
தக் லைஃப் விமர்சனம் | Thug Life review
காவலர்களிடமிருந்து உயிருடன் தப்பிக்க ரங்கராய சக்திவேல் அமரனைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு நன்றிக்கடனாக அமரனைத் தனது மகன் போல் வளர்க்கிறார். அமரன் பெரியவன் ஆனதும், சக்திவேல் தப்பிப்பதற்காக வேண்டுமென்றே தனது தந்தையைத் கொன்றதாக அறிந்து கொள்கிறான் அமரன். அமரன், சுடப்பட்ட சக்திவேலை நேபாளத்தின் பனிப் பள்ளத்தாக்குகளில் தள்ளிவிடுகிறான். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பும் அஞ்சானான சக்திவேல் ரங்கராயன் துரோகிகளைப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை.
காட்சிப்படுத்தியதிலிருந்த அதீத தொழில்நுட்ப மெனக்கெடல், திரைக்கதை அமைத்ததில் சுத்தமாக இல்லை. கதை என்ற வஸ்து உணர்ச்சிகரமான திரைக்கதையாக மாறாமல், வசன நகர்வுகளாக உள்ளன. கதையில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கவேண்டிய அனைத்துப் புள்ளிகளும் வசனங்களாகச் சொல்லப்படுகின்றன. நாசர் சொல்லும் ஒரு வசனம், கமலுக்கு எதிராகத் திரும்ப சிலம்பர...