Shadow

Tag: Disney HotStar

Bro Daddy விமர்சனம்

Bro Daddy விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில் இந்தப் படத்துக்காக ஒதுக்குங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பொச்சடிப்பை நாக்குத் தருவது போல Bro Daddy பார்த்து முடித்ததும் இதே நினைப்பில் என்னைப் போல நீங்களும் சுற்றக் கூடும். மகனின் தோளில் கை போட்டுக் கலாய்த்துப் பேசும் நண்பனின் தந்தையைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த ரம்மியமான நினைவுகளையும் கிளப்பியது. லூசிபர் படைப்பு எப்படி பிருதிவிராஜ் சுகுமாரனை ஒரு அற்புதமான படைப்பாளியாக அடையாளப்படுத்தியதோ, அதற்கு நேர் மாறான கும்மாளம் கொட்டும் இன்னொரு பிரிவிலும் கூடத் தன்னால் சாதிக்க முடியும் என்று இங்கே நிரூபித்திருக்கிறார். அண்மையில் "சாய் வித் சித்ரா" பேட்டியில் இயக்குநர் ராதாமோகன் பிருதிவிராஜ் தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு வலுவான சினிமா ந...
அகண்டா விமர்சனம்

அகண்டா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
அகண்டம் என்றால் முழுமை, பரம்பொருள், கடவுள் எனப் பொருள்படும். படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு இரண்டு வேடங்கள். அகண்டா ருத்ர சிக்கந்தர் அகோரி, மற்றும் ஊருக்கு நல்லது செய்யும் பணக்காரர் முரளி கிருஷ்ணா. பாலய்யா படத்தில் ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை மட்டும் தந்தால் போதுமென்ற அதி தெளிவுடன் படத்தை இயக்கியுள்ளார் பொய்யபதி ஸ்ரீனு (Boyapati Srinu). அகண்டா அறிமுகமாகும் பொழுது 40 பேரைக் கொல்கிறார். க்ளைமேக்ஸில் 150 பேரைக் கொல்கிறார். பாலய்யா என்றாலே அதிநாயகன் (சூப்பர் ஹீரோ) தானே! தொடையைத் தட்டி ட்ரெயினைப் பின்னுக்கு அனுப்பும் விசேஷ சக்தி பல்லண்டத்திலேயே (Multiverse) இவர் ஒருவருக்குத்தான் உண்டு. சிவன் கையிலுள்ள திரிசூலத்தில் கூட மூன்று பிளேடு (blade) தான் இருக்கும். அகண்டா கையிலிருப்பதோ ஐந்து பிளேடுகளுடன் ஐஞ்சூலமாய் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டத்திற்கு மிக முக்கிய காரணம், A.S.பிரகாஷின் கலை இயக...
அன்பறிவு விமர்சனம்

அன்பறிவு விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம். அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். அன்பழகனும் அறிவழகனும் இரட்டையர்கள். மனைவியிடம் அன்பை விட்டுவிட்டு, தன்னுடன் அறிவை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார் இரட்டையர்களின் தந்தை. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. இரட்டையர்கள் ஒருநாள் சந்தித்துக் கொண்டு படம் சுபமாக முடியும் என்பது வி.எஸ்.ராகவன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் சினிமா ஃபார்முலா. ஆக, எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதில் மட்டுமே சுவாரசியம் காட்ட இயலும். ஆனால் சுவாரசியம் ஒரு பொருட்டே இல்லை என்ற ரீதியில் திரைக்கதை பயணிக்கிறது. படம் தொடங்கியதும் வில்லன் விதார்த் மைண்ட் வாய்ஸில், குடும்பம் எப்படிப் பிரிகிறது, ஊர் ஒன்றுபடாமல் ஏன் இருக்கிறது என சுருக்கமாக ஃப்ளாஷ்-பேக்கை முடித்து விடுகிறார்கள். பிறகு கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சுமார் ஒ...
கலாட்டா கல்யாணம் விமர்சனம்

கலாட்டா கல்யாணம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தனுஷ் நடித்த ஹிந்தி டப்பிங் படம். பீஹார் செல்லும் மருத்துவர் விஸ்வநாத் ஐயருக்கு, ரின்கு எனும் பெண்ணுடன் கலாட்டா ஏதுமின்றிக் கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர் ரின்குவின் உறவினர்கள். அதன் பின் ரின்கு செய்யும் கலாட்டாவால், விஸ்வநாதினுடைய கல்யாணம் நிற்கிறது. விஸ்வநாதிற்கு ரின்கு மீது காதல் ஏற்பட, ரின்குவோ சஜ்ஜத் அலி கான் என்பவரைக் காதலிக்கிறாள். தன் மனைவி மீதான விஸ்வநாதின் காதல் வென்றதா, சஜ்ஜத் அலி கானுடனான ரின்குவின் கலாட்டா காதல் வென்றதா என்பதே படத்தின் கதை. மிகவும் கலர்ஃபுல்லான படம். எதையுமே சீரியஸாக அணுகாமல் ஓர் இளமைத் துள்ளலுடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. ரின்குவாக நடித்துள்ள சாரா அலி கான், படத்தின் இந்தத் துள்ளலான ஓட்டத்திற்கு உதவியுள்ளார். மணிரத்னம் பட நாயகிகளை ஞாபகப்படுத்துகிறார். மருத்துவர் விஸ்வநாத் ஐயராக தனுஷும், சர்க்கஸில் மேஜிக் செய்யும் சஜ்ஜத் ...
வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர்

வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
வித்யூத் ஜம்வால் நாயகனாக நடித்திருக்கும் 'சனக்' படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 5 அன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்தியேகமாக வெளியாகிறது. ஹிந்தி திரை உலகில் பணயக் கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து 'சனக்- ஹோப் அண்டர் சீஜ்' திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும் வகையில் டிரைலர் அமைந்திருக்கிறது. கனிஷ்க் வர்மா இயக்கியிருக்...
டெடி விமர்சனம்

டெடி விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனின் ஐந்தாவது படம் டெடி. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்: டிக்: டிக் என அவரது அனைத்துப் படங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வித்தியாசமான கரு கொண்ட படங்கள். டெடியும் அப்படியே! OBE – Out of Body Experience. உடலுக்கு வெளியே நிகழும் அனுபவத்தை அழகான புனைவுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார் சக்தி செளந்தர் ராஜன். அவ்வனுபவத்தில் உடலை விட்டு உயிர் வெளியேறி விடும். அவ்வுயிருக்கு ஏற்படும் அனுபவங்களையே OBE என அழைப்பார்கள். புனைவின் சுவாரசியத்திற்காக, கோமாவில் உள்ள ஸ்ரீயின் உயிர், டெடி எனும் கரடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அதாவது ஸ்ரீயின் உயிர் ஒரே சமயம் அவரது உடலிலும் இழையோடுகிறது, கரடியின் உடலிலும் இருக்கிறது. மாயாஜாலம் போல! அது புனைவிற்கு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. அழகான சயிஷா, படத்தில் டெடியாக மட்டும் வலம் வருவது சற்றே வருத்தமான விஷயம். எனினும் டெடியின்...
மூக்குத்தி அம்மன் விமர்சனம்

மூக்குத்தி அம்மன் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அமீர் கானின் PK படம் தான் இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்றாலும், ஆன்மிகத்தின் பெயரால் கற்பனைக்கு எட்டாத அளவு சம்பாதிப்பவர்களைக் கலாய்த்து ஒரு படத்தை உருவாக்கிவிட்டார் RJ பாலாஜி. NJ சரவணனோடு இணைந்து, முதல் முறையாக இயக்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் RJ பாலாஜி.  மூக்குத்தி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 11000 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த நினைக்கிறார் பகவதி பாபா எனும் கார்போரெட் சாமியார். அதை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லப் போராடும் நிருபரான எங்கல்ஸ் ராமசாமியின் முன் பிரசன்னமாகும் அவரது குலதெய்வமான மூக்குத்தி அம்மன், அவரது கோயிலை உலகப் புகழடையுமாறு செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். ராமசாமியால் பகவதி பாபாவைத் தடுக்க முடிந்ததா, அம்மனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. ஸ்னீக்-பீக்கில், ஏசுவை தனது நண்பரென மனோபாலாவிடம் சொல்லும் மூக்குத்தி அம்மன், திருப்பதி வெங்கடாசலப...