Shadow

Tag: Thiraivimarsanam

உடன்பால் விமர்சனம்

உடன்பால் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம்.பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், சகோதர - சகோதரி பந்தம், குயுக்தி, கடன் சிக்கல் என மனித மனங்களை ஆக்கிரமிக்கும் உணர்வுகளைக் கலகலப்பாகத் தொட்டுச் செல்கிறது படம்.இந்தப் படத்தின் கதையை, விநாயகத்தின் குடும்பக்கதை என இரண்டு வார்த்தையில் சொல்லலாம். விநாயகமாக சார்லி நடித்துள்ளார். அவரது அனுபவத்திற்கு அசால்ட்டாய் ஸ்கோர் செய்யக்கூடிய பாத்திரத்...
நெடுநீர் விமர்சனம்

நெடுநீர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நெடுநீர் என்றால் கடல் எனப் பொருள்படும். கடலூரைக் கதைக்களமாகக் கொண்ட படம் என்பதால் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. கதையின் நிகழ்வும் கடலும், கடல் சார்ந்த பகுதிகளிலுமே நடக்கிறது. தனது தந்தையிடம் இருந்து சிறுமியான அமுதாவைக் காப்பாற்ற, அப்பாவைத் தாக்கிவிட்டு அமுதாவுடன் ஓடி விடுகிறான் சிறுவன் கருப்பசாமி. இருவரும் பிரிந்துவிட, இளைஞனாகும் கருப்பு பல குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான். பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளும் கருப்பைக் கொலை செய்ய, தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்படும் பொழுது, அமுதாவின் கண்களில் விழுகிறான். கொலைகாரனாக உருமாறி இருக்கும் கருப்புவும், அமுதாவும் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதே நெடுநீர் படத்தின் கதை. தனது உயிரைக் காக்கும் கருப்பசாமியைக் காப்பாற்றி, அண்ணாச்சி அவனைத் தனது வளர்ப்பு மகன் போலவே வைத்துக் கொள்கிறார். அவரது தொழில் வாரிசாக அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்துகிறார். தனது நண்பர...
பேய காணோம் விமர்சனம்

பேய காணோம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படாதபாடுபட்டு ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, படமொன்றை இயக்கச் செல்கிறார் செல்வ அன்பரசன். அங்கே நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களால், அதுவரை எடுக்கப்பட்ட படம் அனைத்தும் வினோதமான முறையில் மறைந்துவிடுகிறது. காணாமல் போன ஒரு பேய்தான் அதற்கு காரணமான தெரிய வருகிறது. பேயைக் கண்டுபிடித்துப் படத்தை முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பேயாக மீரா மிதுன் நடித்துள்ளார். ஒப்பனை கலைஞருக்கு யார் மீது என்ன கோபமோ என்ற எண்ணத்தை எழுப்பும் வண்ணம், மீரா மிதுனிற்கான ஒப்பனை அமைந்துள்ளது. நாயகனாக G. கெளசிக்கும், நாயகியாக சந்தியா ராமசந்திரனும் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு உதவாத பாத்திரத்தில் முல்லை கோதண்டம் தோன்றியுள்ளார். கதை, திரைக்கதையும் மிகவும் பலவீனமாக உள்ளது. ஃப்ளாஷ்-பேக் காட்சிகயில் வரும் தருண் கோபி – மீரா மிதுன் கதையும் கூட ரசிக்கும்படியாக எடுக்கப்படவில்லை. படத்திற்குள் எடுக்கப்படும் படத்தை இயக்குபவராக...
லத்தி விமர்சனம்

லத்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கான்ஸ்டபிள் முருகானந்தம், ஹாலிவுட் ஹீரோவிற்கு இணையாக ஒரு மிஷனைக் கையிலெடுத்துச் சாதித்து முடிக்கிறார். சஸ்பெண்டில் இருக்கும் முருகானந்தத்திற்கு, அவரது லத்தி சார்ஜ் திறமைக்காக மீண்டும் வேலை கிடைக்கிறது. ‘இனி லத்தியால் யாரையும் அடிப்பதில்லை’ எனத் தீர்மானிக்கும் முருகானந்தம், அதன் பின் சுமார் நூற்றைம்பது பேரை அடி வெளுக்கிறார். சரியாகச் சொல்வதனால், என்கவுன்ட்டர் செய்வதை ஹீரோயிசமாகக் கருதும் கோலிவுட்டின் சூப்பர் காப்பாகவே மாறிவிடுகிறார். நர்ஸ் கவிதாவாக வரும் சுனைனாவின் தேர்ந்த நடிப்பால், படத்தின் முதற்பாதி அழகாகிறது. நன்றாக நடிக்கும் அவரை உபயோகித்துக் கொள்ள தமிழ் சினிமா காட்டிவரும் சுணக்கம் துரதிர்ஷ்டவசமானது. முருகானந்தத்தின் மகன் ராசுவாக மாஸ்டர் லிரிஷ் ராகவ் நன்றாக நடித்துள்ளார். ஒரு பெண், வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள். அதைச் செய்தது யாரென மர்மமாகவே இருக்க, விஷால் அதைக் கண்டுபிடிக்...
Project C – Chapter 2 விமர்சனம்

Project C – Chapter 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு தமிழ்ப்படமே! அதுவும் 88 நிமிடங்கள் மட்டுமே ஓடி, பார்வையாளர்கள் நேரத்தை மிகவும் மதிக்கிறது. மூன்று பாகங்கள் கொண்ட படத்தின், இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு, இந்தியாவின் முதல் சோஃபமோர் (Sophomore) திரைப்படம் என உரிமை கோரியுள்ளனர். பி.எஸ்சி, கெமிஸ்ட்ரி படித்த ராம்க்கு, சரியான வேலை கிடைக்காததால், படுக்கையில் அசைய முடியாமல் இருக்கும் ஒரு மருத்துவரைக் கண்காணிக்கும் வேலையில் சேருகிறான். மருத்துவரின் கண்டுபிடிப்பான ஒரு மருந்திற்கான தேவையைத் (demand) தெரிந்து கொள்ளும், அதன் மூலம் அதீதமாகச் சம்பாதிக்கத் தொடங்குகிறான். அவனிடமுள்ள பணத்தை அபகரிக்க நினைக்கிறாள் சமையல் வேலை செய்யும் பஞ்சவர்ணம். அந்த மருந்திற்கான ஃபார்முலாவைத் தேடியவாறு உள்ளார் பிசியோதெரபிஸ்ட்டாக அவ்வீட்டிற்கு வரும் மருத்துவரின் உதவியாள். பணமும் ஃபார்முலாவும் யாருக்குக் கிடைத்தது என்பதே படத்தின் கதை. வேலையில்லாமல் அல்லலுறும்...
ஜாஸ்பர் விமர்சனம்

ஜாஸ்பர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்திருக்கும் முதல் ஹிட்மேன் படமென பட நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளனர். அடிதடி என வாழும் ஜாஸ்பர், போலீஸ்க்கு உதவும் ஒரு ஹிட்மேனாக உருமாறி வேட்டையாடுகிறான். அவன் குடும்பத்தை இழந்ததும் அனைத்தையுன் விட்டுத் தலைமறைவாகி விடுகிறான். ஜாஸ்பர் கிழப்பருவம் எய்தி முதுமையை அடையும் தருவாயில் உள்ள பொழுது, அவனது பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் கடத்தப்படுகிறான். அந்த இளைஞனை மீட்க மீண்டும் ஹிட்மேனாக மாறுகிறான் ஜாஸ்பர். குடித்துக் குடித்து தன்னைச் சீரழித்துக் கொள்ளும் ஜாஸ்பரால், பக்கத்து வீட்டு இளைஞனைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. ஹிட்மேனின் அறிமுகம் ஒரு தோப்பில் நிகழ்கிறது. படத்தின் கதைக்களம் மிகவும் பெரியது. ஆனால், படத்தின் பட்ஜெட் காரணமாக எல்லாம் மிக எளிமையாக நிகழ்கின்றன. மிஸ்டர் ஜே எனும் ஹிட்மேன்க்கு அதிசய சக்திகள் உள்ளதாக வதந்தியும் பயமும் மக்களிடையே எழுகிறது. அத...
என்ஜாய் விமர்சனம்

என்ஜாய் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
A சான்றிதழ் பெற்றுள்ள படம். கல்லூரி முடித்த மூன்று இளைஞர்களையும், கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளையும் சுற்றிப் படத்தின் கதை நடக்கிறது. இளைஞர்களின் வாலிப பொழுதுபோக்கு ஒரு பக்கம்; உடுத்தும் உடையாலும், உபயோகப்படுத்தப்படும் கம்மி விலை கைப்பேசியாலும் அல்ட்ரா மாடர்ன் பெண்களால் இளக்காரமாக நடத்தப்படும் மிடில் கிளாஸ் & மெரிட் மாணவிகளின் மன இறுக்கமும், அவர்களது ஆடம்பர வாழ்விற்கான ஏக்கமும் ஒரு பக்கம் என இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. முதற்பாதி படத்தின், தூக்கலான இரட்டை அர்த்த வசனங்களுக்கும், மாடி வீட்டு ஷாலுவின் வசன உச்சரிப்பு த்வனிக்கும் தாராளமாக A+ என சிறப்புச் சான்றிதழே அளிக்கலாம். படத்தின் முதற்பாதியை இதற்கென்றே ஜாலியாக ஒதுக்கியுள்ளனர். இரண்டாம் பாதியில், சுதந்திரம் என்பது எதுவரை இருக்கவேண்டுமென இளம்பெண்களுக்கு ஓர் அட்வைஸோடு முடித்துள்ளார் அறிமுக இயக்குநர் பெருமாள் காசி....
கனெக்ட் விமர்சனம்

கனெக்ட் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாயா, கேம் ஓவர் முதலிய படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள பேய்ப்படம். ரெளடி பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். ஆன்னாவின் தந்தையான மருத்துவர் ஜோசஃப், கொரோனா காலத்தில் இறந்து விட, தன் தந்தையுடன் பேசவேண்டுமென்ற ஆசையில் ஒயிஜா போர்டின் உதவியோடு, ஆவியுலகத்தைத் தொடர்பு செய்ய முயல்கிறார். அந்தத் தொடர்பை உருவாக்கும் முயற்சி தவறுதலாகி (Wrong connection), தீங்கு விளைவிக்கும் கடவுளுக்கெதிரான சாத்தான் ஆன்னாவின் உடலில் ‘கனெக்ட்’ ஆகி விடுகிறது. அந்த சாத்தான் தனியாக ‘கனெக்ட்’ ஆகாமல் கொரோனாவயும் அழைத்து வந்து விடுகிறது. லாக்டவுனில், அதிலும் குறிப்பாக க்வாரென்டெயினில் மாற்றிக் கொள்ளும் நேரத்தில், அந்த துர் ஆவியை தன் மகளின் உடலிலிருந்து டிஸ் கனெக்ட் செய்ய, ஆன்னாவின் அம்மா சூசன் எப்படிப் போராடுகிறார் என்பதே பட்த்தின் கதை. சிறுமி ஆன்னாவுக்கும், அவளது தந்தைக்குமான பாசம்தான் கத...
அவதார் 2 விமர்சனம்

அவதார் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பலவருட கனவும், பதிமூன்று வருட உழைப்பும், அவதார் 2 ஆகத் திரை கண்டுள்ளது. ஒரு முழுமையான படமாகப் பார்த்தால் எந்தவிதத்திலும் குறைவில்லாத திரைப்படம் அவதார். எந்த ஒரு தருணத்திலும் நம் கண்களைத் திரையை விட்டு அகலச் செய்யாத காட்சிகள். உணர்வுபூர்வமான பல தருணங்கள் என்று சிற்சில மாயாஜாலங்கள் நிகழாமல் இல்லை. ஆனாலும், அவதார் ஒன்றுடன் சடுதியில் நிகழ்ந்துவிட்ட இணைப்பு அவதார் இரண்டில் நடக்கவில்லை என்பது மட்டுமே உள்ளுக்குள் இருக்கும் ஒரே உறுத்தல். மூன்றே கால் மணி நேரப்படத்தில், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான இணைப்புக் கதையாகச் சொல்லப்படும் கதையை அவசர அவசரமாக சொல்லிச் சென்றது கூட அந்த இணைப்பை உருவாக்கத் தவறியிருக்கலாம். அத்தனை நாவிக்கள் செத்துக் கிடக்கும்போது, நாயகன் தன் குழந்தையை மட்டும் தேடிப் பரிதவிக்கும் காட்சியினால் கூட அந்த விலகல் ஏற்பட்டிருக்கலாம். காரணம், நாயகன் தன் குழந்தைக்கு அப்பன் ...
வரலாறு முக்கியம் விமர்சனம்

வரலாறு முக்கியம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கேரளப் பெண்ணைக் காதலித்து மணம் முடிப்பதை வரலாறென்றும், அது பதியப்படுவது முக்கியமென்றும் கருதி ஒரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராஜன். யமுனா, ஜமுனா என்ற கேரளத்துச் சகோதரிகள், கார்த்திக்கின் தெருவிற்குக் குடி வருகின்றனர். தங்கை ஜமுனா கார்த்திக்கைக் காதலிக்க, கார்த்திக்கோ ஜமுனாவை விட அழகாக இருப்பதாக நினைக்கும் யமுனாவைக் காதலிக்கத் தொடங்குகிறான். அக்கேரளத்துப் பெண்களின் அப்பாவிற்கு, மகள்களை துபாய் வாழ் மணமகனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆசை. அவரது எதிர்ப்பை மீறி, கார்த்திக் தன் காதலில் எப்படி வாகை சூடுகிறான் என்பதே படத்தின் கதை. நாயகனை யூ-ட்யூபராகக் காட்டினாலும், வேலை வெட்டியில்லாதவர் கணக்கிலேயே அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் போல் வைக்க வேண்டியுள்ளது. அழகான பெண்ணைக் கண்டதும் காதல், பின் அவள் ஒத்துக் கொள்ளும்வரை இடைவிடாது துரத்திக் கொண்டே இருப்பதென இயக்குநர் ராஜேஷின் எஸ்.எம்.எஸ். ஹே...
விஜயானந்த் விமர்சனம்

விஜயானந்த் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கன்னடத் திரையுலகின் முதல் சுயசரிதை படம் (பயோபிக்). ஒரு லாரியை 5036 லாரிகளாக மாற்றிய ஒரு பெரும் தொழிலதிபரின் வெற்றிப் பயணமே இப்படம். வெற்றியும் மகிழ்ச்சியும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து உழைப்போருக்கு எப்படியும் சாத்தியப்பட்டுவிடும் என நம்பிக்கையை விதைக்கிறது தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை. ஓர் அடி எடுத்து வைக்க நினைத்தால் ஐந்து அடி பின்னால் தள்ளக் காத்திருக்கும் வியாபார உலகில், குடும்பத் தொழில் விட்டுவிட்டு புதிய தொழிலில் காலில் வைக்கும் விஜய் சங்கேஷ்வரின் அதீத்த்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அது அத்தனை சுலபமல்ல எனத் தெரிந்தும், எது அவரை விடாப்பிடியாக அத்தொழிலில் கட்டிப் போட்டது என்பதற்கான அழுத்தமான பதில் இல்லாதது குறை. மிகப் பிரயத்தனப்பட்டுக் கிடைக்கும் முதல் சவாரியில், லாரியின் ஒரு பின்சக்கரம் பாளம் பாளமாக வெடித்துப் பழுதாகிவிடுகிறது. அந்த முதல் சவாலை அவர் எப்படிச் சமா...
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வடிவேலின் கம்-பேக் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பினை உருவாக்கிய படம். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என கதை சொல்லி பில்டப்பை ஏத்தும், தலைநகரம் படத்து நாய்சேகருக்கும், இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் மாறுபட்ட கதையிலும் வேடத்திலும் வடிவேலு தோன்றியூள்ளார். பணக்காரர்களின் நாய்களைத் திருடி, அவர்களிடம் பணம் பெற்றுக் கோண்டு நாயை ஒப்படைக்கும் திருடன் சேகர். தாஸ் எனும் தாதாவின் நாயைத் தெரியாமல் திருடி விட, சேகர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அதே சமயம், சேகரின் குடும்பத்திலிருந்து திருடப்பட்ட நாய் பற்றித் தெரிய வர, அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் சேகர். நாயை மீட்டானா, தாஸிடமிருந்து தப்பினானா என்பதே படத்தின்கதை. ஆன்ந்த்ராஜ், முனீஷ்காந்த், ராவ் ரமேஷ், லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி, மனோபாலா, சஞ்சனா சிங், லொள்ளு சபா சேஷு, வ...
Dr. 56 விமர்சனம்

Dr. 56 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அம்பத்தாறு நிமிடங்களுக்கு ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டால் இறந்துவிடக்கூடிய நபரொருவர், ஒரு விஞ்ஞானியையும் இரண்டு மருத்துவர்களையும் கொன்ற குற்றத்திற்காக்க் கைது செய்யப்படுகிறார். அவர் யார், அவருக்கும் அந்தக் கொலைகளுக்கும் தொடர்பு என்பதே படத்தின் கதை. அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி நடித்துள்ளார். மிடுக்கான நடை, அலட்சியமான பார்வை என்று புறத்தோற்றத்தில் அசத்தலான அதிகாரியாக உள்ளார். கிடைக்கும் துப்புகளை ஒருவரைச் சட்டென கைதும் செய்துவிடுகிறார். ஆனால், உண்மையான குற்றவாளியோ, வழக்கிற்கு உதவுவது போல் ப்ரியாமணியிடம் குற்றத்தைப் பற்றி ஒப்பிக்கிறார். ‘சாவதற்கு முன் உண்மைகளை சி.பி.ஐ. அதிகாரி அறிந்து கொள்ளட்டுமே!’ என்ற நல்லெண்ண அடிப்படையில் வில்லன் செயல்படுவது திரைக்கதைக்கு வேட்டு வைக்கும் காரியம். குற்றங்களை மூடி மறைப்பதோடு மட்டுமல்லாமல், சிபிஐ அதிகாரியையே கொல்ல...
குருமூர்த்தி விமர்சனம்

குருமூர்த்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார். ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓர்...
விட்னெஸ் விமர்சனம்

விட்னெஸ் விமர்சனம்

OTT, OTT Movie Review, திரை விமர்சனம்
பொதுச் சமூகத்தின் பரவலான கவனத்தைப் பெறாத ஒரு பெரும் சமூக அவலத்திற்கு, பார்வையாளர்களைச் சாட்சியாக்கியுள்ளார் இயக்குநர் தீபக். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையும், அதனால் நிகழும் மரணங்களும் இன்றும் நிகழ்கின்றன. அதுவும் எத்துணை நயமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் அப்பணி சுமத்தப்படுகிறது என உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் தீபக். கல்லூரி மாணவனான பார்த்திபனைக் கட்டாயப்படுத்தி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிச் சுத்தம் செய்ய வைக்கின்றனர். விஷ வாயு தாக்கி அவன் இறந்துவிட, அக்கொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைகின்றனர் அந்த அப்பார்ட்மென்ட் வாசிகளும், கான்ட்ராக்டரும். தொழிற்சங்கத் தலைவரான பெத்துராஜின் தூண்டுதலில், பார்த்திபனின் அம்மா இந்திராணி, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென நீதிமன்றத்தை அணுகுகிறார். என்ன தீர்ப்பு வருகிறது என்பதே படத்தின் முடிவு. ...