Shadow

Tag: Disney Plus HotStar

ஹாட்ஸ்டாரில் இந்தி ‘பாகீரா’ ஸ்ட்ரீமிங்

ஹாட்ஸ்டாரில் இந்தி ‘பாகீரா’ ஸ்ட்ரீமிங்

OTT, அயல் சினிமா, சினிமா
KGF, காந்தாரா மற்றும் சலார் போன்ற சினிமா மைல்கற்களை வழங்கியபின் ஹோம்பாலே பிலிம்ஸின் பாரம்பரியம் பாகீராவுடன் தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டவுடன் இப்படம் 2024 ஆண்டின் மிக அதிக வசூலைப் பெற்ற கன்னடப் படமாக மாறியது. இந்தச் சமூக காவலன் த்ரில்லர், உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்காகத் தனது உலகளாவிய டிஜிட்டல் பிரவேசத்தின் மூலம் ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து அரங்கேறவிருக்கிறது.டாக்டர் சூரியால் இயக்கப்பட்டு பிரஷாந்த் நீல்-ஆல் எழுதப்பட்ட பாகீரா படம், தங்கப்பதக்கம் வென்ற மற்றும் நீதித்துறையின் வரம்புகளினால் மனமயக்கமுற்று சமூகக் காவலராகும் IPS அதிகாரியான வேதாந்தின் (ஸ்ரீமுரளி) கதையைக் கூறுகிறது. வேதாந்த் பாகீராவின் முகமூடியை அணிந்த பின் அவர் மிக சக்தி வாய்ந்த வில்லனையும் (கருடா ராம்) அயராத ஒரு CBI அதிகாரியையும் (பிரகாஷ் ராய்) நீதிக்கான போர்க்களத்தில்...
Parachute விமர்சனம்

Parachute விமர்சனம்

OTT, Web Series, இது புதிது, திரை விமர்சனம்
பாராசூட் என்பது டிவிஎஸ் XL இன் பெயர். தந்தையின் அடிக்கு மிகவும் பயப்படும் பதினொரு வயதாகும் சிறுவன் வருண், தன் ஏழு வயது தங்கை ருத்ராவை மகிழ்விக்க பாராசூட்டில் அவளை அழைத்துச் செல்கிறான். வண்டி காணாமல் போய்விடுகிறது. தந்தையின் கோபத்தை எதிர்கொள்ள அஞ்சி, பாராசூட்டை மீட்கும் முயற்சியில் இறங்கும் சிறுவர்கள் ஒரு பக்கம், பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள் மறுபக்கம் என தொடர் நல்லதொரு எமோஷ்னல் ஜர்னிக்கு உத்திரவாதம் அளித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான மூர்த்தி, பிலிப்ஸ் எனும் குடிகார கதாபாத்திரத்தில் வருகிறார். குறைவான திரை நேரத்திற்கே வந்தாலும் நிறைவாகத் தன் பங்கைச் செய்து கலகலப்புக்கு உதவியுள்ளார். மறுபடியும், சக மனிதர்கள் மீது அக்கறையுள்ள ஒரு டெம்ப்ளேட் கதாபாத்திரத்தில் பவா செல்லதுரை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் விறைப்பாக வந்து செல்கிறார். காளி வெங்கட்டிற்கு மீண்டுமொரு அட்டகாசமான குணசித்திர வேடம...
1000 பேபிஸ் | டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஸ்பென்ஸ் தொடர்

1000 பேபிஸ் | டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஸ்பென்ஸ் தொடர்

OTT, Web Series
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "1000 பேபிஸ்" தொடர், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாராத் திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது."1000 பேபிஸ்" தொடரில் நீனா குப்தாவும், ரகுமானும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார். நஜீம் கோயா, அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளனர்.நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த் முரளி, ஜேம்ஸ் ஆலியா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.ஃபைஸ் சித்திக்கின் அற்புதமா...
வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களின்...
மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
சத்யராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' எனும் இணைய தொடரின் ட்ரெய்லரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது. இந்தத் தொடர் தவரும் ஆகஸ்ட் 16 முதல், ஒளிபரப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.  இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார். நடிகர் சத்யராஜுடன் பழம...
சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

OTT, Web Series
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான நகைச்சுவை சரவெடி வகைமையில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. அஜீஸ் அசோக் இசையமைத்துள்ள மூன்றாவது வெப்சீரிஸ் இது. அவரது இசையில், ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இரண்டாவது வெப் சீரிஸ் இது. நடிகர் இளங்கோ குமரவேல், "இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன். அவரது முதல் சீரிஸிலும் இருக்கிறேன். மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர், ரைட்டர் பொன் பார்த்திபன் என நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு இய...
சட்னி சாம்பார் – யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ்

சட்னி சாம்பார் – யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ்

OTT, Web Series
இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், 'சட்னி - சாம்பார்' சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.  இந்த பெப்பி ராப் பாடல், உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கு இடையேயான போரையும், உணவுகளுக்கு இடையிலான நிலைப்பாட்டையும் காட்டுகிறது. இந்த ராப் பாடல் வரிகளை ராகுல் ஸ்ரீதர் (ஹிப்பி எழுத்தாளர்) எழுதியுள்ளார். நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார். ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிமுகப்படு...
பிரேமலு | ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

பிரேமலு | ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

சினிமா, திரைச் செய்தி
தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்...
‘ஹார்ட் பீட்’ சீரீஸ் -ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன?

‘ஹார்ட் பீட்’ சீரீஸ் -ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன?

OTT
‘ஹார்ட் பீட்’ சீரிஸ் ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கி வருகிறது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்குக் கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான் தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள். இந்த சூழ் நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றாள்? ரீனாவை மகளாக ஏற்றுகொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா? மேலான கேள்விகளுக்கு ரீனாவைப் போன்று ரசிகர்களும் பதிலை எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆச்சரியமான ட்விஸ்ட், அடுத்த வார அத்தியாயத்திற்காக, ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மேலும் பல திருப்பங்களுடன் , ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ‘ஹார்ட் பீட்’ சீரிஸ...
சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

OTT, Web Series, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன், "சட்னி சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்கக் காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார். நடிகர் யோகிபாபு, "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர...