் விஜய் சேதுபதி. பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் திருடும் பொழுது, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நாயகியைப் பார்க்கிறார். சென்னையில் படிக்கும் நாயகியை, நண்பர்களின் உதவியுடன் கல்லூரியிலிருந்து யமசிங்கபுரத்துக்கு கடத்திக் கொண்டு செல்கிறார். கடத்தப்படும் நாயகியை மீட்க கெளதம் கார்த்திக் தன் நண்பன் டேனியலுடன் இணைந்து யமசிங்கபுரத்துக்கு இருவரணிப் படையாகச் செல்கிறார். விஜய் சேதுபதியின் யதார்த்த இயல்புடன் கலந்த நடிப்பு எப்போதும் போல நம்மைக் கவர்கிறது.  நிறுவுமுறைத் திரைப்படத்துக்குத் தகுந்த பாணியில் நடித்துக் கொடுத்திருந்தாலும், தனக்கே உரிய  வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அவரது உத்தி இப்படத்துக்குக் கைகொடுத்திருக்கிறது. மெளன ராகம் கார்த...
12-12-1950 விமர்சனம்

12-12-1950 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரஜினி பிறந்த நாள் தான் படத்தின் தலைப்பு. தொண்ணூறுகளில் நாயகனாக நடித்த செல்வா தான் படத்தின் இயக்குநர் செல்வா. 1998இல் கோல்மால் எனும் படத்தை இயக்கிய பின், 19 வருடங்கள் கழித்து இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். தன் பெயரையும் கபாலி செல்வா என மாற்றிக் கொண்டுள்ளார். அந்தளவிற்கு செல்வா ஒரு தீவிர ரஜினி ரசிகர். ரஜினி படத்துப் போஸ்டரை ஒருவன் கிழித்து விட, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் ரஜினி ரசிகரான குங்ஃபூ மாஸ்டர் எதிர்பாராத விதமாக அவனைக் கொன்று விடுகிறார். சிறையில் இருக்கும் தனது மாஸ்டர், கபாலி படத்தை முதல் நாள் பார்க்கவேண்டுமென அவரால் வளர்க்கப்பட்ட மாணவர்கள் விரும்புகின்றனர். சிறையில் இருக்கும் மாஸ்டரை எப்படி அவரது மாணவர்கள் பரோல் எடுக்கின்றனர் என்பதும், கபாலி படத்தை மாஸ்டர் பார்த்தாரா இல்லையா என்பதும் தான் படத்தின் கதை. மாஸ்டரின் மாணவர்களாக ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரஷாந்த் கிருபாகரன்...
பிச்சுவாகத்தி விமர்சனம்

பிச்சுவாகத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள். ஓர் ஆட்டினைத் திருடி போலீஸில் மாட்டிக் கொண்டு, கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போடவேண்டும் என நீதி மன்றத்தில் தீர்ப்பாகிறது. அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மூவரிடமும் தலா பத்தாயிரம் கேட்கிறார். கையில் பணமில்லாச் சூழலில், அவர்களின் நிலை என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. படத்தில் ஒரு கிளைக்கதையும் உண்டு. இரண்டாம் நாயகனான செங்குட்டுவனுக்கு அனிஷாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வந்துவிடுகிறது. நாயகிக்காகச் செங்குட்டுவனும் எம்.எல்.எம்.-இல் சேர்கிறான். அந்த எம்.எல்.எம். எபிசோட், எப்படி இளைஞர்களை ஏமாற்றுகிறது என அழகாகப் பதிந்துள்ளார் இயக்குநர் ஐயப்பன். இளைஞர்களுக்கு ட்ரெயினிங் தரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் காளி வெங்கட். பாலசரவணனிடம் மாட்டி அவர் குட்டு உடையும் காட்சி ரசிக்க வைக்கிறது. ...