Shadow

Tag: Team Aim

அண்ணபூர்ணி | த்ரில்லர் டிராமா

அண்ணபூர்ணி | த்ரில்லர் டிராமா

சினிமா, திரைத் துளி
KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் "அண்ணபூர்ணி". லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர். த்ரில்லர் டிராமாவாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார். >> ஒளிப்பதிவு - ஹெக்டர் >> படத்தொகுப்பு - கலைவாணன் >> கலை - அமரன் >> மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM) சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது....
வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் – தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் ஜீ5

வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் – தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் ஜீ5

சினிமா, திரைச் செய்தி
ஜீ5, சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரம்மாண்டமாக நடந்த “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்ச்சியில், தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர் “நிலமெல்லாம் ரத்தம்” எனும் ஜீ5 பிரத்தியேக தொடர் அறிவிக்கப்பட்டது. இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில் ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் திரில்லர் தொடர் “கார்மேகம்” மற்றும் அரசியல் டிராமாவான “தலைமை செயலகம்” ஆகிய தொடருடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இளைஞர்கள் இதயம் வென்ற காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வரவிருக்கும் “பேப்பர் ராக்கெட்” தொடர்கள் பற்றி இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இவை தவிர, ஜீ5 தளத்தில், இயக்குநர் விஜய்யின் டீன் ஏஜ் டான்ஸ் டிராமா ஃபைவ் - சிக்ஸ்- செவன்- எயிட், வசந்த பாலன் இயக்கத்தில் 'தலைமை செயலகம...
யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘அனந்தம்’ டீசர்

யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘அனந்தம்’ டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
தமிழ்த் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரியா V இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்” ஆகும். இது 1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த, உணர்ச்சிகரமான தருணங்களைப் பொழுதுபோக்குடன் தரும் ஓர் அழகான இணைய தொடராகும். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்துப் பார்வையிடுவதில் இருந்து இதன் கதை தொடங்குகிறது. அவர் 'அனந்தம்' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின், ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் கதை. இந்தத் தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வி...
வலிமை | 500 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீமிங் பார்வை

வலிமை | 500 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீமிங் பார்வை

சினிமா, திரைத் துளி
தமிழகத்தின் முதன்மை நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில், வெளியான 2022 ஆம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமான, ‘வலிமை’ சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களைக் கடந்து, உலகளவில் சாதனை படைத்துள்ளது. ஜீ5 தளத்தில், “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. தற்போது, மலையாளம் மொழியிலும் இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி இயங்குதளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள் மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது. நடிகர் அஜித் குமார் அவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில், ‘வலிமை’ திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, டிஜிட்டலில்,...
மன்மத லீலை விமர்சனம்

மன்மத லீலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு வீடு, ஒரு வாசல் என 2020 இல் மனைவி மகளோடு வாழ்ந்து வரும் அசோக் செல்வனுக்கு, மனைவி மகள் ஊருக்குப் போகும் கேப்பில் ஒரு அழகு பதுமை மூலமாக ஒரு ‘வாய்ப்பு’ வருகிறது. அதை அவர் பயன்படுத்தினாரா? பயன்பட்டாரா? அடுத்து என்ன நடந்தது? இதுவொரு லைவ் கதை. வருடம் 2010! முரட்டு சிங்கிளாக இருக்கும் அசோக் செல்வன் முகநூல் மெஸெஞ்சர் மூலமாக ஒரு பெண்ணுக்கு நூல் விட்டு அப்பெண்ணின் வீட்டிற்கே சம்பவம் நடத்தக் கிளம்பிச் செல்கிறார். சம்பவம் என்னானது என்பது ஒருகதை. இந்த இரண்டு கதைகளையும் சரியாக முடித்துப் போட்டுப் படத்தை முடித்ததில் தான் வெங்கட்பிரபு வெற்றி பெறுகிறார். அசோக் செல்வன் அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக நடித்துள்ளார். 90’ஸ் கிட்ஸ் அனைவரும் பொறாமைப்படும் நடிப்பும் லீலையும். ஸ்ரும்தி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியாஸ்யுமன் ஆகிய மூவரும் கொடுத்த வேலைக்குக் குறை வைக்கவில்லை. ரியாஸ்வுமன் மட்டும் கொடுத்த வேலையை விட,...
முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

Movie Posters, கேலரி, சினிமா, திரைச் செய்தி
இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாகக் கொண்ட மென்மையான டிராமா திரைப்படமான “முதல் நீ முடிவும் நீ”-ஐ, இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கியுள்ளார். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியைப் பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. சென்னையில் 90’களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான மையக் கருப்பொருளைக் கொண்டுள்ளது. நியூயார்க் திரைப்பட விருது விழாவில், ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது. மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலி...
3:33 – நேரம்தான் அமானுஷ்ய வில்லன்

3:33 – நேரம்தான் அமானுஷ்ய வில்லன்

சினிமா, திரைத் துளி
பேம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் (Bamboo Trees Productions) சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குநர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள படம் '3:33'. முழுக்க முழுக்க இதயத்தைத் தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் (நேரம்) கதையின் வில்லனாக இருக்கும் கதையில், நேரத்தை மையமாகக் கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்தக் குறிப்பிட்ட நேரம் நாயகனைப் பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் நாயகன் எப்படித் தப்பிக்கிறான் என்பது தான் கதை. படத்தின் ...
ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றிய அரண்மனை 3

ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றிய அரண்மனை 3

சினிமா, திரைத் துளி
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிப் பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 படமும் நகைச்சுவைப் பேய்ப் படமாக உருவாகியுள்ளது. தற்போது, அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குநர் சுந்தர்.சி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, Benzz Media CEO R.மதன்குமார் ஆகியோர் இருந்தனர். அரண்மனை 3 திரைப்படம், அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. >> கதை, திரைக்கதை, இயக்கம் - சுந்தர்...
பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

சினிமா, திரைத் துளி
பல வெற்றி படங்களைத் தயாரித்தவரும், விநியோகம் செய்தவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாகத் தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்: >> தயாரிப்பு - R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்) >> இணை தயாரிப்பு - கல் ராமன் >> இயக்கம் - சுமந்த் ராதாகிருஷ்ணன் >> ஒளிப்பதிவு - பிரவீன் குமார் >> இசை - போபோ சசி >> படத்தொகுப்பு - ராகுல் >...
எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டில்’

எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டில்’

சினிமா, திரைத் துளி
மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பெளண்டேசன் இணைந்து நடத்தும் 19ஆவது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்குக் “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது, "வருடந்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக, 'கட்டில் திரைப்பட உருவாக்கம்' என்ற நூலை வெளியிடுகிறேன். சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரிவழங்கிய சாதனையாளர்கள் சிலர் “கட்டில்” திரைப்படத்திலும் தங்களது பங்களிப்பைத் தனிச்சிறப்ப...
“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி

“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.தங்கசாமி, "ராட்டினம்", "எட்டுத்திக்கும் மதயானை" ஆகிய படங்களை இயக்கியவர். திருப்பூர் சுப்ரமணியத்தின் முயற்சிக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். "சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது. தனது இந்த முன்னெடுப்பிற்கு பிரமிட் நடராஜன் சாரும், ஆர்.பி. சவுத்ரி சாரும் காரணமாக அமைந்ததாகத் தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர்களுக்கும் மிக்க நன்றி. திருப்பூர் சுப்ரமணியன் முன்வைத்த தீர்வு சதவீத அடிப்படையில் சம்பளம், சிறுசிறு பங்குதாரர்கள், விற்பனையில் பங்கு, வெளிப...
V1 விமர்சனம்

V1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விசாரணையில் துவங்கும் படம், சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விசயத்தை மீள் விசாரணை செய்வதாக முடிகிறது. லிவிங் டுகெதரில் இருக்கும் ஒரு ஜோடியில், பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவளின் காதலன், ‘கொலையை நான் தான் செய்தேன்’ என ஒப்புக் கொள்கிறான். ஆனால் கொலையை அவன் செய்யவில்லை. அந்தக் கொலையை யார் செய்தார் என்ற கேள்வியோடு படம் விரிகிறது. யார் கொலைகாரர் என்ற கேள்வியில் பயணிக்கும் படத்தில் திருப்புமுனைகள் தான் பிரதானம். V1 படத்தில் அது திரும்பும் இடத்தில் எல்லாம் இருக்கிறது. அவையெல்லாம் நம்மை ஈர்ப்பதற்கான திருப்புமுனைகளையே ஒழிய லாஜிக் ரிதீயான திருப்புமுனையாக இல்லை. இதுதான் இப்படத்தின் சறுக்கல். நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ சிரமம் இல்லாமல் நடிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் சிரமப்பட்டிருக்கிறார். நாயகி விஷ்ணுபிரியா ஓரளவு அவரின் காதாபாத்திரத்திற்குரிய நியாயத்தை நடிப்பில் சேர்த்துள்ளார். லிஜீஸ் ...
வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்

வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்

Trailer, காணொளிகள், சினிமா, திரைத் துளி
"ஷ்வேத் - எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்" சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் "லாக்கப்". இயக்குநர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் வெளியான "லாக்கப்" படத்தின் டீசர் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. படத்தின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் வகையில் இப்படத்தின் டீசர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டது. மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர...
இந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

இந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

மற்றவை
‘உதவும் உள்ளங்கள்’ என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அக்டோபர் 20 அன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர். நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார். நிகழ்வ...