Shadow

Tag: Sathish S2

“இது மாதிரி ஒரு கதை கேட்டதே இல்லை” – நடிகர் சுனில் | Indra movie

“இது மாதிரி ஒரு கதை கேட்டதே இல்லை” – நடிகர் சுனில் | Indra movie

சினிமா, திரைச் செய்தி
ஜே.எஸ்.எம் மூவி புரொடக்‌ஷன்ஸ், எம்பெரர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் ’இந்திரா’ ஆகும். சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தினை டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அஜ்மல், “இந்தப் படத்தின் கதை சொன்னபோதே சவாலாக இருக்கும் என்று தோன்றியது. ஷூட் முடித்துத் தந்த போது, எல்லோருடைய நடிப்பு, த...
சரண்டர் விமர்சனம் | Surrender review

சரண்டர் விமர்சனம் | Surrender review

ஆன்‌மிகம், சினிமா, திரை விமர்சனம்
தேர்தல் நேரம் என்பதால் தனது தப்பாக்கியைத் திருமழிசை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். அதை வாங்கி வைக்கும் ரைட்டர் பெரியசாமி, துப்பாகியைத் தவற விட்டுவிடுகிறார். ட்ரெயினி எஸ்.ஐ.யான புகழிடம், வெளியில் தெரியாமல் ரகசியமாகத் துப்பாக்கி கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. கனகராஜ் எனும் ரெளடி, தேர்தல் செலவுக்காகப் பத்து கோடியை ஆய்வாளர் வில்லியம்ஸிடம் கொடுத்துவிடுகிறார். அந்தப் பணம் காணாமல் போகிறது. கனகராஜின் தம்பி (ஸ்பாட் படத்தின் நாயகன் கெளஷிக்), ஒரு சின்ன தகராறில் ரைட்டர் பெரியசாமியை உள்ளாடையுடன் நிற்க வைத்துவிடுகிறார். காவல்துறை உயரதிகாரிகளும், கனகராஜின் பக்கம் நின்று மெளனம் சாதிக்கிறார்கள். ஆனால், பெரியசாமி தனது தந்தையைப் போன்றவரென ஆவேசம் இளம் எஸ்.ஐ.யான புகழ், கெளஷிக்கை அடித்துக் கோமாவில் தள்ளிவிடுகிறான். கனகராஜ் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்க...
சரண்டர் – ஈரம் அறிவழகனின் உதவியாளர் இயக்கியுள்ள ஆக்சன் த்ரில்லர்

சரண்டர் – ஈரம் அறிவழகனின் உதவியாளர் இயக்கியுள்ள ஆக்சன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘சரண்டர்’ ஆகும். இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய மன்சூர் அலிகான், “இயக்குநர் கௌதம், ஈரம் அன்பழகனிடமிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளார். செட் எல்லாம் அப்படியே ஒரிஜினலாக இருந்தது. தர்ஷன் அருமையாக நடித்துள்ளார். இந்த மாதிரி புதியவர்களை ஊக்குவிக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் மட்டுமே வருகிறது அது மக்களுக்குப் போரடிக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கலைஞர்கள் தர வேண்டும். அதே மாதிரியான படமாக ச...
MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ராஷ்மிகா மந்தனா நடிக்கும், கதாநாயகியை மையப்படுத்திய புதிய திரைப்படத்திற்கு "மைசா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் அட்டகாசமான ஆக்‌ஷன் அவதாரத்தை வெளிக்காட்டும்படி அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். இப்படத்தின் போஸ்டரைத் தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவபுடியும், தமிழில் தனுஷும், இந்தியில் விக்கி கௌஷலும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் சிவராஜ்குமாரும் ஆகியோர் போஸ்டர்களை வெளியிட்டனர்.மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு பாரம்பரிய புடவையில், பழங்கு...
தக் லைஃப் விமர்சனம் | Thug Life review

தக் லைஃப் விமர்சனம் | Thug Life review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காவலர்களிடமிருந்து உயிருடன் தப்பிக்க ரங்கராய சக்திவேல் அமரனைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு நன்றிக்கடனாக அமரனைத் தனது மகன் போல் வளர்க்கிறார். அமரன் பெரியவன் ஆனதும், சக்திவேல் தப்பிப்பதற்காக வேண்டுமென்றே தனது தந்தையைத் கொன்றதாக அறிந்து கொள்கிறான் அமரன். அமரன், சுடப்பட்ட சக்திவேலை நேபாளத்தின் பனிப் பள்ளத்தாக்குகளில் தள்ளிவிடுகிறான். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பும் அஞ்சானான சக்திவேல் ரங்கராயன் துரோகிகளைப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை. காட்சிப்படுத்தியதிலிருந்த அதீத தொழில்நுட்ப மெனக்கெடல், திரைக்கதை அமைத்ததில் சுத்தமாக இல்லை. கதை என்ற வஸ்து உணர்ச்சிகரமான திரைக்கதையாக மாறாமல், வசன நகர்வுகளாக உள்ளன. கதையில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கவேண்டிய அனைத்துப் புள்ளிகளும் வசனங்களாகச் சொல்லப்படுகின்றன. நாசர் சொல்லும் ஒரு வசனம், கமலுக்கு எதிராகத் திரும்ப சிலம்பர...
லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

சினிமா, திரை விமர்சனம்
இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் சாப்பிடுகின்றனர். பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். உயிர் போகும் அப்பிரச்சனையிலிருந்து எப்படி அந்த நால்வரும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. மிமிக்ரி கோபியாக ரமேஷ் திலக், திடீர் திருப்பதியாகக் கருணாகரன், குயில் குமாராக C. மணிகண்டன், பேய் முருகேசனாக ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோ சினிமாஸ் C. மணிகண்டன் தயாரித்த...
கட்டாளன் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கட்டாளன் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'மார்கோ' படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் புதிய திரைப்படமான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தில், பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.போஸ்டரில், நடுக் காட்டுக்குள் பலர் செத்து விழுந்து கிடக்க, நடுவில் கொளுந்து விட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில், பிபி கையில் கோடாளியுடன் மிரட்டலாகத் தோற்றமளிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். போஸ்டரின் தலைப்பு, நாகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றின் பின்னண...
சப்தம் விமர்சனம்

சப்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அமானுஷ்ய சக்தி, சத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அதனால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள, அவ்வாமானுஷ்யத்தைப் புலனாய்வு செய்ய புலனுக்கெட்டாத (Paranormal) மர்மத்தைக் கண்டுபிடிக்க, மும்பையில் இருந்து ரூபன் வைத்தியலிங்கம் மூணாருக்கு வரவைக்கப்படுகிறார். அந்தச் சத்தத்தின் பின்னாலுள்ள மர்மத்திற்கான பதிலே இப்படத்தின் கதையோட்டம். ஈரம் படத்திற்குப் பிறகு, ஆதி, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் அறிவழகன் ஒன்றிணைந்துள்ளனர். நீரை மையமாகக் கொண்டு ஈரத்தில் கலக்கியவர்கள், இதில் சத்தத்தைத் தொட்டுள்ளனர். ஒலியைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தில், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் மிகப் பெரும் பாய்ச்சலைச் செய்துள்ளது. சினிமா விஷுவல் மீடியம் எனச் சொல்லப்பட்டாலும், அது உண்மையில் மல்ட்டி மீடியாவாகும். அதன் ஒரு பகுதியான ஒலியைக் கொண்டு ஒரு கதையைச் சொல்லியுள்ளனர். படத்தின் முதற்பாதி ஈர்ப்பிற்கு அதுவே காரணமாக அமைக...
“உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும்” – யோகிபாபு

“உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும்” – யோகிபாபு

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் நகைச்சுவைக் கலாட்டா தான் இந்தப் படம். இயக்குநர் பிரதாப், “இந்தக் கதையை எழுதியவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன், இறுதியாக யுவாராஜ் சாரைச் சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்தக் கதாப்பாத்திரத்துக்கு இவரைப் போடலாம், அல்லது இவரைப் போடலாம் என அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணை...
பேபி & பேபி – இசை வள்ளல் இமானின் இசையில்

பேபி & பேபி – இசை வள்ளல் இமானின் இசையில்

சினிமா, திரைச் செய்தி
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் நகைச்சுவைக் கலாட்டா தான் இந்தப் படம். தயாரிப்பாளர் யுவராஜ், “எனக்குத் தொழில் சினிமா இல்லை. ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்குக் கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான...
“அருண் என் உதவியாளர்” – இயக்குநர் பி.வாசு | மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்

“அருண் என் உதவியாளர்” – இயக்குநர் பி.வாசு | மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.இயக்குநர் அருண் ரவிச்சந்திரன், “இது என் முதல் மேடை, 12 ஆவது படிக்கும் போது பாலா சாரின் தாரை தப்பட்டை ஷூட்டிங் நடந்தது. அதை வேடிக்கை பார்த்தபோது அங்கு அவ்ளோ பேர் கூடியிருந்தார்கள். வெற்றியைத் தாண்டி, அந்தக் கூட்டமே தனியாகத் தெரிந்தது. அன்று என்னிடம் இருந்த கோனார் தமிழ் உரையில் எழுத்து இயக்கம் என என் பெயரை எழுதினேன். 10 வருடத்தில் இந்த இடத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி. வாசு சாரின் கோ டைரக்டர் சுகுமார் அண்ணன் ஒரு ஷூட்டிங்கில் எனக்கு அறிமுகமானார். அவர் மூலம் தான் இதெல்லாம் நடந்தது. அவர் தான் வாசு சாரிடம் அறிமுகப்படு...
“மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் | குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்” – தேனாண்டாள் முரளி

“மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் | குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்” – தேனாண்டாள் முரளி

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பத்திரிகையளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி எனும் தேனாண்டாள் முரளி, “இயக்குநர் அருண் இந்தக் கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக் கால ட்ரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான் என எல்லோரும் இளமையானவர்கள். புதிய இளைஞர்கள் எப்போதும் சாதிக்கும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாகப் பன்மடங்கு உ...
அமரன் விமர்சனம்

அமரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அமரன் என்றால் மரணமில்லாதவன் எனப் பொருள். வீரத்திற்காக அஷோக் சக்ரா விருது பெற்ற மேஜர் தெய்வத்திரு. முகுந்த் வரதராஜனை, தனது படத்தில் பாட்டுடைத் தலைவனாகயாக்கி, அமரனாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால், படம் அமரத்துவம் எய்துவது இந்து ரெபேக்கா வர்கீஸாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் அதி அற்புதமான நடிப்பாலேயே! சின்ன சின்ன உணர்ச்சிகளையும், முகத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்து அமரனை ஒரு காதல் படமாக மாற்றிவிடுகிறார். படத்தின் முதற்பாதியின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் முகுந்த் வரதராஜனின் அம்மா கீதாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம். லப்பர் பந்து படத்தில், கெத்து தினேஷின் அம்மாவாக நடித்து மனதில் நின்றவர், மீண்டும் ஒருமுறை பிரமாதப்படுத்தியுள்ளார். இரண்டு அம்மாக்களும் தான் எத்தனை வேறுபாடுகள் உடற்மொழியில், வசன உச்சரிப்பில்! ஒரு கட்டத்தில், தமிழ் சினிமாவில் சரண்யா பொன்வண்ணன், இது போன்று தொடர்ந...
SIR விமர்சனம்

SIR விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாத்தியார் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானத்தின் தாத்தாவும் அப்பாவும் ஆசிரியராக இருந்தவர்கள். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், கல்வியே எல்லாத் தளைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும் என உயர்ந்த லட்சியத்துடன் 1950 களில், ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் சிவஞானத்தின் தாத்தா. அவர் விட்ட வேலையைச் சிரமேற்கொண்டு ஆத்மார்த்தமாக ஆசிரியப் பணியைச் செய்கிறார் சிவஞானத்தின் அப்பா. உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிறது. தந்தை மற்றும் தாத்தாவின் கனவை அறியாத சிவஞானம், ஊரை விட்டு மாற்றலாகிச் சென்றுவிட நினைக்கிறார். தன் குடும்பம் எதற்காகப் போராடுகிறது என உணரும் சிவஞானம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் அடிநாதம். ஒருவரை ஒடுக்கித் தங்கள் ஆளுகைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் மனதில் மூடநம்பிக்கைகளை விதைத்து, அவர்களுக்குக் கல்வியறிவு கிடைக்காமல் பார்த்துக் கொ...
கடைசி உலகப்போர் விமர்சனம்

கடைசி உலகப்போர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐ.நா.வில் இருந்து பிரியும் சீனாவும் ரஷ்யாவும், 'ரிபப்ளிக் (O.N.O.R.)' எனும் கூட்டமைப்பை உருவாக்கி, அமீரகம், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் முதலிய எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கிறது. ரிபப்ளிக்கில் இணையாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இந்தியாவுடனான தொடர்பில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு அல்லலுகிறது. இலங்கையின் தனிப்படையினர் உதவியோடு, தமிழ்நாட்டை தன்வசத்திற்குக் கொண்டு வருகிறான் சீனன் ஒருவன். தமிழ்நாட்டு முதல்வர் நாசரை மிரட்டி தமிழ்நாட்டை ரிபப்ளிக்கில் சேர்த்துவிடுகிறான். நாயகன் தமிழ் எப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை சீன ரிபப்ளிக் ஆதிக்கத்தில் இருந்து மீட்கிறான் என்பதே கதை. கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், தயாரிப்பு என இந்தப் படத்தின் ஆல்-இன்-ஆல் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான். ஆசையும் அனுபவமின்மையும் சேரும் புள்ளிதான் இப்படத்தின் மையக்கரு. ...