Shadow

Tag: New tamil movie reviews

காயல் விமர்சனம் | Kaayal review

காயல் விமர்சனம் | Kaayal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காயல் – காய்தல் – வாடுதல் திருமதி தேன்மொழி தற்கொலை புரிந்து கொள்ள, அவரைச் சார்ந்தோர்கள் எல்லாம் துக்கத்தில் வாடுகின்றனர். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பதை ஒரு சமூக நோக்குடன் அணுகுகிறது திரைக்கதை. காயல், எழுத்தாளர் தமயந்தியின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி, பிச்சாவரம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் என படத்தின் கதை நெய்தல் திணைகளிலேயே பயணிக்கிறது. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் அக ஒழுக்க உரிப்பொருளாகும். இரங்கலுக்கு துக்கம், சோகம், வருத்தம் எனும் அர்த்தங்கள் வந்தாலும், இப்படத்தின் கருவான இழந்தவரை எண்ணி வருந்துதல் என்பதோடு சாலப் பொருந்துகிறது. தேன்மொழியாக காயத்ரி நடித்துள்ளார். தீமையைக் கண்டால் சீறியெழும் பெண்ணாகப் படைக்கப்பட்டிருந்தாலும், தேன்மொழி பாத்திரத்தை முடித்த விதத்தில் ஏமாற்றத்தை அளித்துள்ளார் தமயந்தி. படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவ...
மதராஸி விமர்சனம் | Madharaasi review

மதராஸி விமர்சனம் | Madharaasi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
துப்பாக்கிக் கலாச்சாரத்தை தமிழ்நாட்டிற்குள் அறிமுகப்படுத்த நினைக்கிறது ஒரு வலுவான குழுமம் (syndicate). அதைத் தடுக்க நினைக்கிறார் NIA அதிகாரியான ப்ரேம். அவரது முயற்சியில், அவருக்குத் துருப்புச் சீட்டாகக் கிடைக்கிறார் ரகு ராம். குழுமத்தைச் சென்னைவாசியான (மதராஸி) ரகு தடுத்தானா இல்லையா என்பதே படத்தின் முடிவு. தனது வெற்றி சூத்திரங்கள் அனைத்தையும் இப்படத்தின் திரைக்கதையில் பிரயோகித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். கஜினியில் நாயகன்க்குக் குறுகிய 'கால நினைவாற்றல் இழப்பு (Short term memory loss)' இருப்பது போல், மதராஸியில் நாயகனுக்குத் 'திரிவரண்மை ஒழுங்கின்மை (Delusional disorder)' இருக்கிறது. அவர் மனம் உருவகித்துக் கொள்ளும் மாய தோற்றங்கள், எத்தகைய சூழலில் எழும் என்பதற்கு ஓர் அழகான நினைவோடை (flash-back) காட்சியையும் வைத்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சி போல், சிவகார்த்திகேயன் வில்லன்...
Lokah Chapter 1: Chandra விமர்சனம்

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம். தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி நாச்சியப்பா கெளடாவிற்குச் சந்திரா மீது சந்தேகம் வருகிறது. மனித உடலுறுப்புகளை விற்கும் அமைப்பினர், சந்திராவையும் சன்னியையும் துரத்துகின்றனர். அதிலிருந்து இருவரும் எப்படித் தப்பினார்கள் என்பதே படத்தின் முடிவு. இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கெளடாவாக சாண்டி மாஸ்டர் மிரட்டியுள்ளார்...