Shadow

Tag: Team Aim

மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின் ஆகும். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் உதய் K. மேத்தா, "ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜுன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா ...
ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண – நாட்டிய நாடக நிகழ்வு | சீதாலட்சுமி விஜய்

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண – நாட்டிய நாடக நிகழ்வு | சீதாலட்சுமி விஜய்

இது புதிது, சமூகம்
சென்னை தி.நகர் கிருஷ்ணகான சபாவில் சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக 'பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம்' என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தைக் கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது. திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான டாக்டர் சோபனாவின் மாணவியான சீதாலட்சுமி விஜய் அவர்கள் தனது மாணவிகளுடன் இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார். ஒய்.ஜி.மகேந்திரன் தலைமை ஏற்க, நடனக் கலைஞர் உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு, ஆகஸ்ட் 31 அன்று தி.நகர் கிருஷ்ணகான சபாவில் 10 ஆவது முறையாக அரங்கேறியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரங்கம் நிறைந்த மக்களுடன் விழா நடைபெற்றது. "நமது அடையாளத்தை, நமது கலாச்சாரத்தை, அனைவரையும் ஈர்க்கும் விதமாக அற்புதமான நாடகமாக அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள்" என்று ஒய்.ஜி.மகேந்திரன்...
Gembrio Pictures – அர்ஜுன் தாஸின் ‘பாம்’ ஃபர்ஸ்ட் லுக்

Gembrio Pictures – அர்ஜுன் தாஸின் ‘பாம்’ ஃபர்ஸ்ட் லுக்

இது புதிது
ஜெம்ப்ரியோ (Gembrio) பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK, கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் என்டர்டெயினர் ட்ரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவினில் பேசிய தயாரிப்பாளர் சுதா சுகுமார், "ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம். நல்லதொரு குழுவின் உழைப்பில், மிகச் சிறந்த படைப்பாக இப்படம் வந்துள்ளது. ...
மனோரதங்கள் – சிக்கலான அக சுற்றுலா

மனோரதங்கள் – சிக்கலான அக சுற்றுலா

OTT, திரைத் துளி
இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்தப் படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதையம்சம் கொண்டது. 1. ‘மனோரதங்கள்’ திரைப்படம், இலக்கிய உலகின் பிதாமகனான எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும்வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் எழுத்தாளருக்கான இதயப்பூர்வமான அஞ்சலியாக இந்தப் படைப்பு உருவாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி திரைப்படம், வாசுதேவன் நாயரின் சின்னச் சின்னப் படைப்புகளின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து, அவரது இலக்கிய மரபு வரையறுத்துள்ள மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் ஆழங்களை பற்றிப் பார்வையாளர்களுக்கு ஒரு தரிசனத்தைத் தருகிறது....
போகுமிடம் வெகுதூரமில்லை – திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டம்

போகுமிடம் வெகுதூரமில்லை – திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் போகுமிடம் வெகு தூரமில்லை ஆகும். இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்கில் ஓடிக்வ்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களைக் கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குநர் பேசி இருப்பதாக ரசிகர்கள், பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம் மக்களிடம் சென்றிருக்கிறது. தற்போது 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப...
கோலி சோடா ரைசிங் | விஜய் மில்டன் | டீசர்

கோலி சோடா ரைசிங் | விஜய் மில்டன் | டீசர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின் அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R.K. விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற பிரவீன் K L படத்தொகுப்பினைச் செய்துள்ளார். இந்த...
2K லவ் ஸ்டோரி – சுசீந்திரனின் ரொமான்ஸ் திரைப்படம்

2K லவ் ஸ்டோரி – சுசீந்திரனின் ரொமான்ஸ் திரைப்படம்

சினிமா, திரைத் துளி
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, '2K லவ் ஸ்டோரி' படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் சுசீந்திரன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வைப் பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. வெடிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில்...
திரு. மாணிக்கம் | விஷால் சந்திரசேகரின் இசைக்கோர்வை

திரு. மாணிக்கம் | விஷால் சந்திரசேகரின் இசைக்கோர்வை

Others, காணொளிகள், சினிமா
நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சுகுமார் ஒளிப்பதிவில், பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ள திரு.மாணிக்கம் திரைப்படத்திற்காக சீதாராமம் புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் இசையால் இதயங்களை உருக வைக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு பகல் பாராது உருவாக்கியுள்ளார்.விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரு.மாணிக்கம் படத்தை ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் தயாரித்து உள்ளார்கள்....
கனா காணும் காலங்கள் – சீசன் 3 ஆகஸ்ட் 30 முதல்

கனா காணும் காலங்கள் – சீசன் 3 ஆகஸ்ட் 30 முதல்

OTT, Songs, Web Series, காணொளிகள்
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற 'நியூ ஏஜ் நியூ பேட்ச்' எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது.கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். அரவிந்த் அன்னெஸ்ட், ஷிபி சீனிவாசன், விக்ரம் பிட்டி, ஆர்த்தி அஷ்வின், கவிதா மற்றும் ஸ்ரீ ராதா ஆகியோர் அடங்கிய குழுவினர் குரல் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு - AJ திப்பு நடன இயக்கம் - அப்சர் இசை - ஃபுளூட் நவின் 'கனா காணும் காலங்கள்' முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்க...
“மனோரதங்கள் | எம்.டி வாசுதேவன் நாயர்க்குத் தட்சிணை” – மோகன்லால்

“மனோரதங்கள் | எம்.டி வாசுதேவன் நாயர்க்குத் தட்சிணை” – மோகன்லால்

OTT
ஜீ5, மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வரலாற்றுப் படைப்பான ​​‘மனோரதங்கள்’ தொகுப்பைப் பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும் வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசீகரிக்கும் இந்தத் தொகுப்பின் ஒரு கதையில் தோன்றியுள்ள நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் எம்.டி.யின் மகள் அஸ்வதி V நாயர் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான வெளியீட்டு நிகழ்வு, கோலாகலமாக நடைபெற்றது.மனோரதங்கள் படத்தின் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ள வாசுதேவன் நாயர் மகள், அஸ்வதி V நாயர் எம்.டி.யின் கடிதத்தைப் படித்துக் காட்டினார். அதில், வாசுதேவன் நாயர், தன்னுடன் மனோரதங்களில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.கடவுளின் சொந்த நாடான கேரளாவின் பசுமையான பின்...
1000 பேபிஸ் | டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஸ்பென்ஸ் தொடர்

1000 பேபிஸ் | டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஸ்பென்ஸ் தொடர்

OTT, Web Series
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "1000 பேபிஸ்" தொடர், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாராத் திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது."1000 பேபிஸ்" தொடரில் நீனா குப்தாவும், ரகுமானும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார். நஜீம் கோயா, அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளனர்.நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த் முரளி, ஜேம்ஸ் ஆலியா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.ஃபைஸ் சித்திக்கின் அற்புதமா...
வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களின்...
போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அன்பே சிவம், மாநகரம், அயோத்தி முதலிய படங்கள் வரிசையில், சக மனிதனுக்கு ஒன்றெனில் உதவ முன்வரவேண்டும் என்ற கருத்துடன் வெளிவந்துள்ள படம். படத்தைத் தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு வாழ்த்துகள். அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துக் கொண்டு செல்கிறார். அடிக்கடி நின்றுவிடும் தனது வண்டியைத் தள்ளுவதற்காக நளினமூர்த்தியை ஏற்றிக் கொள்கிறார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் குமார். அச்சிக்கலில் இருந்து அவர் மீண்டு பத்திரமாகக் களக்காடு சென்றடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு. கூத்துக் கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ் கலக்கியுள்ளார். மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை அவருக்கு அளித்துள்ளார் இயக்குநர் மைக்கேல் K. ராஜா. கதையின் நாயகன் என்றே சொல்லலாம். நளினமூர்த்தியின் இம்சையைப் பொறுத்துக் கொள்வதும் சிரமம், மி...
மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
சத்யராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' எனும் இணைய தொடரின் ட்ரெய்லரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது. இந்தத் தொடர் தவரும் ஆகஸ்ட் 16 முதல், ஒளிபரப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.  இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார். நடிகர் சத்யராஜுடன் பழம...
கியாரா கியாரா – காலத்தை வளைக்கும் மர்ம த்ரில்லர் | ZEE 5

கியாரா கியாரா – காலத்தை வளைக்கும் மர்ம த்ரில்லர் | ZEE 5

OTT, Web Series
மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம் வெள்ளிக்கிழமை மாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜீ5 -இல் சமீபத்தில் வெளியான, மர்ம திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3டி ப்ரொஜெக்ஷனை நடத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த த்ரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம், மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள 'கியாரா கியாரா' சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்டோரியன் கோதிக் (Gothic) கட்டடக்கலைக்குப் பெயர் பெற்ற டேவிட் சாசூன் நூலகம், மும்பையின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நிகழ்ச்சியின் தொடக்க நாளான ஆகஸ்ட் 9 அன்ற...