நூடுல்ஸ் விமர்சனம் :
ஒரு சாமானியனுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே “நூடுல்ஸ்” திரைப்படத்தின் ஒன்லைன்.‘தில்’ ‘அய்யப்பனும் கோஷியும்’ போன்ற படங்களிலும் இந்த ஒன்லைனரை காண முடியும். படம் துவங்கும் போது ஒரு மலையாளத் திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவிற்கு யதார்த்தமான ஒரு மேக்கிங்.ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் ஒன்றின் குடியிருப்புவாசிகள் மொட்டை மாடியில் கூடி பாட்டுக்குப் பாட்டு போட்டி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. எல்லா சனிக்கிழமை இரவுகளிலும் இது அவர்களின் வழமை என்பதும் தெரிய வருகிறது. விளையாட்டின் உற்சாகத்தில் சத்தம் சற்று அதிகமாக இருக்கிறது. இதை தொந்தரவாக நினைத்த யாரோ போலீஸில் புகார் தெரிவிக்க, கீழே அதே தெருவில் ரோந்து சென்று கொண்டிருக்கும் அ...