Shadow

Tag: யுவராஜ்

ஓ மை டாக் | 100 நாய்களுக்குப் பயிற்சி கொடுத்த ட்ரெய்னர் ராஜா

ஓ மை டாக் | 100 நாய்களுக்குப் பயிற்சி கொடுத்த ட்ரெய்னர் ராஜா

சினிமா, திரைத் துளி
‘ஓ மை டாக்’ படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணியாற்றியுள்ளனர் படக்குழு.அவ்வனுபவம் பற்றிப் பேசிய அருண் விஜய், “இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளது. ட்ரெய்னர் ராஜாவிற்கு ஒரு பெரிய நன்றி. மேலும் இயக்குநர் சரோவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார்” என்றார்.இயக்குநர் சரோவ் சண்முகம் பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம்.இந்தக் கணிப்புகளையும், நே...
ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிமுக குழந்தை நட்சத்திரம் அர்னவ் விஜய் பேசுகையில்,'' இந்தப் படத்தில் நடிப்பதற்...
ஓ மை டாக் – டிஸ்னியின் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்

ஓ மை டாக் – டிஸ்னியின் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், ''ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழ...
“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘ஓ மை டாக்’ படக்குழுவினருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்த்து. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் பேசுகையில், ''வால்ட் டிஸ்னி நிறு...
வாய்தா – வர்ணத்தையும் வர்க்கத்தையும் பேசும் பொழுதுபோக்கு சமூகப்படம்

வாய்தா – வர்ணத்தையும் வர்க்கத்தையும் பேசும் பொழுதுபோக்கு சமூகப்படம்

சினிமா, திரைச் செய்தி
புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'வாய்தா' படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வாய்தா'. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு, ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று செ...
ஓ மை டாக் – கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பாவின் கதை

ஓ மை டாக் – கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பாவின் கதை

சினிமா, திரைத் துளி
"ஓ மை டாக் (Oh My Dog)” படம், ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே, 240 நாடுகளிலும் மற்றுமுள்ள பிரதேசங்களிலும் ஏப்ரல் 21ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படம் "2டி என்டர்டெய்ன்மென்ட்" பேனரில் தயாரிக்கப்பட்டு, சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த (தாத்தா, அப்பா, மகன் மூவரின்) கதாபாத்திரங்களின் புகழ்பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும். அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப்பிராணியை விரும்புபவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று. "ஓ மை டாக்" அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய உள்ளத்தைத் தொடும் கதையாகும். ஒவ்வொரு குழந்தையும் குடும்பமும் பார்த்து மகிழவேண்டிய படம். எல்லாக் குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாப...
மஹாவீர்யர் – டீசர்

மஹாவீர்யர் – டீசர்

Teaser, காணொளிகள்
நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையைத் தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். மஹாவீர்யார் திரைப்படம்...
ரவி தேஜா | டைகரின் உறுமல் உகாதியில் தொடங்கியது

ரவி தேஜா | டைகரின் உறுமல் உகாதியில் தொடங்கியது

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
'மாஸ் மகாராஜா' ரவி தேஜா, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், இயக்குநர் வம்சி ஆகியோரின் கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் எனுமிடத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது. தெலுங்குத் திரை உலகம் இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான ப்ரீ லுக் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ஊடக பிரபலம் தரன் ஆதர்ஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் முதல் பிரத்தியேக படப்பிடிப்பை மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இந்தத் திரைப்படத்தை வெளியிடும் தேஜ் நாராயணன் அகர்வால் கேமராவை இயக்க,...
50வது நாளில் மகான் – நெகிழ்ச்சியில் விக்ரம்

50வது நாளில் மகான் – நெகிழ்ச்சியில் விக்ரம்

சினிமா, திரைத் துளி
‘நம்ம வாழ்க்கை.. சும்மா ஏதோ ஒரு பணக்காரனா வாழ்ந்திட்டு செத்துடணுங்கிற வாழ்க்கையா இருக்கக்கூடாது. ஒரு வாழ்க்கை. வரலாறா வாழ்ந்திடனும்.' - காந்தி மகான்.வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியைத் தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று நினைக்கும்போது, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. சோஷியல் மீடியாவில் ரீல்ஸ், மீம்ஸ், டிவீட்ஸ் & மெஸெஜெஸ் வாயிலாக மகானைக் கொண்டாடிய அனைவரின் அன்பையும் ஆதரவையும் உணர்ந்தேன். இந்த அன்புதான் என்னை மென்மேலும் பாடுபட ஊக்குவிக்கிறது. இதை என்றும் அன்புடனும் பணிவுடனும் நன்றி மறவாமல் நினைவில் கொள்வேன். அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானைக் கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜ...
ரவி தேஜாவின் ஆக்ஷனில் ‘டைகர்’

ரவி தேஜாவின் ஆக்ஷனில் ‘டைகர்’

Movie Posters, அயல் சினிமா, கேலரி, சினிமா, திரைத் துளி
‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. அத்துடன் இப்படத்தின் ப்ரீ- லுக்கும் வெளியிடப்படுகிறது. ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக பான்- இந்தியா படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதனை முன்னணி இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராக இருக்கும் இந்தத் திரைப்படத்தை 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படத்தைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். ‘டைகர் ’நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா, உகாதி தினமான ஏப்ரல் 2ஆம் தேதியன்று மாதப்பூரில் உள்ள ஹெச்.ஐ.சி.சி என்னுமிடத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் ‘டைகர்’ படத்தின் ப்ரீ லுக் மதியம் 12 ம...
“மிர்ச்சி மியூசிக் விருதுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பனம்” – அருண்மொழி மாணிக்கம்

“மிர்ச்சி மியூசிக் விருதுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பனம்” – அருண்மொழி மாணிக்கம்

சினிமா, திரைத் துளி
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்தியத் திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக இசைஞானி இளையராஜாவுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடலாசிரியர் ’பிரிவில், ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு' எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காகப் பாடலாசிரியர் கபிலனுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடல்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் ...
ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

கேலரி, சினிமா, திரைத் துளி
ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்த...
மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி

மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி

சினிமா, திரைத் துளி
அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. தற்போது அந்நிறுவனத்தின் 'மாயோன்' படம் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில், அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக 'மாயோன்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பெரிய திரையில் முழு அனுபவத்தைப் பெறுவதற்காகத் தற்போது படக்குழு 'ஆடியோ விளக்க' பாணியிலான திரைப்படப் பதிப்பில் ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் 'மாயோன்' படத்தின் திரைக்கதையை எழுத, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீகப் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். மாயோனுக்கு 'யு' சான்றிதழ் கி...
JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் படம்

JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM” படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன்மொழி இந்தியப் பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும். இது, அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்! JGM திரைப்படத்தை சார்மி கெளர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், மற்றுமொரு அட்டகாசமான...
மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி

மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி

சினிமா, திரைச் செய்தி
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா - சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 ஆவது படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மென்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் மேற...