Shadow

Tag: Latest movie reviews in Tamil

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பின் தனுஷ் இயக்கியிருக்கும் 4 ஆவது படம் “இட்லி கடை” ஆகும். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷூடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தேனி மாவட்டத்து சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இயற்கையான முறையில் நல்ல கைப்பக்குவத்துடன் சுவையான இட்லி சமைப்பவர் ராஜ்கிரண். அவரது மகன் தனுஷ் படிப்பை முடித்து வசதியாக வாழ வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார். பாங்காங்கில் தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்யும் தனுஷைச் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையில் திருமணத்திற்குச்...
பல்டி விமர்சனம்

பல்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மெட்ராஸ்காரன் படத்துக்குப் பிறகு ஷேன் நிகாம் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம் பல்டி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். சாந்தனு, செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் தான் சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். தமிழக, கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாவர். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கிறார்கள். அதே பகுதியில் விதவிதமான வட்டித் தொழில் செய்து வரும் மூன்று கேங்குகள் இடையே கடும் தொழில் போட்டி நிலவுகிறது. செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் பூர்ணிமா இந்த மூன்று கேங்குமே ஒருவரை ஒருவர் அழிக்கக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்த...
சரீரம் விமர்சனம் | Sareeram review

சரீரம் விமர்சனம் | Sareeram review

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் காதலுக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்த காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலுக்காக கடவுளின் படைப்பில் கிடைத்த சரீரத்தைத் தியாகம் செய்யும் ஒரு காதல் ஜோடியின் கதையைச் சொல்லும் ஒரு படம் தான் சரீரம். இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, இயக்கித் தயாரித்துள்ள, உன்னதமான காதலையும், கடவுள் தந்த சரீரத்தின் பெருமையைப் பேசும் இப்படத்தில், புதுமுகங்கள் தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும்போதே காதல் வயப்படும் ஜோடியின் காதலுக்கு நாயகியின் பணக்காரக் குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களிடம் இருந்து ஓடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். அங்கும் அவர்கள் துரத்த தங்கள் புனிதமான காதலுக்காக நாயகன் பெண்ணாகவும், நாயகி ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அவர்கள் முழுமையாகப் பாலின மாற்றத்தை அடைந்தார்களா, அந்தக்...
காயல் விமர்சனம் | Kaayal review

காயல் விமர்சனம் | Kaayal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காயல் – காய்தல் – வாடுதல் திருமதி தேன்மொழி தற்கொலை புரிந்து கொள்ள, அவரைச் சார்ந்தோர்கள் எல்லாம் துக்கத்தில் வாடுகின்றனர். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பதை ஒரு சமூக நோக்குடன் அணுகுகிறது திரைக்கதை. காயல், எழுத்தாளர் தமயந்தியின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி, பிச்சாவரம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் என படத்தின் கதை நெய்தல் திணைகளிலேயே பயணிக்கிறது. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் அக ஒழுக்க உரிப்பொருளாகும். இரங்கலுக்கு துக்கம், சோகம், வருத்தம் எனும் அர்த்தங்கள் வந்தாலும், இப்படத்தின் கருவான இழந்தவரை எண்ணி வருந்துதல் என்பதோடு சாலப் பொருந்துகிறது. தேன்மொழியாக காயத்ரி நடித்துள்ளார். தீமையைக் கண்டால் சீறியெழும் பெண்ணாகப் படைக்கப்பட்டிருந்தாலும், தேன்மொழி பாத்திரத்தை முடித்த விதத்தில் ஏமாற்றத்தை அளித்துள்ளார் தமயந்தி. படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவ...
மதராஸி விமர்சனம் | Madharaasi review

மதராஸி விமர்சனம் | Madharaasi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
துப்பாக்கிக் கலாச்சாரத்தை தமிழ்நாட்டிற்குள் அறிமுகப்படுத்த நினைக்கிறது ஒரு வலுவான குழுமம் (syndicate). அதைத் தடுக்க நினைக்கிறார் NIA அதிகாரியான ப்ரேம். அவரது முயற்சியில், அவருக்குத் துருப்புச் சீட்டாகக் கிடைக்கிறார் ரகு ராம். குழுமத்தைச் சென்னைவாசியான (மதராஸி) ரகு தடுத்தானா இல்லையா என்பதே படத்தின் முடிவு. தனது வெற்றி சூத்திரங்கள் அனைத்தையும் இப்படத்தின் திரைக்கதையில் பிரயோகித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். கஜினியில் நாயகன்க்குக் குறுகிய 'கால நினைவாற்றல் இழப்பு (Short term memory loss)' இருப்பது போல், மதராஸியில் நாயகனுக்குத் 'திரிவரண்மை ஒழுங்கின்மை (Delusional disorder)' இருக்கிறது. அவர் மனம் உருவகித்துக் கொள்ளும் மாய தோற்றங்கள், எத்தகைய சூழலில் எழும் என்பதற்கு ஓர் அழகான நினைவோடை (flash-back) காட்சியையும் வைத்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சி போல், சிவகார்த்திகேயன் வில்லன்...
Lokah Chapter 1: Chandra விமர்சனம்

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம். தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி நாச்சியப்பா கெளடாவிற்குச் சந்திரா மீது சந்தேகம் வருகிறது. மனித உடலுறுப்புகளை விற்கும் அமைப்பினர், சந்திராவையும் சன்னியையும் துரத்துகின்றனர். அதிலிருந்து இருவரும் எப்படித் தப்பினார்கள் என்பதே படத்தின் முடிவு. இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கெளடாவாக சாண்டி மாஸ்டர் மிரட்டியுள்ளார்...