Shadow

Tag: ரியோ ராஜ்

ஸ்வீட் ஹார்ட் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிலம்பரசன் – யுவன்

ஸ்வீட் ஹார்ட் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிலம்பரசன் – யுவன்

சினிமா, திரைத் துளி
ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளைத் தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி - ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ...
ஸ்வீட் ஹார்ட் | ரியோ ராஜ் டப்பிங்

ஸ்வீட் ஹார்ட் | ரியோ ராஜ் டப்பிங்

சினிமா, திரைத் துளி
ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளார்.‌ அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளைத் தமிழரசன் கவனிக்கிறார். காதலைக் கொண்டாடும் படைப்பாகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்....
ஸ்வீட் ஹார்ட் | கலகலப்பான அறிமுக அசைவொளி

ஸ்வீட் ஹார்ட் | கலகலப்பான அறிமுக அசைவொளி

இது புதிது, காணொளிகள், சினிமா
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' எனப் பெயரிடப்பட்டு, அத்தலைப்பிற்கான பிரத்தியேக அசைவொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.  இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப...
திருமணமான ஆண்களின் பிரச்சனைகளைப் பேசும் படம்

திருமணமான ஆண்களின் பிரச்சனைகளைப் பேசும் படம்

சினிமா, திரைத் துளி
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ - மாளவிகா மனோஜ்  ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குநர் 'பிளாக்‌ஷீப்' கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளைப் பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாகச் சொல்லும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகிறது. பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், ஜென்சன் திவாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமாரின் இசை, வருண் கே.ஜி.யின் படத்தொகுப்பு, வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி இப்படத்தில் ...
Broken Script விமர்சனம்

Broken Script விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜோ ஜியோவானி சன்ஜித் சிங் தமிழ் பேசத் தெரியாத ஒரு வெளிநாட்டு  நபர். இவர் ஒரு திரைப்படம் அதுவும் தமிழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.  தானே தயாரிக்கவும் தயாராக இருக்கிறார். இவரை நெருங்கும் ஒருவர் நான் தமிழில் உங்களுக்கு ஒரு படம் இயக்கிக் கொடுக்கிறேன் என்று சொல்ல, படப்பிடிப்பும் துவங்குகிறது. படம் பாதிக்கு மேல் முடிவடைந்த பின்னர் தான் ஜியோவானி சன்ஜித் சிங் ஒரு விசயத்தை உணர்கிறார்.  அவர்கள் எடுத்துக் கொண்டு இருப்பது ஒரு ஹாலிவுட் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்று. உடனே அந்த இயக்குநரை அடித்து விரட்டிவிட்டு, படத்தை அப்படியே கிடப்பில் போடுகிறார். சில வருடங்கள் செல்கின்றது. அந்தப் படத்தை அப்படியே போட மனமில்லாமல் எடுத்த படத்துணுக்குகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவரே புதிதாக கதை எழுதி இயக்கத் துவங்குகிறார்.  இத்தனைக்கும் அவருக்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கூட முழுதாகத் தெரியாது. ஆன...
புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

சினிமா, திரைத் துளி
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளைத் தந்த தமிழ்த் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திட்ட இந்தத் தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடகத் துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர்...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும் விக்கியிடமும், ஜிப்பா போட்ட ஒரு பணக்காரர் மூன்று டாஸ்குகளை முடித்தால், அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என வாக்கு கொடுக்கிறார். அந்த மூன்று டாஸ்க்கள் என்ன, அதை எப்படி அவர்கள் முடிக்கின்றனரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. 'ப்ளாக் ஷீப்' யூ-ட்யூப் சேனலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ள படக்குழு. படத்திலும் அதன் தொடர்ச்சியாக, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற யூ-ட்யூப் சேனல் நடத்துபவர்களாக பிரதான கதாபாத்திரம் இருவரையும் வடிவமைத்துள்ளனர். படத்தின் இடைவேளைக்கு முன்பு, ஓர் அமைச்சர் டாஸ்மாக் கடையை மூட உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு காட்சி வரும். அது வரை அமெச்சூர்களின் கன்னி முயற்சியில் வந்து சிக்கிக் கொண்டோம் என எரிச்சலுடன் நெளிய வைக்கிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் ஓபியையும், மொக்கையையும் மருந்துக்கும்...