32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 139)
குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ் சினிமா

குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியான படம் குடிமகன். “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் இயக்கி இருந்தார். இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “குடிமகன் திரைப்படம் […]

09/04/2019 Dinesh R
காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo சினிமா

காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo

DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரைப் பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. பாடலாசிரியர் மற்றும் DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து […]

09/04/2019 Dinesh R
உறியடி 2 விமர்சனம் சினிமா

உறியடி 2 விமர்சனம்

2016 இல் வெளியான உறியடி மிக ஃப்ரெஷான அரசியல் படமாக ரசிகர்களைக் கவர்ந்தது. பிரித்தாளும் அரசியல்வாதிகள் Vs ஒற்றுமையான மாணவர்கள் என்பதாகப் படம் மறக்கவியலாததொரு அனுபவத்தை அளித்தது. இப்படமும் அப்படியே மனதில் தங்கும். போபால் விஷ வாயு கசிவைக் கண் முன் கொண்டு வந்து மிகப் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார். மக்களின் உயிரை மயிறுக்குச் சமானமாக நினைக்கும் கொழுத்த தொழிலதிபர்தான் படத்தின் வில்லன். மக்கள் ஏன் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகின்றனர், மக்களுக்கான அரசாங்கம் எப்படி தொழிலதிபருக்காகச் […]

06/04/2019 Dinesh R
ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம் சினிமா

ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ஆஸ்கர் விருது வாங்கிய செளண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி நடிகராக அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்டத்தக்கது. ரசூல் பூக்குட்டிக்கு, திருச்சூர் பூரம் திருவிழாவின் முழு இசையையும் ஒலிப்பதிவு செய்யவேண்டுமென ஆசை. அது அவருக்கு சாத்தியமானாதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் டாக்குமென்ட்ரி வகைமையைச் சேர்ந்தது. பத்துக்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுக்க, முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்க, ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் இந்தியாவின் மிகப் பெரும் திருவிழா. அவ்விழாவின் இசையை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்வது […]

06/04/2019 Dinesh R
குப்பத்து ராஜா விமர்சனம் சினிமா

குப்பத்து ராஜா விமர்சனம்

எதற்கும் அலட்டிக் கொள்ளாத ராக்கெட் குப்பத்திற்கே ராஜாவாகச் சுற்றி வருகிறான். திடீரென ஒருநாள் அவன் தந்தை இறந்துவிட, ராஜா நிலைகுலைகிறான். அவனது தந்தையைக் கொன்றது யாரெனவும், அக்குப்பத்தில் நிகழும் அசாம்பாவிதங்களுக்கும் காரணம் எதுவென்பதும்தான் படத்தின் கதை. ஊர் நியாயம் என்ற கதாபாத்திரத்தில் G.V.பிரகாஷின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். மகனின் மீது பாசம் பொழிவதையும், குடிப்பதையும் தவிர வேறொன்றும் அறியாத மனிதர். அவரது மரணத்தில் இருந்துதான் படத்தின் கதை தொடங்குகிறது. படத்தின் முதற்பாதி முழுவதும் கதையே இல்லாமல், காதல், […]

06/04/2019 Dinesh R
குடிமகன் விமர்சனம் சினிமா

குடிமகன் விமர்சனம்

ஆறேழு கி.மீ. தள்ளிப் போய்க் குடித்துக் கொண்டிருந்ததற்கும், ஊர்க்குள்ளேயே டாஸ்மாக் கொண்டு வந்ததற்கும், என்ன வேறுபாடு எனப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது ‘குடிமகன்’ படம். ஒரு ஊருக்குள் டாஸ்மாக் வருகின்றது. குடிப்பழக்கமில்லாத கந்தனுக்கு குடியைப் பழக்குகின்றனர் அவன் நண்பர்கள். குஇப்பழக்கத்திற்கு அடிமையாகும் கந்தனின் குடும்பம் எந்தக் கதிக்கு உள்ளானது என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டாய் நாயகனைக் குடிக்க வைக்கும் அவனது நண்பர்கள், நாயகனின் வீழ்ச்சிக்குச் சாட்சியாகிறார்கள். அரசாங்கமே மக்களின் குடிப்பழக்கத்தை நம்பித்தான் இயங்குகிறது என்னும் வாதம் எவ்வளவு […]

05/04/2019 Dinesh R
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4 சினிமா

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

தியாகராஜன் குமாரராஜாவின் உலகத்தில், வேம்பு, ஷில்பா, துளசி, லீலா என 4 பெண் கதாபாத்திரங்கள் பிரதான இடம்பெறுகின்றனர். படைப்பாளன் அவர்களுக்கு அளித்துள்ள குணம் (!?- குற்றம்), வாழ்விடம், தண்டனை குறித்து நான்-லீனியரில் அடுக்கினால், படைப்பாளனின் அரசியலைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். குணவார்ப்பு: வேம்பு, தனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்கிறார். ஷில்பா சர்வைவலுக்காகப் பிச்சை எடுக்கிறார், பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார், குழந்தைகளைக் கடத்தி விற்கிறார். ஜோதி – நெருப்பு; பதிவிரதை; படி தாண்டாப் பத்தினி. லீலா, […]

05/04/2019 Dinesh R
ஆட்டிசம் 2019 Others

ஆட்டிசம் 2019

ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, AVTISM: Think Different என்ற கருத்தரங்கை நிடத்தினார்கள். ராதிகா செளந்தரராஜன், நித்யா மோகன், உஷா ராமாகிருஷ்ணன், விவேக் மிஸ்ரா, ரேமா ரகு ஆகிய மருத்துவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குறிப்பாக, ‘Neuromodulation for challenging behaviours” என்ற தலைப்பில், TMS சிகிச்சை முறை பற்றி மருத்துவர் விவேக் மிஸ்ரா விளக்கியது ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவல்லது. TMS – Transcranial Magnetic Stimulation […]

04/04/2019 Dinesh R
தறி – நெசவுக்கலை பற்றிய தொடர் சமூகம்

தறி – நெசவுக்கலை பற்றிய தொடர்

தைரியமும் மனஉறுதியும் கொண்டு, துன்பங்களில் இருந்து மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அவர்கள் வாழுகிற சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான நேர்மறையான சவாலுக்கு உட்படுத்துவதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட நமது தமிழ்நாட்டில் மிகவும் இளைய பொதுபொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதைத் தொடும் கதையம்சம், மனஉறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர்களின் திறமையைத் தனது நிகழ்ச்சிகளின் மூலம் காட்சிப்படுத்திக் கொண்டாடி வருகிறது. இந்த […]

03/04/2019 Dinesh R
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3 சினிமா

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

எந்த ஒரு தமிழ்ப்படமும் தந்திராத அனுபவத்தைத் தந்துள்ளதால், சூப்பர் டீலக்ஸ் மிகப் பெரிய விவாதத்தைப் பொதுவெளியில் திறந்துவிட்டுள்ளது. படத்தினை விடப் பார்வையாளர்களின் கோணங்கள் வெகு சுவாரசியமாய் உள்ளது. ரசனையில் முதிர்ந்தோரை, இந்தத் தமிழ்த் திரையுலகம் தான் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது? ஷில்பாவை சக உயிராகப் பார்க்காமல் ஒரு ஜடமாகப் பார்த்துள்ளார் என்ற எனது குறைப்பாட்டிற்குக் கிடைத்த ஒரு மறுமொழி இது: ‘மீட்சிக்காக, பாவமன்னிப்பிற்காகப் பயணம் போற ஒரு ஜீவன் ஷில்பா. சுனாமியில் தப்பித்து, ஏன் தப்பித்தோமெனத் தெரியாமல் […]

03/04/2019 Dinesh R
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2 சினிமா

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

ஒரு கதை சொல்லட்டுமா? திருவாரூர் தொகுதியில், அமமுக கட்சியின் வேட்பாளர் பெயர் எஸ்.காமராஜ். அமமுக-விற்குக் குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் செய்த அதிகார மையம், அதே தொகுதியில் சுயேட்சையாக நிற்கும் B.காமராஜ்க்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கிக் குழப்பத்தை உண்டு செய்ய முயல்கிறது. தோட்டத்து வாசல் மூலம் உள்ளே நுழைவதில் பெரும் பிரேமை கொண்டவர்களின் தர்மம் (தேவை), இப்படியான குழப்பத்தை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கும். ‘தென்னந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம்’ தொடங்க உதவி செய்து தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய […]

02/04/2019 Dinesh R
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1 சினிமா

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1

சூப்பர் டீலக்ஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள படம் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை. குத்துப்பாட்டு, சண்டை என ஒரே மாதிரியான திரையிலக்கணத்தில் படங்கள் பார்த்துச் சலித்துவிட்ட ரசிகர்களுக்குப் புத்தம் புதியதொரு உலகத்தைத் திறந்துவிட்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஒவ்வொரு ஃப்ரேமும், முழுமையாக அவரது கிரியேட்டிவ் கட்டுப்பாட்டிற்குள் உருவாகியுள்ளது. ஒரு வீட்டினைக் காட்டுகிறார் என்றால், அந்த வீட்டின் சுவரின் நிறம், அங்குள்ள பொருட்கள், அவற்றின் நிறம், அவை வைக்கப்பட்டிருக்க வேண்டிய இடமெனச் சகலத்தையும் கவனமாகச் சிருஷ்டிக்கிறார். ஒரு […]

01/04/2019 Dinesh R
சூப்பர் டீலக்ஸ் விமர்சனம் சினிமா

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

வாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும் நீளமான படம். மணமாகிவிட்ட வேம்பு, தனது கல்லூரிக் காதலனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இறந்து விடுகிறான்; பள்ளியைக் கட்டடித்து விட்டு பிட் படம் பார்க்கும் பள்ளி மாணவர்களின் ஒருவனது அம்மா அந்தப் படத்தில் தோன்றுகிறார்; வீட்டை விட்டு ஓடிப் போய்விட்ட தந்தையை முதல்முறையாகப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவன் முன் ஷில்பா வந்து இறங்குகிறாள்; தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சுனாமியில் சிக்கிய தன்னைக் காப்பாற்றிய […]

29/03/2019 Dinesh R