Tag: நிகில்

அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர்
இந்தியாவில் நீடித்த வளர்ச்சி திட்டங்களுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக, பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், சர்வதேச விம்பிள்டன் டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைட் பார்க் எண்டர்டெய்ன்மெண்ட் குழுமத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் திரு. அமிர்தராஜ், ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், இப்பெருமையினைப் பெறும் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் அவருக்குக் கிடைத்துள்ள கூடுதல் அங்கீகாரம்.
சென்னையில் பிறந்து, சர்வதே அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான அஷோக் அமிர்தராஜ் தனது 30 வருட திரையுலக வாழ்வில் 100க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அவரது வெற்றிகரமான திரை வாழ்க்கையில் உலகளாவிய பாராட்டுகளையும், 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூலையும் அவர் படங்கள் பெ...

அதே கண்கள் விமர்சனம்
1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் "அதே கண்கள்". அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை.
ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
நெடுஞ்சாலை, ஜீரோ ஆகிய படங்களிலேயே தன் நடிப்பை நிரூபித்து விட்டவர் ஷிவதா. எனினும் இந்தப் படத்தின் மூலம் தான் பரவலாகக் கவனிக்கப்படுவார் என்பது திண்ணம். தீபா எனும் பாத்திரத்தில் பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார். அறிமுக காட்சியிலேயே அசத்திவிடுகிறார். அவரது குணாம்சமும் கடைசி ஃப்ரேம் வரை ஈர்க்கி...

பலம் விமர்சனம்
காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் 'திறமையுள்ள' அல்லது 'சாதித்து முடிக்கக் கூடிய' எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், 'பலம்' என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.
ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
உறுத்தாத டப்பிங் மிகப் பெரிய ஆறுதல். சில இடங்களில் கைதட்டலும் பெறுகிறது. ரோஹன் தன் மனைவி சுப்ரியாவிடம் ரஜினி குரலில் பேசும் காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். படத்தின் நாயகனான ரோஹனும் டப்பிங் ஆர்டிஸ்ட் தான்; அதுதான் அவன் பலமும். ஒட்டுமொத்த படமும் ஒரு மென்கவிதை போல் ...

பலம் காட்ட வரும் ஹ்ரிதிக் ரோஷன்
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான காபில் எனும் ஹிந்திப் படம் தமிழில், “பலம்” என்ற பெயரில் டப்பிங் செய்யப்படு வெளிவரவுள்ளது..
31 வயதான பிண்ணனிக் குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவைத் தனது இல்லத்திலும் கழிக்கிறான். பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவைச் சந்திக்க நேர, அவள் மீது காதல் வயப்படுகிறான்.
ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளைக் கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்வில் எதுவும் சாத்தியமே என்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரோஹன் சுப்ரியாவைப் பிரிய நேரிடுகிறது.
சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள்ள...

துருவங்கள் பதினாறு விமர்சனம்
'நைட் நாஸ்டால்ஜியா (Knight Nostalgia)' என்பது கார்த்திக் நரேனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இப்பெயர், படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இரவை நாஸ்டாலஜியா போல் தான் மனக்கண்ணில் கொண்டு வந்து அலசுகிறார் ரஹ்மான். ரஹ்மான் தான் இந்தப் படத்தில் வரும் knight எனக் கொள்ளலாம். கதை சொல்லும் பாணியும், தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள விதமும் மிகவும் ஃப்ரெஷாக உள்ளது. 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன் பார்வையாளரை முழுவதும் தன் வயப்படுத்தி உள்ளார்.
பூங்காவின் அருகே ஒரு வாலிபர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்; அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். இவ்விரு வழக்கையும் கவனிக்கும் இன்ஸ்பெக்டர் ரஹ்மானின் ஒரு பகலிரவு விசாரணை தான் படத்தின் கதை.
மிக மிகச் சாதாரணமான ஒரு கதை. கதையைக் கோர்வையாக்கி நேர்க்கோட்டில் பார்த்தால், எந்த முடிச்சுகளு...

எனக்கு வாய்த்த அடிமைகள் – ஸ்டில்ஸ்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

நண்பர்கள் – அன்புக்கு அடிமை
லவ் ஃபெயிலியரான ஒருத்தனின் மூன்று பெஸ்ட் ஃப்ரெண்ட்கள் படும் அவஸ்தை தான் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் கதை. தில்லுக்கு துட்டு 'லொள்ளு சபா' ராம்பாலாவிடம் பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி இப்படத்தை இயக்குகிறார்.
'ஆக, நண்பர்கள் தான் நாயகனின் அடிமைகளா?' என்ற கேள்விக்கு, "நண்பர்கள் அன்புக்கு அடிமை. நமக்காக எதுவும் செய்வார்கள் என்ற அர்த்தத்தில் தலைப்பை வைத்தோம். தலைவியிடம் (ஜெ.) சொல்லப்படும் இந்தப் பிரபலமான வசனத்தை எங்க கதைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்துக் கொண்டோம்" என்றார் மகேந்திரன் ராஜமணி.
"இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னை விட்டா வேறு யாரும் பொருந்த மாட்டாங்க எனக் கதை கேட்டதும் ஜெய் சொன்னார். படம் பார்த்ததும் ஆடியன்ஸும் அதைச் சொல்வாங்க. நான் படத்துக்குப் போகணும்னா நினைச்சா ஜாலியான ஒரு படத்துக்குத்தான் போவேன். அந்த மாதிரி தான் என் படத்தையும் எடுத்திருக்கேன். கண்டிப்பா மக்களும் இந்தப் படத்தை ந...

எனக்கு வாய்த்த அடிமைகள் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

“பலே” வெள்ளையத் தேவா விமர்சனம்
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில், சிவாஜி தன் தளபதி ஜெமினியைப் பார்த்துச் சொல்லும் பிரபலமான வசனத்தைப் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். வெற்றியை நோக்கிப் போகும் பொழுது, கூட இருந்து உற்சாகம் தரச் சொல்லப்படுவது "பலே". இப்படத்தின் நாயகனது செயல், அப்படி பலே சொல்லிப் பாராட்டும்படி (!?) இருக்கும் என்பதை வலியுறுத்தும் காரணப் பெயராகத் தலைப்பை வைத்துள்ளனர்.
வயலூருக்கு ட்ரான்ஸ்ஃபராகி வருகிறார்கள் ஃபோஸ்ட் மாஸ்டர் ரோகினியும் அவர் மகன் சசிகுமாரும். அவருக்கு தான்யா மீது கண்டதும் காதல் மலர்வதோடு உள்ளூர் கேபிள்காரருடன் தகராறாகி விடுகிறது. காதலும் தகராறும் என்னானது என்பதே படத்தின் கதை.
தணக்கனாக சங்கிலி முருகன் நடித்துள்ளார். கோவை சரளாவை நடிக்க விட்டு விட்டு, அசால்ட்டாக ஸ்கோர் செய்குறார். மிக வலுவான கேரக்டர் ரோல்களை இயக்குநர்கள் அவருக்குத் தரலாம். 'செல்ஃபி' காத்தாயியாக கோவை சரளா. படம் இவரை நம்பித்தான் எடுக்...

பலே சசிகுமார்
“மகளிர் மட்டும்-க்குப் பிறகு ஜாலியான சூழல் இருந்த படப்பிடிப்பு இங்கே தான் மீண்டும் அமைந்தது. டிமானிட்டைசேஷன், புயல், அம்மாவின் மறைவு என மக்கள் இந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டங்களை மறந்து குடும்பத்தோடு ரசித்து மகிழ நல்லதொரு காமெடிப் படம்” என்றார் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ரோகினி.
“அரிவாள், முரட்டு மீசை என ரத்தம் தெறிக்கிற சசிகுமாரைத் திரையில் பார்த்துட்டு, ‘நானோ காமெடி பீஸ்? எப்படி செட் ஆகும்?’ எனப் பயந்துக்கிட்டே ஷூட்டிங்கிற்குப் போனேன். ஆனா, நேரில் ரொம்ப அமைதியானவர். அவர் கம்பெனில பேமென்ட் எல்லாம் வீடு தேடி சரியாக வந்துடுது. வருஷத்துக்கு கம்பெனி புரொடக்ஷன்ஸ் 10 படம் பண்ணணும். அத்தனையிலும் எனக்கு வாய்ப்புக் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்” என்றார் கோவை சரளா.
“இந்தக் கதையை சோலை பிரகாஷ் சொன்னதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதில் வரும் பாட்டி கேரக்டரைப் பண்ணக் கூடியவர்கள் இரண்டு ...






