Shadow

Tag: Team Aim

மாயபிம்பம்‌ – படப்போஸ்டர் | சுந்தர்.சி வெளியீடு

மாயபிம்பம்‌ – படப்போஸ்டர் | சுந்தர்.சி வெளியீடு

இது புதிது
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் 'மாயபிம்பம்' ஆகும்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுக்க முழுக்கப் புதுமுகங்களே. படத்தின் பாடல்களைப் பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 2005 இல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டுப் படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவைப் பாராட்டினார்....
ரேகை | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த த்ரில்லர்

ரேகை | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த த்ரில்லர்

OTT, Web Series
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த இணையத் தொடரை உருவாக்கி எழுதி இயக்கியுள்ளார். இதனை S.S. க்ரூப் ஃபெளண்டேஷன் சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்தத் தொடரில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்.உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? S.I. வெற்றியும் (பாலஹாசன்), காவலர் சந்தியாவும் (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்கத் துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது...
ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

சினிமா, திரை விமர்சனம்
டிராகுலா பாண்டியன் எனும் பெரிய ரெளடி, ரீட்டாவின் வீட்டில் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். டிராகுலா பாண்டியனின் பிணத்தைக் கைப்பற்ற நினைக்கும் மார்டின் குழு, டிராகுலா பாண்டியனின் தலைக்காகக் காத்திருக்கும் ஆந்திர ரெட்டி, தந்தைக்காக எதையும் எந்த எல்லைக்கும் போய்ச் செய்யும் அவரது மகன் டிராகுலா பாபி, ரீட்டாவைப் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் ஒரு காவலதிகாரி ஆகியோரிடமிருந்து ரீட்டா எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. சீட்டாவாகப் பேசிக் கொண்டே இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் தொல்லை பொறுக்க முடியாமல், அவரைக் குளியல் அறையில் வைத்துப் பூட்டி விடுகின்றனர். பூட்டப்பட்ட குளியலறையில் இருந்து ரெடின் கிங்ஸ்லி வெளியேறுவது ரசிக்க வைக்கிறது. ப்ரோக்கர் லல்லுவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் மாடுலேஷன் அவரேற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. கொடூரமான சைக்கோ டிராக...
தாஷமக்கான் – ராப் இசைக்கலைஞராக ஹரிஷ் கல்யாண்

தாஷமக்கான் – ராப் இசைக்கலைஞராக ஹரிஷ் கல்யாண்

சினிமா, திரைச் செய்தி
இடா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் தின்க் ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வடச் சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்” ஆகும். மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டது. இந்நிகழ்வினில் பேசிய ஹரிஷ் கல்யாண், “தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழ்நாட்டிற்...
ரிவால்வர் ரீட்டா – ஒரு டார்க் காமெடி படம்

ரிவால்வர் ரீட்டா – ஒரு டார்க் காமெடி படம்

சினிமா, திரைச் செய்தி
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், தி ரூட் நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK. சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகரும், ரேடியோ ஜாக்கியுமான பிளேடு சங்கர், “இது என் நண்பன் படம். கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட், மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன ச...
ஆர்யன் விமர்சனம் | Aryan review

ஆர்யன் விமர்சனம் | Aryan review

சினிமா, திரை விமர்சனம்
விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலே தயாரிக்க உருவாகியுள்ள படம் ஆர்யனாகும். ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் நெறியாளராக இருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரைப் பேட்டி எடுக்கிறார். அப்போது அங்கு பார்வையாளராக வரும் செல்வராகவன், துப்பாக்கியை எடுத்து நீட்டி மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்புகிறார். அத்துடன் தான் ஒரு எழுத்தாளர் என்றும், தன்னுடைய படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றும் கூறுகிறார். தொடர்ந்து 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தன்னுடைய மாஸ்டர் பீஸை எழுதியிருக்கிறேன் எனச் சொல்வதோடு, தொடர்ந்து ஐந்து கொலைகளைச் செய்யப் போவதாகவும், முடிந்தால் போலீஸார் தடுத்து நிறுத்தட்டும் என்ற சவாலை விடுக்கிறார். போ...
பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்திய அணிக்குத் தேர்வான மணத்தி P. கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையைக் கருவாக எடுத்துக் கொண்டு தன்னோட வலிகளையும் ஏக்கங்களையும் இணைத்து பைசனை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். அவரது முந்தைய படங்கள் பேசிய அரசியலையும் கைவிடாமல், படத்தின் பின்னணியாக வெங்கடேச பண்ணையார் - பசுபதி பாண்டியன் பகையின் பின்னணியில், கபடியில் சாதிக்க நினைக்கும் கபடி வீரனின் சமூகச் சூழலையும் மனநிலையையும் பதிந்துள்ளார். கபடி என்றால் வனத்தி கிட்டான்க்கு உயிர். அவனது திறமையைக் கண்டு ஊக்குவித்துத் தொடர்ந்து விளையாட வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கந்தசாமி. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் சார்பில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட இடம் பிடிக்கிறார். கிட்டானின் இந்த சாதனைப் பயணம் எத்தகையது என்பதைப் பற்றிய படம்தான் பைசன் காளமாடன். கிட்டானின் குலதெய்வம் காளமாடன் ஆவார். சீறிப் பாயும் கிட்டானின் திறம்பட்ட விளையாட்டைச் ச...
இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பின் தனுஷ் இயக்கியிருக்கும் 4 ஆவது படம் “இட்லி கடை” ஆகும். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷூடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தேனி மாவட்டத்து சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இயற்கையான முறையில் நல்ல கைப்பக்குவத்துடன் சுவையான இட்லி சமைப்பவர் ராஜ்கிரண். அவரது மகன் தனுஷ் படிப்பை முடித்து வசதியாக வாழ வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார். பாங்காங்கில் தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்யும் தனுஷைச் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையில் திருமணத்திற்குச்...
மதராஸி விமர்சனம் | Madharaasi review

மதராஸி விமர்சனம் | Madharaasi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
துப்பாக்கிக் கலாச்சாரத்தை தமிழ்நாட்டிற்குள் அறிமுகப்படுத்த நினைக்கிறது ஒரு வலுவான குழுமம் (syndicate). அதைத் தடுக்க நினைக்கிறார் NIA அதிகாரியான ப்ரேம். அவரது முயற்சியில், அவருக்குத் துருப்புச் சீட்டாகக் கிடைக்கிறார் ரகு ராம். குழுமத்தைச் சென்னைவாசியான (மதராஸி) ரகு தடுத்தானா இல்லையா என்பதே படத்தின் முடிவு. தனது வெற்றி சூத்திரங்கள் அனைத்தையும் இப்படத்தின் திரைக்கதையில் பிரயோகித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். கஜினியில் நாயகன்க்குக் குறுகிய 'கால நினைவாற்றல் இழப்பு (Short term memory loss)' இருப்பது போல், மதராஸியில் நாயகனுக்குத் 'திரிவரண்மை ஒழுங்கின்மை (Delusional disorder)' இருக்கிறது. அவர் மனம் உருவகித்துக் கொள்ளும் மாய தோற்றங்கள், எத்தகைய சூழலில் எழும் என்பதற்கு ஓர் அழகான நினைவோடை (flash-back) காட்சியையும் வைத்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சி போல், சிவகார்த்திகேயன் வில்லன்...
வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"வசந்தத்திண்டே கனல் வழிகளில்" என்று மலையாளத்தில், 2014 ஆம் ஆண்டு வந்த படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வீர வணக்கமாக வெளியிட்டுள்ளனர்.நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட் - P.கிருஷ்ண பிள்ளை கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான P.கிருஷ்ண பிள்ளையின் (1906 – 1948) சரிதத்தை ஒட்டி, இப்படம் இயற்றப்பட்டுள்ளது. E.M.S.நம்பூதிரிபாட், A.K.கோபாலன் ஆகியோரும் P.கிருஷ்ண பிள்ளை தொடங்கும் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்குகின்றனர். இப்படம் நிகழும் காலகட்டம் 1940 முதல் 1946 வரையாகும். சிறையில் இருந்தவாறே, தங்கம்மாவைக் காதலித்து மணம் புரிகிறார் P.கிருஷ்ண பிள்ளை. சாதி ஒடுக்குமுறை உச்சத்தைத் தொடும் ஒரு கிராமத்திற்குச் சென்று, மக்களை ஒருங்கிணைத்து அவர்களது உரிமையை மீட்கப் போராடுவதுதான் படத்தின் கதை. இக்கதையை மக்களுக்கு நினைவூட்டி, அனைத...
Janaki v/s State of Karala – மெளனமாக்கும் முயற்சிக்கு எதிராக | Zee 5

Janaki v/s State of Karala – மெளனமாக்கும் முயற்சிக்கு எதிராக | Zee 5

OTT, சினிமா, திரைத் துளி
வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது ஜீ5. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா" ஒரு அழுத்தமான மலையாளத் திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்க, J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாகச் செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பற்றிச் சொல்கிறது. திவ்யா பிள்ளை, ஸ்ர...
Oh God Beautiful – பரிதாபம் ப்ரொடக்‌ஷன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்

Oh God Beautiful – பரிதாபம் ப்ரொடக்‌ஷன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
பரிதாபங்கள் ப்ரொடக்‌ஷன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி - ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளைப் பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய, ‘பொய் சொல்வது எப்படி?’ என்கிற புத்தகம் உள்ளது. பல நுணுக்கமான விசயங்களுடன், பார்த்தவுடன் ஆச்சரியப்பட வைக்கிறது இந்த போஸ்டர்.உண்மை தான் என்றும் ந...
போகி விமர்சனம் | Bhoghee review

போகி விமர்சனம் | Bhoghee review

சினிமா, திரை விமர்சனம்
தேவையில்லாதவற்றை ஒழிப்பதைப் போகி பண்டிகையாகக் கொண்டாடுவர். அப்படிச் சமூகத்திற்குத் தேவையில்லாதவர்களை ஒழிப்பதை, ‘போகி’ எனும் தலைப்பின் மூலமாக உணர்த்துகிறார் இயக்குநர் S. விஜயசேகரன். இந்தியாவை உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை அமைத்துள்ளனர். மறைத்து வைக்கப்படும் கேமராவின் மூலமாகத் தமிழ்ப் பெண்களை வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கிறது மலேஷியாவைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு ரகசிய கூட்டமைப்பு (Syndicate). சிலர் மர்மான முறையில் கொல்லப்படுகின்றனர். காவல்துறை இந்த இரண்டு வழக்குகளையும் தீவிரமாகக் கண்காணிக்கிறது. இந்தப் பிரச்சனையில் நாயகன் நபி நந்தி எப்படிச் சிக்குகிறான், அதற்கான அவனது எதிர்வினை என்ன என்பதுதான் படத்தின் கதை. ஒரே ஒரு பாடலுக்கு பூனம் கெளர் நடனமாடியுள்ளார். ஆனால், படத்தின் நாயகியோ இரண்டாம் பாதியில், பன்னிரெண்டாம் வகுப்பில் மாநில...
சட்டமும் நீதியும் – 3 நாட்களில் 51 மில்லியன் நிமிடங்கள்

சட்டமும் நீதியும் – 3 நாட்களில் 51 மில்லியன் நிமிடங்கள்

OTT, Web Series
ஜீ5 வெளியீடாக ஜூலை 18, 2025 இல் வெளியான சட்டமும் நீதியும் தொடரில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தொடர் மூலம் நாயகனாகத் திரும்பியிருக்கிறார் சரவணன். அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ், இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்தத் தொடர் உருவாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடர், வெளியான மூன்று நாட்களுக்குள் 51 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மக்களைப் பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீ...
PRK Productions – புதிய தயாரிப்பு நிறுவனம்

PRK Productions – புதிய தயாரிப்பு நிறுவனம்

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் துவங்கிய இந்தப் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ்த் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு. சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு. மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் திரு. குமார், நடிகர் திரு. யோகிபாபு, இயக்குநர் திரு. சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குனர் திரு இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வ...