32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 140)
ஐரா விமர்சனம் மற்றவை

ஐரா விமர்சனம்

‘ஐரா’ என்றால் யானையின் குறியீடு என்கிறார் இயக்குநர் சர்ஜுன். ‘என்னது ஐரான்னா யானையா?’ என வாய் பிளந்தால் ஐராவதம் என்கிறார். இதென்ன இந்திரனின் வெள்ளையான வாகனத்துக்கு வந்த சோதனை எனக் குழம்பி, யானையின் ஞாபகச்சக்திக்கும், பழிவாங்கும் குணத்திற்குமான குறியீடாகத் தலைப்பை உருவகப்படுத்திக்க வேண்டியுள்ளது. விபத்தில் இறந்துவிடும் கருப்பு நயன்தாராவான பவானியின் பழிவாங்கும் படலம் தான் ஐரா படத்தின் ஒரு வரிக் கதை. பட்டாம்பூச்சி எனப் படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமானதாய் இருந்திருக்கும். படத்தின் தொடக்கம் முதலே […]

28/03/2019 Dinesh R
உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும் சினிமா

உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், “இந்த படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது” என்றார். படத்தின் இயக்குநர் விஜய் குமார் பேசுகையில், “இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ […]

24/03/2019 Dinesh R
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம் அயல் சினிமா

ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்

ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன் படத்தின் முதற்பாகம் 2010இலும், இரண்டாம் பாகம் 2014இலும், தற்போது மூன்றாம் பாகமும் வெளியாகியுள்ளன. டிராகன்களைக் கொல்லும் டிராகன் வேட்டையனான கிரிம்மலிடம் இருந்து தப்பிக்க, புதிய பாதுகாப்பான மறைவான வசிப்பிடத்தைத் தேடுகிறான் ஹிக்கப். ஹிக்கப்பின் டிராகனான டூத்லெஸ் எனும் நைட் ஃப்யூரி, லைட் ஃப்யூரியைச் சந்திக்கிறது. அதன் தொடர்ச்சியாய், டிராகன்கள் மட்டும் வசிக்கும் பிரத்தியேகமான டிராகன் உலகத்தைக் கண்டடைகின்றனர். கிரிம்மலிடமிருந்து அனைவரும் எப்படிப் பாதுகாப்பாகத் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. முந்தைய […]

24/03/2019 Dinesh R
எம்பிரான் விமர்சனம் சினிமா

எம்பிரான் விமர்சனம்

எம் + பிரான் என்பதற்கு ‘எனது தேவன்’ எனப் பொருள்படும். ஜெயாவிற்குப் பிரியன் மீது ஒருதலையாகப் பயங்கரமான காதல். எவ்வளவு முயற்சி செய்தும், தனது காதலை வெளிப்படுத்தும் தைரியம் அவளுக்கு ஏற்படுவதே இல்லை. காதலைச் சொல்லும் முன், அவள் கோமாவிற்குச் சென்று விடுகிறாள். ஜெயாவின் காதல், பிரியனை எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பதுதான் படத்தின் கதை. படம் லோ-பட்ஜெட் என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். உதாரணமாக, கதாநாயகி வீட்டில் அவளும், அவளது தாத்தாவும் என […]

23/03/2019 Dinesh R
எம்பிரான் – ரொமெடிப் படம் சினிமா

எம்பிரான் – ரொமெடிப் படம்

“முற்றிலும் வேறுபட்ட சூழலில் இருந்து வரும் இருவரின் இடையே வரும் காதலைப் பற்றிய நகைச்சுவைப் படம். ரொமான்ஸும், காமெடி கலந்த படங்களை ‘ரொமெடி’ எனும் வகையின் கீழ் வரும். திரைக்கதை முற்றிலும் மாறுபட்டவை, வசனங்களைக் காட்டிலும் காட்சிகளின் மூலமே கதையைக் கொண்டு செல்கிறோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி காதலைச் சேர்த்து வைப்பது போல கதை அமைந்துள்ளது. ஜெயா மற்றும் பிரியனின் கதாபாத்திரங்களில் ராதிகா பிரீத்தி மற்றும் ரெஜித் மேனன் நன்றாக நடித்துள்ளனர். கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ள […]

21/03/2019 Dinesh R
ஆதி, ஹன்சிகாவின் ‘பாட்னர்’ சினிமா

ஆதி, ஹன்சிகாவின் ‘பாட்னர்’

நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும். RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான “பாட்னர்” என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யு டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் […]

20/03/2019 Dinesh R
கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம் சினிமா

கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகள் மட்டுமன்று. உணர்வுபூர்வமான சில தருணங்களும் கூட! தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து ‘96 படத்தைத் தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார். தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகமே இந்த விருதை மிகவும் உணர்வுபூர்வமான […]

19/03/2019 Dinesh R
அகவன் விமர்சனம் சினிமா

அகவன் விமர்சனம்

அகவன் என்றால் உள்ளிருப்பவன் எனப் படத்தின் உபத்தலைப்பிலேயே விளக்கம் உள்ளது. ஏகனான சிவன், அனைத்து உயிரினங்களுள்ளும் அநேகனாய் உறைந்துள்ளான் என்பதே படத்தலைப்பின் பொருள். பெருவெள்ளம் ஏற்பட்ட காலத்தில், லிங்கோத்பவராய் உயர்ந்து நிற்கும் சிவனின் ஓவியத்தைக் கண்ட ராஜராஜ சோழனுக்கு ஓரெண்ணம் எழுகிறது. அதன் படி, ஒவ்வொரு கோயிலின் ராஜ கோபுரத்திலும் சில ரகசிய ஏற்பாடுகளை அமைக்கிறார். அதென்ன ரகசியம் என்பதும், அந்த ரகசியத்தை அறிந்து கொண்ட தீயவர்களின் சதித்திட்டம் எப்படிக் கலையப்படுகின்றது என்பதும்தான் படத்தின் கதை. தத்துவச் […]

17/03/2019 Dinesh R
ஜூலை காற்றில் விமர்சனம் சினிமா

ஜூலை காற்றில் விமர்சனம்

“உன்னாலே உன்னாலே” படத்தில், ‘ஜூன் போனா ஜூலை காற்றில்’ என்ற பாடலை பா.விஜய் எழுதினார். ஜீவாவின் அப்படத்திற்கு, இந்தத் தலைப்பையும் அவர் ஓர் ஆப்ஷனாக வைத்திருந்தார். அவரது அசிஸ்டென்ட்டான KC.சுந்தரம், ஜீவாவிற்கு ட்ரிப்யூட் செய்யும் வண்ணம் தனது முதல் படத்திற்கு ‘ஜூலை காற்றில்’ எனத் தலைப்பிட்டுள்ளார். ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதலை, உறவுச்சிக்கலை மையமாகக் கொண்ட படமிது. படத்தை ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சுந்தரம். கடைசி அத்தியாயமான ‘Moving […]

16/03/2019 Dinesh R
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம் சினிமா

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

கோவக்கார இளைஞனான கெளதம் மீது தாராவிற்குக் காதல் மலர்கிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ஹரிஷ் கல்யாண் அருகில் ஒரு கதாநாயகி மிளிர்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். பியார் பிரேமா காதல் படத்திலும் கூட ரெய்ஸாவைப் பின்னுக்குத் தள்ளி தன் பிரகாசமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை வெளிப்படுத்தியிருப்பார் ஹரிஷ். இப்படத்திலும், கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத்க்கு அதே பிரச்சனைதான். அவரது நடிப்பாலும், ஃப்ரேமில் தனியாகத் தெரியும்பொழுது ஈர்த்தாலும், நாயகனுடனான க்ளோஸ்-அப் காட்சியில் சோடை போகிறார். மஞ்சுளாவைக் […]

16/03/2019 Dinesh R
கேப்டன் மார்வெல் விமர்சனம் அயல் சினிமா

கேப்டன் மார்வெல் விமர்சனம்

‘அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்’ படத்தில் தானோஸினை மண்ணைக் கவ்வச் செய்யும் போகும் சக்தி எது? கேப்டன் மார்வெல் என்ற க்ளூவினை ‘அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார்’ படத்தில் கொடுத்திருப்பார்கள். யார் அவர், அவரது சக்தி என்ன போன்ற விஷயங்களுக்குப் பதிலாக வந்துள்ளது கேப்டன் மார்வெல் படம். மார்வெலின் கதை சொல்லும் பாணிக்கு, இப்படம் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கேப்டன் மார்வெல் தானோஸ்க்குப் பெரும் சவாலாக இருப்பார் எனும் நம்பிக்கையைத் தருகிறது. யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் பைலட்டாக […]

13/03/2019 Dinesh R
கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு அயல் சினிமா

கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

வீடென்பது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்படுவது அல்ல. அன்பின் நிறைவு மட்டுமே ஒரு வீட்டை வீடாக மாற்றவல்லது. ‘கும்பளாங்கி நைட்ஸின்’ கதையை இப்படி ஒற்றை வரி ‘க்ளிஷே’வுக்குள் அடக்கி விடலாமா என்றால்… கூடாது. இந்தத் திரைப்படம் சொல்லும் பல்வேறு அடுக்குகளில் அதுவுமொன்று என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். எண்ணற்ற மனித உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஆனந்தமும் கண்ணீரும் வீழ்ச்சியும் உயர்ச்சியும், வலியும் இறுமாப்பும், காதலும், பொறாமையும், வியப்பும், மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் அவைகளை […]

13/03/2019 Dinesh R