Shadow

Tag: Disney HotStar

பிரேமலு | ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

பிரேமலு | ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

சினிமா, திரைச் செய்தி
தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதரா...
ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'சிம்ஹா', 'லெஜண்ட்', 'அகண்டா' முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் 'ஹமாம்' சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு எடுத்தியம்பியுள்ளார் ஸ்ரீனு. இரண்டு வில்லன்களின் அறிமுகம் காட்டப்பட்டவுடன், ஆந்திரக் காரத்துடன் முழுச் சாப்பாடு விருந்து தயாரென நினைக்கையில், அது தொடங்குகிறது. அது என்றால் படத்தின் 'அட்டாக்' வெர்ஷன். ரெகுலராக ஜிம்முக்குப் போய் நன்றாக உடலை வளர்த்து வைத்திருக்கும் ஒ...
சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

OTT, Web Series, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன், "சட்னி சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்கக் காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார். நடிகர் யோகிபாபு, "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர...
“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

OTT, சினிமா, திரைத் துளி
இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான குட் நைட் திரைப்படத்தை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக ஜூலை 3 முதல் வழங்குகிறது. இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில், மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில், அருமையான நகைச்சுவை டிராமாவான குட் நைட் திரைப்படம் வெளியானது. குறட்டை ஒலியும், அது சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வுகளையும் அதன் மீதான கருத்துக்களையும் அலசுகிறது இந்தப் படம். ஒருவனின் வாழ்க்கையையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது. குறட்டை விடுவதால், அவதிப்படும் மணிகண்டனுக்கும், அவரது மனைவியாக நடித்துள்ள மீதாவிற்கும் உள்ள உறவையும், அவர்கள் வாழ்வில் குறட்டை ஏற்படுத்தும் தாக்கங்களையும் நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இப்படம். மோகனின் குறட்டை சத்தம் அனுவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இறு...
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு, பாரையில் வீடு, நீண்டக்கரா

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு, பாரையில் வீடு, நீண்டக்கரா

OTT, Web Series, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு, பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது.விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதலியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால் மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு க்ளூ, ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு, பாரையில் வீடு, நீண...
மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகரும் தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் க்ளாப் அடித்துத் துவக்கி வைத்தார். தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் ...
சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினைப் பிரத்தியேகமாக நேரடித் திரைப்படமாக வெளியிடுகிறது சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'வட்டம்' படத்தினை நேரடித் திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ ஒரு த்ரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாபாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்தத் தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்...
“எல்லாமே ஜாலி தான்” – கனா காணும் காலங்கள்

“எல்லாமே ஜாலி தான்” – கனா காணும் காலங்கள்

Songs, காணொளிகள்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் “கனா காணும் காலங்கள்” தொடருக்காக, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆன்த்தம் பாடல், சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடுகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும், “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியமான இசை விருந்தை அளித்துள்ளது. இத்தொடருக்காக மகிழ்ச்சியான, வேடிக்கை நிறைந்த பள்ளி நினைவுகள் போற்றும் ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் தீம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு சிறந்த இசை இயக்குநர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார், பிரபல...
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை

சினிமா, திரைத் துளி
விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்தியேகமாக வெளியானது. வாரயிறுதியில் அதிக பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற புதிய சாதனையையும் விக்ரம் படம் படைத்துள்ளது. இந்த மெகா ஆக்‌ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க பார்வையாளர்களுக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது. கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது அந்தந்த மொழி பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம் மற்றும் மனத...
புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

சினிமா, திரைத் துளி
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளைத் தந்த தமிழ்த் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திட்ட இந்தத் தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடகத் துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனித...
Bro Daddy விமர்சனம்

Bro Daddy விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில் இந்தப் படத்துக்காக ஒதுக்குங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பொச்சடிப்பை நாக்குத் தருவது போல Bro Daddy பார்த்து முடித்ததும் இதே நினைப்பில் என்னைப் போல நீங்களும் சுற்றக் கூடும். மகனின் தோளில் கை போட்டுக் கலாய்த்துப் பேசும் நண்பனின் தந்தையைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த ரம்மியமான நினைவுகளையும் கிளப்பியது. லூசிபர் படைப்பு எப்படி பிருதிவிராஜ் சுகுமாரனை ஒரு அற்புதமான படைப்பாளியாக அடையாளப்படுத்தியதோ, அதற்கு நேர் மாறான கும்மாளம் கொட்டும் இன்னொரு பிரிவிலும் கூடத் தன்னால் சாதிக்க முடியும் என்று இங்கே நிரூபித்திருக்கிறார். அண்மையில் "சாய் வித் சித்ரா" பேட்டியில் இயக்குநர் ராதாமோகன் பிருதிவிராஜ் தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு வலுவான சினிமா...
அகண்டா விமர்சனம்

அகண்டா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
அகண்டம் என்றால் முழுமை, பரம்பொருள், கடவுள் எனப் பொருள்படும். படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு இரண்டு வேடங்கள். அகண்டா ருத்ர சிக்கந்தர் அகோரி, மற்றும் ஊருக்கு நல்லது செய்யும் பணக்காரர் முரளி கிருஷ்ணா. பாலய்யா படத்தில் ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை மட்டும் தந்தால் போதுமென்ற அதி தெளிவுடன் படத்தை இயக்கியுள்ளார் பொய்யபதி ஸ்ரீனு (Boyapati Srinu). அகண்டா அறிமுகமாகும் பொழுது 40 பேரைக் கொல்கிறார். க்ளைமேக்ஸில் 150 பேரைக் கொல்கிறார். பாலய்யா என்றாலே அதிநாயகன் (சூப்பர் ஹீரோ) தானே! தொடையைத் தட்டி ட்ரெயினைப் பின்னுக்கு அனுப்பும் விசேஷ சக்தி பல்லண்டத்திலேயே (Multiverse) இவர் ஒருவருக்குத்தான் உண்டு. சிவன் கையிலுள்ள திரிசூலத்தில் கூட மூன்று பிளேடு (blade) தான் இருக்கும். அகண்டா கையிலிருப்பதோ ஐந்து பிளேடுகளுடன் ஐஞ்சூலமாய் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டத்திற்கு மிக முக்கிய காரணம், A.S.பிரகாஷின் கலை இ...
அன்பறிவு விமர்சனம்

அன்பறிவு விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம். அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். அன்பழகனும் அறிவழகனும் இரட்டையர்கள். மனைவியிடம் அன்பை விட்டுவிட்டு, தன்னுடன் அறிவை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார் இரட்டையர்களின் தந்தை. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. இரட்டையர்கள் ஒருநாள் சந்தித்துக் கொண்டு படம் சுபமாக முடியும் என்பது வி.எஸ்.ராகவன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் சினிமா ஃபார்முலா. ஆக, எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதில் மட்டுமே சுவாரசியம் காட்ட இயலும். ஆனால் சுவாரசியம் ஒரு பொருட்டே இல்லை என்ற ரீதியில் திரைக்கதை பயணிக்கிறது. படம் தொடங்கியதும் வில்லன் விதார்த் மைண்ட் வாய்ஸில், குடும்பம் எப்படிப் பிரிகிறது, ஊர் ஒன்றுபடாமல் ஏன் இருக்கிறது என சுருக்கமாக ஃப்ளாஷ்-பேக்கை முடித்து விடுகிறார்கள். பிறகு கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சுமார்...
கலாட்டா கல்யாணம் விமர்சனம்

கலாட்டா கல்யாணம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தனுஷ் நடித்த ஹிந்தி டப்பிங் படம். பீஹார் செல்லும் மருத்துவர் விஸ்வநாத் ஐயருக்கு, ரின்கு எனும் பெண்ணுடன் கலாட்டா ஏதுமின்றிக் கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர் ரின்குவின் உறவினர்கள். அதன் பின் ரின்கு செய்யும் கலாட்டாவால், விஸ்வநாதினுடைய கல்யாணம் நிற்கிறது. விஸ்வநாதிற்கு ரின்கு மீது காதல் ஏற்பட, ரின்குவோ சஜ்ஜத் அலி கான் என்பவரைக் காதலிக்கிறாள். தன் மனைவி மீதான விஸ்வநாதின் காதல் வென்றதா, சஜ்ஜத் அலி கானுடனான ரின்குவின் கலாட்டா காதல் வென்றதா என்பதே படத்தின் கதை. மிகவும் கலர்ஃபுல்லான படம். எதையுமே சீரியஸாக அணுகாமல் ஓர் இளமைத் துள்ளலுடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. ரின்குவாக நடித்துள்ள சாரா அலி கான், படத்தின் இந்தத் துள்ளலான ஓட்டத்திற்கு உதவியுள்ளார். மணிரத்னம் பட நாயகிகளை ஞாபகப்படுத்துகிறார். மருத்துவர் விஸ்வநாத் ஐயராக தனுஷும், சர்க்கஸில் மேஜிக் செய்யும் சஜ்ஜத...
வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர்

வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
வித்யூத் ஜம்வால் நாயகனாக நடித்திருக்கும் 'சனக்' படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 5 அன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்தியேகமாக வெளியாகிறது. ஹிந்தி திரை உலகில் பணயக் கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து 'சனக்- ஹோப் அண்டர் சீஜ்' திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும் வகையில் டிரைலர் அமைந்திருக்கிறது. கனிஷ்க் வர்மா இயக்கியிரு...