வேட்டையன் விமர்சனம்
"மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்."- அன்னலட்சுமி, சின்ன கோளாறுபட்டி
விரைவான நீதியை அளிக்கும் அவசரத்தில், நிரபராதியை என்கவுன்ட்டர் செய்து விடுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் அதியன். நீதிபதி சத்யதேவால், கொலை செய்யப்பட்டவன் நிரபராதி எனத் தெரிந்ததும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் அதியன்.
ரஜினியிசத்தை மிக கிரேஸ்ஃபுல்லாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் த.செ.ஞானவேல். எனினும் ஜெயிலரின் நீட்டித்த பதிப்போ எனும் தோற்றத்தை எழுப்புகிறது. படத்தை ரசிக்கும்படியாக மாற்றுவது 'பேட்டரி' பேட்ரிக்காக நடித்திருக்கும் ஃபஹத் ஃபாசில் மட்டுமே! ரஜினி போன்ற கரீஸ்மாட்டிக் ஹீரோவையும் சுலபமாக ஓரங்கட்டி விடுகிறார். 'அறிவு திருடனாகுறதுக்குத்தான் வேணும்; போலீஸாக வேணாம்' என அவர் எந்த வசனத்தைப் பேசினாலும் ரசிக்க வைக்கிறது. நீதிபதி சத்யதேவாக அமிதாப் பச்சனைப் படம் நெடுகே வரும் பாத்திரம...