Shadow

Tag: Team Aim

‘ஹார்ட் பீட்’ சீரீஸ் -ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன?

‘ஹார்ட் பீட்’ சீரீஸ் -ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன?

OTT
‘ஹார்ட் பீட்’ சீரிஸ் ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கி வருகிறது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்குக் கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான் தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள். இந்த சூழ் நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றாள்? ரீனாவை மகளாக ஏற்றுகொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா? மேலான கேள்விகளுக்கு ரீனாவைப் போன்று ரசிகர்களும் பதிலை எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆச்சரியமான ட்விஸ்ட், அடுத்த வார அத்தியாயத்திற்காக, ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மேலும் பல திருப்பங்களுடன் , ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ‘ஹார்ட் பீட்’ சீரிஸ...
ஒன்பது நாடுகளில் டிரெண்டிங்  ஆகும் “கேப்டன் மில்லர்”

ஒன்பது நாடுகளில் டிரெண்டிங் ஆகும் “கேப்டன் மில்லர்”

சினிமா, திரைச் செய்தி
அமேசான் ப்ரைம் தளத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களைக் கடந்தும், உலகளவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்" ஆகும். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நட...
எமக்குத் தொழில் ரொமான்ஸ் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், பாலாஜி கேசவன் இயக்கத்தில் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் M. திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” ஆகும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டனர். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளைத் தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக...
பிரேமலு விமர்சனம்

பிரேமலு விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜாலியாய் ஒரு படம் பார்த்துச் சிரித்து மகிழ வேண்டுமென்றால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள பிரேமலு மிக நல்ல தேர்வாக இருக்கும். கல்லூரிக் காதல் புட்டுக் கொள்ள, UK போக விசாவும் கிடைக்காமல் போக, ஊரை விட்டு எங்கேயாவது போனால் பரவாயில்லை என்று நண்பனுடன் GATE பயிற்சிக்காக ஹைதராபாத் செல்கிறான் சச்சின். ஹைதராபாத்தும் சலித்து, சென்னையில் இருக்கும் நண்பர்களுடன் இணையலாம் என யோசிக்கும் பொழுது IT-இல் பணிபுரியும் ரீனுவைப் பார்க்கின்றான். கண்டதும் காதலில் விழ, ரீனுவை இம்ப்ரஸ் செய்ய சச்சின், அவனது நண்வன் அமல் டேவிஸுடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகள் தான் படத்தின் கலகலப்பான கதை. இத்தனை மெலிதான ஒரு கருவை, மிகவும் ரசிக்கும்படியான திரைக்கதையாக எழுதி அசத்தியுள்ளனர் இயக்குநர் கிரிஷ் AD-உம், கிரண் ஜோஸும். ‘காதல்டா! ஒரு தடவ தான் வரும், ஒருத்தங்க மேல தான் வரும்’ என ஓவர் எமோஷ்னல் ஆகாமல், அதில் அன்றாட வாழ்வின்...
சூரகன் – பெண்ணைக் காப்பாற்றி பிரச்சனையில் சிக்குபவன்

சூரகன் – பெண்ணைக் காப்பாற்றி பிரச்சனையில் சிக்குபவன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வழக்குரைஞரும் தயாரிப்பாளரும் நாயகனுமான கார்த்திகேயன், “சூரகன் ட்ரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்தப் படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என...
அவள் பெயர் ரஜ்னி – காளிதாஸ் ஜெயராமின் த்ரில்லர் படம்

அவள் பெயர் ரஜ்னி – காளிதாஸ் ஜெயராமின் த்ரில்லர் படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். நடிகர் அஸ்வின் குமார், "விடாமுயற்சிக்கு ஒரு உதாரணம் இந்தத் திரைப்படம். அவ்வளவு உழைத்துள்ளோம். பைலிங்குவலாக இரண்டு மொழிகளில் பெரிய உழைப்பில், இப்படத்தை உருவாக்கியுள்ளோம்" என்றார். நடிகர் ரமேஷ் கண்ணா S, "சின்ன படங்கள் தயாரிப்பது வெளியிடுவது இந்தக் காலத்தில் கடினமாக இருக்கிறது. சின்ன படங்களுக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. லோகேஷ் பெரிய படம் தருகிறார் அதில் 1000 பேர் பிழைக்கிறார்கள், அதே போல் சின்ன படங்களில் 200 பேர் வரை பிழைக்கிறார்கள். சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தர வேண்டும். லோகேஷ் போன்ற இயக்குநர் இம்மாதிரி படங்களுக்கு வந்து ஆதரவு தருவது மகி...
“ஸ்ரீகாந்த் தேவாவிற்கு இனி ஏறுமுகம்தான்!” – கட்டில் பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு

“ஸ்ரீகாந்த் தேவாவிற்கு இனி ஏறுமுகம்தான்!” – கட்டில் பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு

சினிமா, திரைச் செய்தி
Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் இ.வி.கணேஷ்பாபு, “கட்டில் படம் எல்லோரிடமும் சென்று சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஊடகம்தான். கவிஞர் வைரமுத்து ஐயாவை முதன் முதலில் பார்த்த போதே, அவரின் கம்பீரம் மிகவும் பிடித்திருந்தது. அவர் எவ்வளவு சிறந்தவர் என்று அவரிடம் நெருங்கிப் பழகினால் தெரியும். அவரை அருகிலிருந்து பார்த்தாலே போதும், அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள முடியும். அவர் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்குப் பெரு...
“கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளேன்” – ஸ்ருஷ்டி டாங்கே

“கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளேன்” – ஸ்ருஷ்டி டாங்கே

சினிமா, திரைச் செய்தி
Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இ.வி.கணேஷ்பாபு சார் மிகவும் சிறு வயதில் இருந்தே எனக்குப் பழக்கம். வீட்டில் நடக்கும் விழா அனைத்திற்கும் வருவார், இந்த விழாவையே வீட்டில் நடக்கும் ஒரு விழா போன்றே நடத்துகிறார். கட்டில் என்பதை ஒரு உருவகமாகத் தலைமுறை கடந்த ஒரு அடையாளமாகக் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் மெலடி இசை மிகவும் பிடித்திருந்தது. அப்பா வரிகளில் அவர் பாடல் அருமையாக வந்துள்ளது. ‘கோயில...
“கட்டில் – நினைவுகளின் வலியைப் பதிந்துள்ள திரைப்படம்” – கவிப்பேரரசு வைரமுத்து

“கட்டில் – நினைவுகளின் வலியைப் பதிந்துள்ள திரைப்படம்” – கவிப்பேரரசு வைரமுத்து

சினிமா, திரைச் செய்தி
Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர், நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது? அதை காலம் காட்டிக் கொடுத்து விடும். நேரம், தோல்வி, வெற்றி எல்லாம் தாண்டி என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகப் பயணித்து வருகிறார். அவர் என் அன்புக்குரியவர். கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர...
King of Kotha விமர்சனம்

King of Kotha விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் (1996) காலகட்டத்தில் கோதா என்னும் ஊரைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சில கூட்டங்களுக்கு இடையேயான யுத்தமும், ஒட்டு மொத்த கூட்டத்தையும் துடைத்துத் தூக்கிப் போட நினைக்கும் காக்கிச் சட்டைகளின் காய் நகர்த்துதலுக்கும் இடையேயான அன்பும் நட்பும் காதலும் ஏமாற்றமும் துரோகமும் வயோதிகமும் இரத்தமும், இதனோடு பெண்களின் அரசியலையும் உள்ளடக்கியது தான் ‘கிங் ஆஃப் கோதா’வின் கதை. கோதா என்னும் ஊர் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதான கார்ட்டூன் கதை சொல்லலுடன் தொடங்கும் கதை, அந்த ஊருக்குப் புதிதாக வந்து சேரும் உதவி ஆணையரின் பார்வையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யார் என்று ஆய்வாளர் மூலம் விளக்கப்படும் காட்சிகளின் மூலம் பெரும் கதையாக விரிகின்றது. ‘கண்ணன் பாய்’ என்கின்ற ஒருவனின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும் ஊர், போதைக் கலாச்சாரத்தில் தள்ளாடு...
டைனோசர்ஸ் விமர்சனம்

டைனோசர்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் பெயரைப் போலவே படக்கதையும் மிகப் பெரியது. ஒரு வரிக்குள் இதன் கதையை அடக்கவே முடியாது. டைனோசர்ஸ் எப்படி ஒரு புரியாத புதிரோ அப்படித்தான் டைனோசர்ஸ் (Die No Sirs) படத்தின் கதையும். நாயகன் மண்ணு-விற்கு ஒரு கதை, துரைக்கு ஒரு கதை, சாலயார்-க்கு ஒரு கதை, கிளியப்பனுக்கு ஒரு கதை, நாயகன் மண்ணுவின் அண்ணனுக்கு ஒரு கதை, நாயகி தீபாவுக்கு ஒரு கதை, மத்தியச் சிறையில் இருந்து வெளியான கைதிக்கு ஒரு கதை, இது போதாதென்று மண்ணு-வின் அப்பா, அம்மா, சாலயார், கிளியப்பன் இவர்களுக்கு ஒரு கதை. இந்தக் கதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டவே இல்லை என்பது தனிக்கதை. கிளியப்பன், சாலயார் என இரண்டு குழுவிற்கும் பகை. இதிலெல்லாம் தலையிடாமல் நாயகன் மண்ணு, அவன் அண்ணன் பழனி, அவர்களின் அம்மா மூவரும் வாழ்கிறார்கள். பழனியின் நெருக்கமான நண்பன் துரை சாலயாரின் கையாள். கல்யாணம் ஆகி பத்தே நாளில் கொலை வழக்கில் ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய சூழல் வர,...
சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

OTT, Web Series, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன், "சட்னி சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்கக் காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார். நடிகர் யோகிபாபு, "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர...
பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
புட் சட்னி யூ-டியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகனும், ப்ளாக் ஷீப் யூ-டியூப் சேனல் குழுவினர் மொத்த பேரும் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாலோ என்னவோ மொத்த படமும் ஒரு யூ-டியூப் வீடியோ பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது. இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பது தான் பத்தின்ட கரு. ஆனால் இந்தக் கருத்தை சொல்வதற்கான கதையோ, திரைக்கதையோ படத்தில் இருக்கிறதா என்றால் சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். 2k கிட்ஸ்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே படம் எடுத்தது போல் இருக்கிறது. அவர்களுக்கு அட்வைஸ் என்றால் பிடிக்காது, சீரியஸ்னஸ் என்றால் ஆகவே ஆகாது, செண்டிமென்ட் என்றால் கிரிஞ்ச் என்பார்கள். அவர்களுக்கு ஜாலியாக இருப்பது மட்டுமே பிடிக்கும். ஆனாலும் அவர்கள் மிகுந்த பொறுப்பு...
ராயர் பரம்பரை விமர்சனம்

ராயர் பரம்பரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பரம்பரை பரம்பரையாக நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான் ராயர் பரம்பரை திரைப்படத்தின் கதை. ஒரு முனையில் காதல் பிடிக்காத அப்பா, க மறுமுனையில் காதலிக்கும் மகள், சண்டை, பிரச்சனை, இறுதியில் சுபம். இதுதான் ராயர் பரம்பரை. பரம்பரைக்கே பழக்கப்பட்ட கதையாக இருப்பது ஒன்றும் ஆகப் பெரிய தவறில்லை. ஆனால் அந்தக் கதை சுவாரசியமும் இல்லாமல், உணர்வோடும் ஒன்றாமல், சிரிக்கவும் வைக்காமல் அலைக்கழிப்பதைத் தவிர்த்திருக்கவேண்டும். கதை வலுவில்லாமல் இருக்கும் போது, அதன் திரைக்கதையாவது வலுவாக நின்று கதையைத் தாங்க வேண்டும். இப்படத்திலோ திரைக்கதை எங்கே போகிறது என்றே தெரியாமல் ஏதோ ஒரு திசையில் போய்க் கொண்டிருக்கிறது. முதற்பாதி முழுவதும் நாயகன் - நாயகி இருவரும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள். நாயகன் கழுகு கிருஷ்ணாவைக் காதலிப்பதாக சொல்லி அவரின் இரண்டு தோழிகள் லூட்டி அடிக்கிறார்கள். தங்கை ஓடிப் போனதால் காதலே பிடிக்காத ராயராக ...
“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

OTT, சினிமா, திரைத் துளி
இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான குட் நைட் திரைப்படத்தை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக ஜூலை 3 முதல் வழங்குகிறது. இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில், மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில், அருமையான நகைச்சுவை டிராமாவான குட் நைட் திரைப்படம் வெளியானது. குறட்டை ஒலியும், அது சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வுகளையும் அதன் மீதான கருத்துக்களையும் அலசுகிறது இந்தப் படம். ஒருவனின் வாழ்க்கையையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது. குறட்டை விடுவதால், அவதிப்படும் மணிகண்டனுக்கும், அவரது மனைவியாக நடித்துள்ள மீதாவிற்கும் உள்ள உறவையும், அவர்கள் வாழ்வில் குறட்டை ஏற்படுத்தும் தாக்கங்களையும் நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இப்படம். மோகனின் குறட்டை சத்தம் அனுவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இறுதி...