Shadow

Tag: நிகில்

தீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம்

தீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஹிந்தியில் தான் 'ஜூலி 2'. தமிழ் டப்பிங்கில், இயக்குநரின் பெயரோடு சேர்ந்தே தலைப்பிடப்பட்டுள்ளது. ஜூலி என்ற நடிகையின் அகச் சிக்கல்களைப் பேசுவதுதான் படத்தின் கதையாக இருந்திருக்க வேண்டும். ராய் லக்‌ஷ்மியின் பாலிவுட் அறிமுகம் மிக எரோடிக்காக (Erotic) அமைந்துள்ளது. படத்தில் கதை என்ற ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என்ற போதிலும், அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத திரைக்கதை, ராய் லக்‌ஷ்மியின் உடலையே மொய்த்துக் கொண்டிருக்கிறது. கதைக்கான துகிலுரிப்பாக இல்லாமல், துகிலுரிப்பிற்காகவே இப்படமென்ற இயக்குநர் தீபக் ஷிவ்தசானியின் தெளிவு திடுக்கிட வைக்கிறது. தனது தெளிவிற்கு நியாயம் கற்பித்துள்ளார் என்ற ரீதியில் மட்டும் அவரைப் பாராட்டலாம். நல்ல நடிகையாக எவ்வித சமரசத்துக்கும் உட்படாமல் இருக்க முயன்று, அதிலிருந்து வழுவி, தொப்புத் தொப்பென்று பிராவை நழுவ விட்டு, தன் உடலை மூலதனமாக்கி பிரபல நடிகை ஆகி விடுகிறார...
கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

சமூகம், சினிமா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டால், அதில் கிடைக்கும் பரிசுத்தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தைக் கொண்டு அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியிலனைத்து வசதிகளையும் கொண்ட நவீன நூலகம் கட்டுவதாகாறிவித்தார். உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் சினேகனின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சினேகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறுவதற்காகப் பல்வேறு தொண்டு அமைப்புகளும், திரைப்படத் துறையினரும், தொழிலதிபர்களும் முன் வரத் தயாராக உள்லனர். அதில் முதல் நபராக நடன இயக்குநரும் நடிகரும் சமூக ஆர்வலருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள், ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாக சினேகனின் சினேகம் செயலகத்தின் "மக்கள் நூலக"ப் பணிகளுக்காக வழங்கியுள்ளார். இவரின் முழுஒத்துழைப்போடு, சினேகனின் லட்சியம...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, 'சோட்டா ராஜ்' எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின்  ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை  இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந்த...
நட்புனா என்னானு தெரியுமா – படக்குழுவின் பரிசுப் போட்டி

நட்புனா என்னானு தெரியுமா – படக்குழுவின் பரிசுப் போட்டி

சினிமா, திரைத் துளி
லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் நட்புனா என்னானு தெரியுமா. விஜய் டிவி புகழ் கவின் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாகக் கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச் செல்லலாம்.. பரிசுப்பொருட்கள் விபரம்: • 32 கிராம் தங்க காசுகள் • 6 நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் (விமானம்,...
தல பொங்கலாக வரும் பில்லா பாண்டி

தல பொங்கலாக வரும் பில்லா பாண்டி

சினிமா, திரைத் துளி
தாரை தப்பட்டை, மருது, ஹரஹர மஹாதேவகி எனப்படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக "பில்லா பாண்டி" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக இறுதிகட்டப் பணிகளை நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும், படம் பொங்கல் அன்று வெளியிடப் படவுள்ளதாகவும் தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது...
இப்படம் ஜெயிக்கும்

இப்படம் ஜெயிக்கும்

சினிமா, திரைச் செய்தி
‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, “முதல் முறையாக நான் உதய் கூட நடிக்கிறேன். புதுசா நடிக்க வர்றப்ப ஒரு பயம் இருந்திருக்கும். ஆனா இப்ப நல்லா நடிக்கிறார். மானிட்டர் பார்த்து, சரியா நடிச்சிருக்கேனே எனப் பார்த்து சரி பண்ணிக்கிறார். எனக்கு மானிட்டர் பார்க்கும் பழக்கமில்லை. ஏன்னா எண்பதுகளில் நாங்க நடிக்கிறப்ப மானிட்டரோ கேரவனோ இல்லை. நான் பஸ் ஓட்டணும் எனச் சொன்னாங்க. நான் ஏன் பஸ் ஓட்டணும்? டூப் போட்டு எடுத்துக்கலாம்லன்னு கேட்டேன். இல்ல, அதுஒரு ஸ்ட்ராங் கேரக்டர் நீங்க தான் பண்ணணும்னு கெளரவ் சொன்னார். ‘உங்களுக்காக இந்தக் கேரக்டரை இப்படிச் செஞ்சிருக்கோம்!’ என ஒரு டைரக்டர் சொல்றப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப பெருமையாகவும் இருக்கு. அவர் கேட்டதால், நானே பஸ் ஓட்டிட்டேன். கொஞ்சம் பக்கு பக்குன்னு இருந்தது. ஏன்னா என்னை நம்பி பஸ்சில் 20 பேர் உட்கார்ந்தாங்க...
மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.! ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்கி...