Shadow

Tag: Team Aim

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

OTT, Web Series
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான நகைச்சுவை சரவெடி வகைமையில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. அஜீஸ் அசோக் இசையமைத்துள்ள மூன்றாவது வெப்சீரிஸ் இது. அவரது இசையில், ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இரண்டாவது வெப் சீரிஸ் இது. நடிகர் இளங்கோ குமரவேல், "இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன். அவரது முதல் சீரிஸிலும் இருக்கிறேன். மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர், ரைட்டர் பொன் பார்த்திபன் என நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு இய...
சட்னி சாம்பார் – யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ்

சட்னி சாம்பார் – யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ்

OTT, Web Series
இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், 'சட்னி - சாம்பார்' சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.  இந்த பெப்பி ராப் பாடல், உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கு இடையேயான போரையும், உணவுகளுக்கு இடையிலான நிலைப்பாட்டையும் காட்டுகிறது. இந்த ராப் பாடல் வரிகளை ராகுல் ஸ்ரீதர் (ஹிப்பி எழுத்தாளர்) எழுதியுள்ளார். நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார். ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிமுகப்படு...
மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்‌ஷன் த்ரில்லர்

மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்‌ஷன் த்ரில்லர்

இது புதிது
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய தயாரிப்பாள...
இந்தியன் 2 – படக்குழுவினர் விவரம்

இந்தியன் 2 – படக்குழுவினர் விவரம்

சினிமா
நடிகர்கள்:கமல்ஹாசன் சித்தார்த் காஜல் அகர்வால் ரகுல் ப்ரீத் சிங் எஸ்.ஜே.சூர்யா பாபி சிம்ஹா விவேக் பிரியா பவானி ஷங்கர் பிரம்மானந்தம் சமுத்திரக்கனி நெடுமுடி வேணு டெல்லி கணேஷ் மனோபாலா ஜெகன் காளிதாஸ் ஜெயராம் குல்ஷன் குரோவர் ஜாகீர் உசேன் பியூஸ் மிஸ்ரா அகிலேந்திர மிஸ்ராதொழில்நுட்பக் குழு:இயக்குநர் - ஷங்கர் இசை - அநிருத் ரவிச்சந்தர் ஒளிப்பதிவு - ரவிவர்மன் தயாரிப்பு வடிவமைப்பு - டி.முத்துராஜ் படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் வசனம் - ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார் சண்டை - அன்பறிவ், ரம்ஜான் புல்லட், அனல் அரசு, பீட்டர் ஹெயின், ஸ்டண் சில்வா, தியாகராஜன் VFX மேற்பார்வையாளர் - வி ஸ்ரீனிவாஸ் மோகன் நடன இயக்குநர் - போஸ்கோ, சீசர், பாபா பாஸ்கர் ஒலி வடிவமைப்பு - குணால் ராஜன் ஒப்பனை - வான்ஸ் ஹார்ட்வெல், பட்டணம் ரஷீத், ஏ.ஆர். அப்துல் ரசாக் ஆடை வடிவ...
இந்தியன் 2: கனவு நிஜமாகியுள்ளது | கமல்

இந்தியன் 2: கனவு நிஜமாகியுள்ளது | கமல்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2” ஆகும். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த் ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.நடிகர் கமல்ஹாசன், "இந்த வயதில் இப்படம் செய்யும் ஆர்வம் இவர்களிடம் இருந்து தான் வந்தது. எல்லாக் கலைஞர்களும் தந்த ஊக்கம் தான் என்னை இயக்கியது. நேர்மறை விசயங்கள் தாண்டி, இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, நிறையத் தடங்கல்களும் வந்தது. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ஆனால் இந்த உழைப்பு ரசிகர்களிடம் போய...
“இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு” – இயக்குநர் ஷங்கர்

“இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு” – இயக்குநர் ஷங்கர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2” ஆகும். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த் ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.நடிகர் சித்தார்த், "இது மிகப் பெரிய மேடை கமல்ஹாசன் சார், ஷங்கர் சார் இருவரும் அவர்களின் உழைப்பால் இந்த மேடையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மேடையில் நானும் இருப்பது பெருமை. 25 வருடம் கழித்து இரண்டாவது வாய்ப்பாக, என் குருவுடன் நடிக்கும் இந்த வாய்ப்பை ஷங்கர் சார் தந்துள்ளார். அவருக்கு நன்றி...
தலைமை செயலகம் விமர்சனம்

தலைமை செயலகம் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
என்றோ செய்த ஊழல், ஆளும் முதல்வரின் கழுத்தை நெறுக்க, முதல்வரின் கைத்தடிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அடுத்த முதல்வராவதற்கு காய் நகர்த்த, அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் பன்சால் மற்றும் அவன் கூட்டாளிகள் ஐவரைக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கௌலைகாரி துர்காவைத் தேடும் வழக்கு போலீஸ் இடமிருந்து சி.பி.ஐ.-க்கு மாற்றப்படுகிறது.  இந்த வட இந்திய மற்றும் தென் இந்திய நிகழ்விற்குமான தொடர்பு என்ன என்பதே இந்த தலைமை(ச்) செயலகம் இணைய தொடரின் கதை. ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் தயாரித்திருக்கும் இந்தத் தொடரை வசந்த பாலன் இயக்கி இருக்கிறார்.  கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், ஆதித்யா மேனன், சந்தான பாரதி, கவிதா பாரதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். எப்போதோ செய்த ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இர...
ஆர்.எம். வீரப்பன் | டி.ராஜேந்தரின் இரங்கல் கடிதம்

ஆர்.எம். வீரப்பன் | டி.ராஜேந்தரின் இரங்கல் கடிதம்

சினிமா, திரைச் செய்தி
மறைந்து விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஒப்பற்ற உதவியாளராக, சரித்திரம் படைத்த சத்யா மூவிஸ் நிறுவனத்தின் சாதனை படைத்த தயாரிப்பாளராக, பல்வேறு காலகட்டங்களில் அரசியல் களத்தில் போராட்ட வீரராக, அண்ணா திமுகவின் முன்னாள் அரும்பெரும் செயலாளராக, முன்னாள் அமைச்சராக ஒய்வின்றிப் பணியாற்றிய ஆருயிர் அண்ணன் ஆர்.எம்.விரப்பன் அய்யா அவர்களின் மறைவு மனதிற்குப் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய இழப்பு தமிழ் நல்லுலகிற்கே பெரும் இழப்பாகும். அமரராகிவிட்ட அய்யாவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A, தலைவர், இலட்சிய திமுக, தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் கௌரவ ஆலோசகர், தமிழ்...
பிரேமலு | ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

பிரேமலு | ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

சினிமா, திரைச் செய்தி
தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்...
இவி. கணேஷ் பாபுவின் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படம்

இவி. கணேஷ் பாபுவின் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படம்

Short Film, காணொளிகள், சினிமா
 வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கி நடித்திருக்கார்  இவி.கணேஷ்பாபு. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு குறும்படங்களை உருவாக்கி வருகிறது . அந்த வரிசையில் பார்வையற்றவர்களுக்காக இவி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்த குறும்படம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இயக்குநர் இவி.கணேஷ்பாபு, "பார்வையற்றவர்களுக்கான இந்த குறும்படத்தில் பார்வையற்ற ஒரு பெண்மணியே என்னோடு இதில் நடித்திருக்கிறார். மேலும் பிரத்தியேகமாக திருநங்கைகளுக்கான வாக்குரிமை மற்றும் காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்காக சைகை மொழியில் உருவாக்கிய குறும்படங்களை தேர்தல் விழிப்புணர்வுக்காக நான் இயக்கியதில் பெருமை அடைகிறேன்" என்றார். செழியன் குமாரசாமி தயாரிப்பில், ராஜராஜன் ஒலிப்பதிவில், சுராஜ்கவி படத்தொகுப்பில் இந்தக்...
தியேட்டர் வெற்றியைத் தொடர்ந்து ZEE 5 திரையில் மூன்று மொழிகளில் “காமி”

தியேட்டர் வெற்றியைத் தொடர்ந்து ZEE 5 திரையில் மூன்று மொழிகளில் “காமி”

சினிமா, திரைச் செய்தி
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தெலுங்கு பிளாக்பஸ்டர் 'காமி' திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, இந்த தெலுங்குப் படம் ஏப்ரல் 12 முதல், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 இல் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளது. கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க, அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள "காமி" திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதாவின் தெலுங்கு படமான ‘காமி’ ஒரு உணர்ச்சிகரமான கதையையும், ஒரு அட்டகாசமான சினிமா அனுபவத்தையும் ஒருங்கே தரும் படைப்பாக அமைந்துள்ளது. விஷ்வக் சென் மற்றும் சாந்தினி சௌத்ரியின் கவனம் ஈர்க்கும் கதாப...
சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறிய டி.இமானின் மாயோனே செல்ல மாயோனே‘  பாடல்

சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறிய டி.இமானின் மாயோனே செல்ல மாயோனே‘ பாடல்

சினிமா, திரைச் செய்தி
இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மாயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி.இமான், கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில், ரசிகர்களின் பாடல் பிளே லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துள்ளது டி.இமான் பாடல்கள். அந்த வரிசையில் தற்போது, கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பில், நட்சத்திர நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு‘ என்ற படத்தின் ‘மாயோனே செல்ல மாயோனே‘ என்ற பாடல், சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ளது. இணையம் ...
”தனஞ்செயன் சார் ஏமாற மாட்டார் அவருக்கு திரைத்துறை அறிவு அதிகம்.” – கேபிள் சங்கர்

”தனஞ்செயன் சார் ஏமாற மாட்டார் அவருக்கு திரைத்துறை அறிவு அதிகம்.” – கேபிள் சங்கர்

சினிமா, திரைச் செய்தி
ஃபோகஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா” ஆகும். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் விநாயக் துரை, "வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். பீட்சா படம் வந்த போது CV குமார் சாரைப் பார்த்துள்ளேன், அ...
படை தலைவன் படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ்

படை தலைவன் படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ்

சினிமா, திரைத் துளி
“புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ பார்த்து இயக்குநராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடமிருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், ‘நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி’ என்றார்.இதைக் கேட்டதும் இயக்குநராக எனக்கு மிகுந்த சந்தோஷம். கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையைக் காப்...
இசையும் நடனமும் இணையும் #arrpd6

இசையும் நடனமும் இணையும் #arrpd6

இது புதிது, சினிமா, திரைத் துளி
பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) தனது அடுத்த முயற்சியாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. அவர்களது முதல் தயாரிப்பில், பிரபு தேவாவையும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானையும் இணைத்துள்ளனர். இந்தப் பெரும் நட்சத்திரங்கள் இணையும் இப்படத்தை, பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS தயாரித்து, இயக்குகிறார். இந்தியத் திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அசத்த உள்ளனர். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் இப்படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும் என பிஹைண்ட்வுட்ஸ் நம்புகிறது. இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது என்றும், இந்திய ச...