Shadow

Tag: Thiraivimarsanam

மர்மர் விமர்சனம் | Murmur review

மர்மர் விமர்சனம் | Murmur review

சினிமா, திரை விமர்சனம்
தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) திரைப்படம். இப்படத்தில் பின்னணி இசையும் இல்லை, மற்ற படங்கள் போல் பிரத்தியேகமான கேமரா ஒளிப்பதிவும் இல்லை. போகிற போக்கில், நாம் மொபைலிலோ, கேமராவிலோ படம்பிடிக்கும் ரா ஃபூட்டேஜ்கள் (Raw footage) போல்தான் முழுப்படமுமே உள்ளது. அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களைப் பதிவிடும் ஏழு யூடியூபர்கள், ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிச்சாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாகப் பதிவு செய்யச் செல்கிறார்கள். அவர்கள் காணாமல் போகின்றனர். அவர்களைக் கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களைப் பறிமுதல் செய்கின்றனர். அந்த யூடியூபர்களின் கேமராவில் பதிவான ஏழு மணி நேர ஃபூட்டேஜ்களைத் தொகுத்து ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது. ரிஷி, மெல்வின், அங்கிதா, ஜெனிஃபர் என நான்கு யூட்யூபர்களும், காந்தா எனும் உள்ளூர்ப் பெண்ணும் ...
எமகாதகி விமர்சனம்

எமகாதகி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நினைத்த காரியத்தை எப்படியும் சாதித்துவிடும் பெருந்திறல் மனம் வாய்க்கப் பெற்றோரை எமகாதகர் என்போம். அப்படி ஒரு நபராக உள்ளார் இப்படத்தின் நாயகி லீலா. லீலா எனும் இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் இறந்த அவளது உடலை வீட்டிற்குள் இருந்து எடுக்க முடியாமல் அமானுஷ்யமான முறையில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. உடல் துள்ளுகிறது, எழுந்து அமர்கிறது, அந்தரத்தில் சுவரோடு ஒட்டி நிற்கிறது. அந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கிறது. லீலாவிற்குத் தீங்கு நினைத்தவர்கள், அவளுக்குப் பிரச்சனை அளித்தவர்கள், அவள் மரணத்திற்குக் காரணமானவர்கள் என அனைவரும் சிக்கிய பின்பும், லீலாவின் மனத்தாங்கல் குறைந்தபாடில்லை. ஒரு தேர்ந்த குறுநாவலுக்கான முடிவோடு மிக அற்புதமாக முடிகிறது படம். நாயகியின் அம்மா சந்திராவாக நடித்துள்ள கீதா கைலாசம் தவிர அனைவருமே கிட்டத்தட்ட புதுமுகங்கள். ஆனால் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். ‘...
கூரன் விமர்சனம்

கூரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும். தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை. கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, வசனமெழுதி நடித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரை ‘குருவே’ என்றழைத்துக் கொண்டு அவரது வீட்டில் வளர்கிறார் இந்திரஜா. சந்திரசேகர் இந்திரஜாவை எப்பொழுதுமே ‘குண்டம்மா’ என்றே அழைக்கிறார். பெட்டிக்கடையில் ஒருவன் இந்திரஜாவின் உடலைக் கேலி செய்யும் விதமாகப் பேசி, ‘குட்டி யானை’ எனும் விளிக்கும்பொழுது, அவன...
அகத்தியா விமர்சனம்

அகத்தியா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திருவண்ணாமலையைச் சேர்ந்த அகத்தியன், ஒரு படத்தில், முதல்முறையாகக் கலை இயக்குநராகப் பணிபுரிய ஒப்பந்தமாகிறார். அதற்காகப் பாண்டியில் ஒரு வீட்டில், சொந்த செலவில் கடன் வாங்கி செட் போட்டுவிடுகிறார். ஆனால், படப்பிடிப்பே நடக்காமல் அப்படம் நின்றுவிடுகிறது. வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக அவ்வீட்டை ‘பேய் பங்களா’வாக மாற்றுகிறார். அமானுஷ்யமான முறையில் அதுவும் தடைப்படுகிறது. அந்தப் பங்களாவில் நிகழும் அமானுஷ்யத்திற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பதை உணர்கிறான் அகத்தியா. மேலும், இரத்தப் புற்றுநோயில் பாதிக்கப்பட்ட தன் தாயின் உடல்நலக் குறைவுக்கும், அப்பங்களாவில்தான் எங்கோ 80 வருட மருந்து மறைந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அகத்தியனுக்கும் அந்த பங்களாவுக்கும் என்ன சம்பந்தம், அந்த மருந்து அகத்தியனுக்குக் கிடைத்ததா, அம்மருந்து அப்பங்களாவிற்குள் எப்படி வந்தது என்பதுதான் படத்தின் முடிவு. சித...
சப்தம் விமர்சனம்

சப்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அமானுஷ்ய சக்தி, சத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அதனால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள, அவ்வாமானுஷ்யத்தைப் புலனாய்வு செய்ய புலனுக்கெட்டாத (Paranormal) மர்மத்தைக் கண்டுபிடிக்க, மும்பையில் இருந்து ரூபன் வைத்தியலிங்கம் மூணாருக்கு வரவைக்கப்படுகிறார். அந்தச் சத்தத்தின் பின்னாலுள்ள மர்மத்திற்கான பதிலே இப்படத்தின் கதையோட்டம். ஈரம் படத்திற்குப் பிறகு, ஆதி, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் அறிவழகன் ஒன்றிணைந்துள்ளனர். நீரை மையமாகக் கொண்டு ஈரத்தில் கலக்கியவர்கள், இதில் சத்தத்தைத் தொட்டுள்ளனர். ஒலியைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தில், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் மிகப் பெரும் பாய்ச்சலைச் செய்துள்ளது. சினிமா விஷுவல் மீடியம் எனச் சொல்லப்பட்டாலும், அது உண்மையில் மல்ட்டி மீடியாவாகும். அதன் ஒரு பகுதியான ஒலியைக் கொண்டு ஒரு கதையைச் சொல்லியுள்ளனர். படத்தின் முதற்பாதி ஈர்ப்பிற்கு அதுவே காரணமாக அமைக...
DRAGON விமர்சனம்

DRAGON விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில் பார்க்க வேண்டிய ஜாலியானதொரு படம். கெட்டவனாகப் பொறுக்கியாக இருந்தால்தான் கெத்து என கல்லூரியில் அரியர் வைப்பதைப் பெருமையாக நினைக்கிறான் D.ராகவன். அதன் பலனாக வாழ்க்கை அவனை எப்படிலாம் புரட்டுகிறது என்பதுதான் படத்தின் கதை. லவ் டுடே படத்திற்குப் பிறகு, மற்றுமொரு வெற்றிப்படத்தில் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். படத்தின் முதற்பாதியில் ஏகத்திற்கும் சிகரெட் பிடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஐடியில் இணைந்த பின், பசங்களிடம் ஒரு பளபளப்பும் மினுமினுப்பும் ஏற்படும். ஒரு கோடி ரூபாய்க்கு வீடு, ஒளடி கார் வாங்கினாலும், உருப்படாமல் இருந்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே அவரைக் காட்டுகின்றனர். நல்லவேளையாகப் புறத்தில் மட்டுமே அப்படி, அகத்தில் அவரிடம் ஏற்படும் மாற்றமே படத்தை மிகவும் அழகாக்கியுள்ளது. கீர்த்தியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். வழக்கமான படமாக மாறிவிடாமல் பட...
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷின் இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படம். நிலாவைக் காதலிக்கிறான் பிரபு. நிலாவின் தந்தை கருணாகரனது கடைசி நாட்கள், அவர் ஆசைப்பட்டப்படி அமையவேண்டுமென நிலாவை விட்டுப் பிரிகிறான் பிரபு. பிரபு ஏன் பிரிந்தான் எனத் தெரியாமல் கோபம் கொள்ளும் நிலா, அவனுக்குத் தன் கல்யாண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். கோவாவில் நடக்கும் அத்திருமணத்திற்குச் செல்கிறான் பிரபு. அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. வழக்கமான காதல் கதை என தலைப்பிற்குக் கீழாகவே உபதலைப்பு போட்டுவிடுகின்றனர். முதற்பாதியும் அப்படியே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், கோவா சென்றடைந்த பின், படத்தின் கலகலப்பு அதிகமாகிறது. படத்தின் தொடக்கம் முதலே மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருந்தாலும், இரண்டாம் பாதியில் அதகளம் புரிகிறார். குடி, பார்ட்டி, காதல் என்பதைத் தாண்டி படத்தின் கதாபாத்திரங்கள் எதையுமே யோசிப்பதில்லை. ...
ராமம் ராகவம் விமர்சனம்

ராமம் ராகவம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராமாயணத்தில், தசரதனின் ஆக்ஞையை ஏற்று வனவாசம் சென்றார் ராகவன். இப்படத்தில், ராகவனுக்காக அசாத்தியமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறார் தசரதன். தசரத ராமன் எனும் நேர்மையான அரசு அதிகாரிக்கு, ராகவன் எனும் சூதாடி மகன். மகனை உயிருக்கு உயிராக நேசிக்கும் தந்தைக்கும், அப்பாவை உள்ளூற மிகவும் வெறுக்கும் மகனுக்கும் இடையேயான சிக்கலான உறவை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டுள்ளது ராமம் ராகவம் படம். இப்படத்தின் கதை, 'விமானம்' படத்தின் இயக்குநர் சிவபிரசாத் யானாலா-வுடையதாகும். தனராஜ் கொரனானியின் முதற்படம் எனச் சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி – பிரமோதினியின் ஜோடியின் மகனாக அவர் ஒட்டாமல் அந்நியமாக அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் இல்லாமல் தனித்துத் தெரிகிறார். எனினும் சூதில் பெருவிருப்பம் கொண்ட ஊதாரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். பார்வையாளர்களின் கோபத்திற்க...
காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சமூகம் பேசத் தயங்கும், பேசினாலும் அருவருப்பாக அதை அணுகும் விஷயத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது படம். சாமுக்கும் நந்தினிக்குமான காதலை, சாமின் தாயிடம் சொல்வதுதான் படம். சாமாக லிஜோமோலும், நந்தினியாக அனுஷா பிரபுவும் நடித்துள்ளனர். மகளின் காதலனை வரவேற்கும் ஆர்வம் கலந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் லக்ஷ்மி. லக்ஷ்மியாக ரோகிணி நடித்துள்ளார். லெஸ்பியன் இணைகளுக்கு ஆதரவாக இருக்கத் துணைக்கு வரும் ரவீந்திராவை மாப்பிள்ளையாக நினைத்துக் கொள்கிறார் ரோகிணி. ரவீந்திரவாக நடித்துள்ள கலேஷ், சங்கடத்துடன் அந்தச் சூழலை அணுகுவது ரசிக்க வைக்கிறது. அந்தச் சூழலின் பதைபதைப்பைப் பாத்திரங்கள் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியாகப் படத்தின் முதற்பாதி சட்டெனக் கடந்துவிடுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில், பிரதான கதாபாத்திரங்கள், ஓரினசேர்க்கையை எதிர்த்தும் ஆதரித்தும் பேசியவண்ணம் உள்ளனர். ஒரு வீட்டுக்குள்ளேயே, கதாபாத்திரங்...
தண்டேல் விமர்சனம்

தண்டேல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தண்டேல் என்றால் தலைவர் எனப் பொருள்.ஆந்திராவின் மச்சதேசம் எனும் மீனவக் கிராமத்தில் இருந்து 22 பேர் குஜராத் சென்று மீன் பிடிக்கின்றனர். எல்லையைத் தாண்டிவிட்டார்கள் என பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து விடுகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வலுவான காதல் கதையைத் தந்துள்ளார் இயக்குநர் சந்து மொண்டேட்டி.அமரன் படத்தில் ஒரு இராணுவ வீரிரன் காதல் மனைவியாக நடித்து, அந்தப் பாத்திரதிற்கு உயிர் கொடுத்தாரோ, அப்படி தண்டேல் படத்தில், ஒரு மீனவக் கிராமப் பெண்ணாக நடித்து தண்டேல்க்கு உயிர் கொடுத்துள்ளார். தன் பேச்சைக் கேட்காமல், நாயகன் மீன் பிடிக்கச் சென்று விடுகிறான் என்ற சாய் பல்லவியின் ஏமாற்றத்தில் இருந்து படம் தொடங்குகிறது. பத்தின் முதற்பாதி, சாய் பல்லவியின் கோணத்தில் இருந்தே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், பாகிஸ்டான் சிறையில் நடக்கும் சம்பவங்களால் அமைந்துள்ளது.பான்-இ...
விடாமுயற்சி விமர்சனம்

விடாமுயற்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நோக்கத்தை, குறிக்கோளை அடையும் பொருட்டு ஒருவர் மேற்கொள்ளும் செயலை முயற்சி (try/ effort) எனலாம். அத்தகைய முயற்சியில் வெற்றி பெறாவிட்டால், துவண்டு அப்படியே அம்முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பதை விடாமுயற்சி எனலாம். ஒரு போட்டியில் கோப்பையை வெல்ல மேற்கொள்ளும் செயல்களை முயற்சி என்றழைக்கலாம். அப்போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், மனம் துவளாமல் அடுத்த முறையிலோ, அடுத்தடுத்த முறையிலோ வென்று காட்டுவதற்கு விடாமுயற்சி தேவைப்படுகிறது. ஒரு கார் பயணத்தில் மனைவி கயலைத் தொலைத்து விடுகிறார் அர்ஜுன். அஜித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன். கயலை எப்படிப் போராடி அர்ஜுன் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மனைவியோ, குடும்ப உறுப்பினரோ, தொலைந்துபோகும் பொழுது, வெறுமென முயற்சி செய்யாமல் போராடி மீட்பதுதான் நாயகனுக்கு அழகு. அஜித்தும் அதைத்தான் செய்கிறார். ஆனால், தனது ரசிகர்க...
ரிங் ரிங் விமர்சனம்

ரிங் ரிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிவாவின் பிறந்தநாள் விழாவிற்கு, அவனது நண்பர்களான தியாகு, கதிர், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தியாகுவும், கதிரும் அவர்களது மனைவியுடன் கலந்து கொள்ள, அர்ஜுன் மட்டும் தனியாகக் கலந்து கொள்கிறான். அனைவரையும் வரவேற்கிறாள் சிவாவின் மனைவி பூஜா வரவேற்கிறாள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தும்போது, கைபேசியில் யார் ரகசியத்தைப் பாதுகாக்கின்றனர் என்ற விவாதம் விளையாட்டாய் நடக்கிறது. அதன் முடிவாக, யாருக்கு எந்தச் செய்தி வந்தாலும் அதை மற்றவர்களுக்குக் காட்டவேண்டும், அழைப்பு வந்தால் அதை லவுட்-ஸ்பீக்கரில் போட்டுப் பேசவேண்டுமென முடிவெடுக்கின்றனர். விளையாட்டு மெல்ல சூடுபிடித்து விபரீதமாவதுதான் படத்தின் கதை.ரஞ்சனியுடன் லிவிங்-டுகெதரில் வாழும் கதிர் எனும் பாத்திரத்தில் டேனியல் ஆன்னி போப் நடித்துள்ளார். ரஞ்சனியாக ஜமுனா நடித்துள்ளார். தன்னைத் தானே நகைச்சுவையாளனாக நினைத்து ஏமாற்றிக் கொள்ளும் அர்...
ராஜபீமா விமர்சனம்

ராஜபீமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பிக் பாஸ் - சீசன் 1 (2017) வெற்றியாளரான ஆரவ் நாயகனாக நடித்திருக்கும் படம். அவர் பிக் பாஸை விட்டு வெளியானதுமே எடுக்கப்பட்ட படம். படம் தயாராகி சுமார் ஆறு வருடங்கள் ஆகிறது. ஓவியாவுடனான ஆரவின் புகழ்பெற்ற மருத்துவ முத்தம் ரெஃபரென்ஸ் படத்தில் வருகிறது. ஓவியாவும் ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார். யோகிபாபு இளமையாகக் காணப்படுகிறார்.ராஜா என்பவர் பீமா எனும் யானையை வளர்க்கிறார். முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் ராஜாவின் யானைக்குப் பதிலாக, வேறொரு யானையை அவருடையது என முகாம் அதிகாரிகள் சொல்கிறார்கள். பீமாவிற்கு என்னானது, ராஜா எப்படி தன் யானையை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.வனத்துறை அமைச்சரிடம் வேலைக்குச் சேரும் துர்கா பாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். பீமாவை மீட்க உதவுவதோடு, யானைகளின் தந்தங்களைக் கடத்தும் கும்பலையும் கண்டுபிடிப்பதற்கும் உதவும் கதாபாத்திரம் அவருக்கு. சுரபி திரையரங்கத்...
குடும்பஸ்தன் விமர்சனம்

குடும்பஸ்தன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'குடும்பஸ்தனா வெற்றிகரமான வாழ்க்கை வாழணும்ன்னா வளைஞ்சி நெளிஞ்சி தான் ஆகணும்' என்றும், 'அப்படிலாம் வளைஞ்சி நெளியணும்ன்னு தேவையில்ல' என்றும் இரு தரப்பு மல்லுக்கட்டுகிறது. அந்தக் குடும்ப மல்லுக்கட்டு ஈகோவில் எந்தக் கொள்கை முந்துகிறது என்பதே குடும்பஸ்தன் கதையாகும். கதையின் சின்ன லைனாக இதை எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அழகான லேயர்ஸை வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. மணிகண்டன் காதலித்து வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். காதல் மனைவி சான்வே மேகனாவிற்கு கலெக்டராக வேண்டும் என்பது இலக்கு. அப்பா ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தனது பழைய வீட்டைச் சீர் செய்ய வேண்டும் என்பது இலக்கு. அம்மாவிற்கோ 50 ஆயிரம் ரூபாய் பேக்கேஜில் ஆன்மிக டூர் போக வேண்டும் என்பது இலக்கு. இத்தனை பேர்களின் இலக்குகளுக்கும் நமது ஹீரோ மணிகண்டனே பொறுப்பு. தனது அக்கா கணவர் குரு சோமசுந்தரத்தின் ஈகோ முன் தடுமாறிடக்கூடாது ...
Ramayana: The Legend of Prince Rama விமர்சனம்

Ramayana: The Legend of Prince Rama விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
“நான் ஷத்திரியனாக இருப்பதை விட மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்” - யூகோ சாகோவின் ராமன். ஜப்பானிய இயக்குநர் யூகோ சாகோ, 1993 இல் உருவாக்கிய 2டி அனிமேஷன் படத்தை, 4K மாஸ்டெரிங் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர் கீக் பிக்சர்ஸ். ஒரு ஜப்பானியரின் பார்வையில் ராமாயணத்தைப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது. உதாரணத்திற்கு, அனுமன் கடலின் மீது பறக்கும் போது சிம்ஹிகா எனும் ராட்சசி, அனுமனை விழுங்கி விட்டதாகப் புராணக்கதையில் வரும். அதே போல், சுரஸா எனும் ராட்சசி பறக்கும் சக்தியுள்ள ஊர்வன ஜந்துக்களின் தாய் என அழைக்கப்படுபவரும், அனுமனை வழி மறிப்பார். சிம்ஹிகாவின் வயிற்றுக்குள் புகுந்து வயிற்றைக் கிழித்து வெளியேறும் அனுமன், சுரஸாவின் வாய்க்குள் புகுந்து உடலைச் சின்னதாக்கி சட்டென வெளியில் வந்துவிடுவார். யூகோ சாகோ-வோ, இலங்கைப் பயணத்தில் அனுமன் எதிர்கொள்ளும்ருகத்தை டிராகனாகக் காட்டியுள்ளார். டிராகனைக் க...