Shadow

Tag: Team Aim

சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review

சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review

OTT, Web Series, திரை விமர்சனம்
தனது மகள் வெண்ணிலாவைக் கடத்தி விட்டார்கள் என்று காவல்நிலையத்தில் புகாரளிக்கச் செல்கிறார் குப்புசாமி. காவல்துறை அவரது புகாரைப் பதியாமல் துரத்தி விட, இயலாமையின் உச்சத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனக்குத் தீயிட்டு மாய்த்துக் கொள்கிறார் குப்புசாமி. நீதிமன்றத்துக்குள் சென்று வாதிடாத, வீட்டினரால் மதிக்கப்படாத வக்கீலான சுந்தரமூர்த்தி, பொதுநலவழக்காகக் குப்புசாமியின் வழக்கைப் போடுகிறார். குப்புசாமி யார், வெண்ணிலாக்கு என்னானது என்ற கேள்விகளுக்குப் பதில் தேடியவண்ணம் பயணிக்கிறது சட்டமும் நீதியும் தொடர். சுந்தரமூர்த்தியின் உதவியாளர் அருணாவாக நடித்துள்ளார் நம்ரிதா. சுந்தரமூர்த்தியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்ற ஒரே காரணத்திற்காக, அருணாவை யாரும் உதவியாளராகச் சேர்த்துக் கொள்ள மறுக்கின்றனர். வெடுக்கென்ற நேர்கொண்ட பேச்சும், எதற்கும் அஞ்சாமல் விசாரணையை மேற்கொள்ள நினைக்கும் ஆர்வமும் கொண்டவராக உள்ளார் அருணா. வழக்க...
ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்றைக்கு இணையத்தில் எது ட்ரெண்டிங்காக இருக்கிறதோ, அதுதான் நாட்டின் பேசுபொருள் என்பதால் படத்தின் தலைப்பையே ட்ரெண்டிங் என வைத்துவிட்டார்கள். கலையரசனும் ப்ரியாலயாவும் கணவன் மனைவி ஆவர். படத்தில் முதல் ஷாட்டிலே இருவரும் யூட்யூபில் தங்களின் ரீல்ஸைப் பதிவேற்றுகிறார்கள். அவர்களது ரீல்ஸின் வியூவ்ஸ் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் இந்தத் தம்பதியின் வருமானமும் உயர்கிறது. இச்சூழலில் இவர்களின் யூட்யூப் சேனல் முடக்கப்படுகிறது. அடுத்து என்ன செய்வது என அவர்கள் யோசிக்கும் போது ஒரு ப்ரைவேட் ஃபோன்கால் ஒன்று இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது. அந்த விளையாட்டு ஏற்படுத்தும் வினைகளும் விடைகளும் தான் படம். அளவாக நடித்தாலே போதும் என்ற ரேஞ்சிலே படத்தில் வருகிறார் நாயகன் கலையரசன். ப்ரியாலயா இப்படத்தில் பெரிய சர்ப்ரைஸ் செய்துள்ளார். அழகு, நடிப்பு இரண்டிலுமே ஸ்கோர் செய்துள்ளார். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் மிக...
ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம். திருப்பெரும்புதூரில், 1991 மே 21ஆம் தேதி அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்கள் என பல இலங்கைத் தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவோம் என சொல்லி அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கிறது காவல்துறை. குடும்பத்தினரும் அவர்களை விடுதலை செய்யக் கோரி மனு கொடுத்தும், போராட்டம் செய்தும் எதுவும் எடுபடவில்லை. அப்படியே 4 ஆண்டுகள் கழிய, வேலூர் கோட்டையில் இருந்து 43 பேர் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அத்திட்டம் அவர்களுக்குச்...
குபேரா விமர்சனம் | Kuberaa Review

குபேரா விமர்சனம் | Kuberaa Review

சினிமா, திரை விமர்சனம்
திருப்பதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் தேவாவின் பெயரில் ஷெல் கம்பெனி தொடங்கப்பட்டுப் பத்தாயிரம் கோடி டெபாசிட் செய்யப்படுகிறது. அப்பணத்தை மீண்டும் அவரிடமிருந்து வில்லன் பெறுவதற்குள், தேவா உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்துவிடுகிறார். அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வில்லனிடமிருந்து பத்தாயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரன் தேவாவால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.ஒரு பொருளாதாரக் குற்றப் பின்னணியில் தொடங்கும் படம். அக்குற்றத்தைச் சாத்தியமாக்குவதற்கான செயற்முறை, சிறைப்பட்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரியில் இருந்து சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் வரை நீள்கிறது. மிக அழகாகப் படத்தின் முதற்பாதியில் இவற்றைக் கட்டமைக்கிறார் சேகர் கம்முலா.பெரும்கோடீஸ்வர வில்லன் நீரஜ் மித்ராவாக ஜிம் சார்ப் நடித்துள்ளார். அவரது பணக்காரத் தோரணையே, பார்வையாளர்களை அசெளகரியம் கொள...
கேங்கர்ஸ் விமர்சனம் | Gangers review

கேங்கர்ஸ் விமர்சனம் | Gangers review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு பள்ளிச்சிறுமி காணாமல் போக, அவ்வூரில் நடக்கும் பல குற்றங்களையும் பட்டியலிட்டு, பள்ளி ஆசிரியை ஒருவர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். அப்புகாரைப் புலனாய்வு செய்ய காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவ்வூரிற்கு ஆசிரியரராக வரும் சரவணன், பள்ளிச்சிறுமி காணாமல் போனதன் மர்மத்தைக் கண்டுபிடிப்பதோடு, அந்த ஊரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூறு கோடியையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார். அதற்கு அவருடன் இணையும் கேங்கர்ஸ் உதவுகின்றனர். ஆசிரியை சுஜாதாவாகக் கேத்தரின் தெரசாவும், விளையாட்டு ஆசிரியர்கள் சிங்காரமாகவும் சரவணனாகவும் வடிவேலுவும், சுந்தர்.சி-யும் நடித்துள்ளனர். பயந்த சுபாவம் உள்ளவராகப் பகவதி பெருமாளும், வடிவேலுவால் தொழில் பாதிக்கப்பட்டவாரக முனீஷ்காந்தும், முனீஷ்காந்தின் நண்பராகக் காளையனும் நடித்துள்ளனர். இவ்வைவரும் கேங்கர்ஸாகக் கூட்டு சேர்கின்றனர். இந்தக் கூட்டணி அமையும் முன், படத்தி...
HK 15 | லிஃப்ட் இயக்குநருடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

HK 15 | லிஃப்ட் இயக்குநருடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

இது புதிது
இடா (IDAA) ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 ஆவது படமாக உருவாகும் #HK15 படத்தின் அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது.வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாபத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். இரத்தம் தெறிக்க ஹரீஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாகப் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்...
L2: எம்புரான் | Empuraan review

L2: எம்புரான் | Empuraan review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஸ்டீஃபன் நெடும்பள்ளி, P.K.ராமதாஸின் மஹன் ஜதின் ராமதாஸைக் கேரளாவின் முதல்வராக, இப்படத்தின் முதல் பாகமான லூசிஃபரில் நியமித்திருப்பார். ஐந்தாண்டுகளில் ஊழலில் திளைக்கும் ஜதின், தன்னைத் தற்காத்துக் கொள்ள வலதுசாரி தேசியக் கட்சியான ‘அகண்ட சக்தி மோர்ச்சா (ASM)’ உடன் கூட்டணி வைக்கிறார். கடவுளின் நாடான கேரளாவைக் காப்பாற்ற ஸ்டீஃபன் நெடும்பள்ளியை அழைக்கிறார் கோவர்தன் எனும் விசில்-ப்லோயர் (Whistle blower). தேவபுத்திரனிடம் இருந்தும், பஜ்ரங்கி பாபாவிடம் இருந்தும், தெய்வத்திண்ட தேசத்தைக் காப்பாற்ற சொர்க்கத்தில் இருந்து துரத்தப்படும் லூசிஃபர் எழுந்தருள்கிறார். லூசிஃபரின் வருகையை, தலைக்கீழாக விழும் சிலுவையின் (L) மூலமாகக் குறியீடாக உணர்த்திருப்பார்கள். மேலும், கேரளக்காட்டில் பிரியதர்ஷினியைக் காப்பாற்ற சாத்தான் தோன்றி விட்டான் என்பதை, மின்னல் தாக்கி எரியும் மரத்தின் கிளை முறிந்து L வடிவில் தீப்பற்றி அம்மரம் ...
L2: எம்புரான் | Anamorphic format 1:2.8

L2: எம்புரான் | Anamorphic format 1:2.8

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்கப் பல இடங்களில் படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலும், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகப் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.நடிகர் டோவினோ தாமஸ், “இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், ப்ரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவி...
யோலோ | Yolo: A fantasy rom-com entertainer

யோலோ | Yolo: A fantasy rom-com entertainer

சினிமா, திரைச் செய்தி
MR Motion பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ்th தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேன்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள 'யோலோ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. அண்ணா யுனிவர்சிடியில் நடந்து வரும் கேட்வே 2025 கல்லூரி விழாவில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், யோலோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், முதல் சிங்கிள் பாடலான ஐம் ஃபரம் உளுந்தூர்பேட்டை பாடலும் வெளியிடப்பட்டது. இளமை துள்ளும் அட்டகாசமான இசையில் அமைந்த இப்பாடலுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. Gen Z தலைமுறையைக் கவரும் வகையில், பார்த்தவுடன் ரொமான்ஸைத் தூண்டும் வகையில், காதலர்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் சிங்கிள் பாடல...
Zee5 இல் ஸ்ட்ரீமிங் சாதனை | Sankranthiki Vasthunam

Zee5 இல் ஸ்ட்ரீமிங் சாதனை | Sankranthiki Vasthunam

OTT, சினிமா, திரைத் துளி
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 இல் , கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியான "சங்கராந்திகி வஸ்துனம்" திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பைக் குவித்து சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, இதுவரையிலான ஸ்ட்ரீமிங்க் சாதனைகளைத் தகர்த்துள்ளது.ZEE தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி முன்னுரிமையுடன் (WTP) நடந்த டெலிகாஸ்ட் 18.1 TVR (SD+HD) என சாதனை புரிந்தது. இது கடந்த 2.5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்தவொரு நிகழ்ச்சியும் எட்டாத உயரமாகும். மேலும், 11.1 மில்லியன் AMAs (சராசரி நிமிட பார்வையாளர்கள்) என்பதைத் தாண்டி சாதனை படைத்த இத்திரைப்படம், இந்தியா முழுவதும் பார்வையாளர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், திரையரங்குகளில் ₹300 கோடியைத் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்பட...
VTV – விண்ணைத்தாண்டி வருவாயா | 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்

VTV – விண்ணைத்தாண்டி வருவாயா | 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளைthஹ் தந்து, உணர்வுகளோடு பிணைந்து என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர். இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர்., வி.டி.வி கணேஷ் ஆகியோர் ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவி...
ஜென்டில்வுமன் விமர்சனம் | GENTLEWOMAN Review

ஜென்டில்வுமன் விமர்சனம் | GENTLEWOMAN Review

சினிமா, திரை விமர்சனம்
பூர்ணிக்கும் அரவிந்த்க்கும் கல்யாணமாகி மூன்று மாதமான நிலையில், அரவிந்த்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வர, அரவிந்தைக் கொன்று விடுகிறாள் பூர்ணி. அல்லது இறந்து விட்ட அரவிந்தின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சுகிறாள். அரவிந்துடன் மூன்று வருடமாக உறவில் இருக்கும் ஆன்னா, அரவிந்தைக் காணோம் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறாள். பூர்ணியின் நிலை என்ன, ஆன்னாவின் நிலை என்ன என்பதே படத்தின் கதை. சந்தர்ப்பச் சூழ்நிலையில் எதிர்பாராத விதமாகக் கொன்றுவிட்டு, அச்சிக்கலில் இருந்து வெளிவர நினைக்கும் கதாபாத்திரம் இல்லை பூர்ணி. கொலை செய்த குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், எல்லா ஆண்களும் அயோக்கியமானவர்களே என்ற கோட்பாட்டினில் தீவிரமான நம்பிக்கை கொண்டவராக உள்ளார். வாய்ப்பு கிடைக்குந்தோறும் மறுபடியும் மறுபடியும் ஆண்களைக் கொலை செய்யத் தயங்க மாட்டார் என அழுத்தமாகப் படத்தை முடித்துள்ளனர். தன்னை விட வயது கு...
குடும்பஸ்தன் | Zee5 இல் மார்ச் 7 முதல்

குடும்பஸ்தன் | Zee5 இல் மார்ச் 7 முதல்

OTT, திரைத் துளி
திரையரங்குகளில் பெருவெற்றி பெற்ற குடும்பஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025இல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது. இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், கே. மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராபிக் டிசைனரான கதைநாயகன் நவீன், வேலை இழந்த பிறகு அவனது மனைவி வெண்ணிலா கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையைப் படுசிக்கலாக மாற்றுகிறது. அவரின் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை இக்கதை முழுக்க முழுக்க பரப்பரப்புடனும் நகைச்சுவையாகவும் சொல்கிறது. மோ...
எமகாதகி விமர்சனம்

எமகாதகி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நினைத்த காரியத்தை எப்படியும் சாதித்துவிடும் பெருந்திறல் மனம் வாய்க்கப் பெற்றோரை எமகாதகர் என்போம். அப்படி ஒரு நபராக உள்ளார் இப்படத்தின் நாயகி லீலா. லீலா எனும் இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் இறந்த அவளது உடலை வீட்டிற்குள் இருந்து எடுக்க முடியாமல் அமானுஷ்யமான முறையில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. உடல் துள்ளுகிறது, எழுந்து அமர்கிறது, அந்தரத்தில் சுவரோடு ஒட்டி நிற்கிறது. அந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கிறது. லீலாவிற்குத் தீங்கு நினைத்தவர்கள், அவளுக்குப் பிரச்சனை அளித்தவர்கள், அவள் மரணத்திற்குக் காரணமானவர்கள் என அனைவரும் சிக்கிய பின்பும், லீலாவின் மனத்தாங்கல் குறைந்தபாடில்லை. ஒரு தேர்ந்த குறுநாவலுக்கான முடிவோடு மிக அற்புதமாக முடிகிறது படம். நாயகியின் அம்மா சந்திராவாக நடித்துள்ள கீதா கைலாசம் தவிர அனைவருமே கிட்டத்தட்ட புதுமுகங்கள். ஆனால் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். ‘...
BV Frames | களவும் காதலும் – ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்

BV Frames | களவும் காதலும் – ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்

சினிமா, திரைத் துளி
பிவி ஃப்ரேம்ஸ் (BV Frames) நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துப் படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கிய சமூக பிரச்சனை ஒன்றைக் காதலும் த்ரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்கள் விரும்பும் ப...