OthersDinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
Others
அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் – ட்ரெய்லர்

சீமத்துரை விமர்சனம்
சீமை – அரசர் ஆண்ட நிலப்பகுதி அல்லது வெளிநாடு என இரு வேறு பொருளைக் கொள்ளலாம்; துரை – இந்தியாவில் வசித்த ஐரோப்பியர்களைக் குறிக்கும் சொல். ஆக, சீமைத்துரை என்றால் அதிகாரத் தோரணை மிகுந்த நடத்தையை உடையவர் எனப் பொருள் கொள்ளலாம். நாயகன் அப்படிப்பட்ட குணவார்ப்பு உடையவரெல்லாம் இல்லை. ஆனால், அவரது அம்மாவிற்கு தன் மகன் சீமத்துரை என்ற நினைப்பு. ஊரில் ஏதாவது உரண்டையை இழுத்துவிடும் கல்லூரி மாணவன் மருது. அவனுக்குப் பூரணியைக் கண்டதுமே முதல் பார்வையில் […]

மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்
நவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். ‘மார்டல் இன்ஜின்ஸ்’ எனும் படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது. ‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற பெயரில் பிலிப் ரீவ் எழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம். ‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், […]

2.0 விமர்சனம்
ஒரு படத்திற்கான பட்ஜெட் 500 கோடி என்பது வருங்காலங்களில் சகஜமாகக்கூடும். ஆனால், தற்பொழுது, இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக அந்த மைல்கல்லைத் தமிழ் சினிமா தொட்டுள்ளது என்பது மிகப் பெருமைக்குரிய அசாதாரணமான நிகழ்வு. சூப்பர் ஸ்டாராகிய ரஜினி மட்டுமே இதற்கு முழுக்க முழுக்கக் காரணம். அசாதாரணத்தைச் சாத்தியமாக்கிய லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ்க்கே எல்லாப் புகழும்! படம் திகட்டத் திகட்ட விஷுவல் விருந்தை அளிக்கிறது. திரையை விட்டுச் சீறி வரும் ரஜினியின் தோட்டாகளைக் காணக் கண்டிப்பாகப் படத்தை 3டி-இல் பார்க்கவேண்டும். […]

ஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு
“நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்க கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களை […]

இதுதான் காதலா – புதிய பாணி விஞ்ஞான காதல் கதை
குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ்.முருகன் தயாரித்து வரும் படம் “இதுதான் காதலா”. இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதால் இதில் விஞ்ஞான மனிதனாக இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்திருக்கிறார். காதல் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும் என்பதையும் வலியுறுத்திக் காதலையும் கணினியும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து “இதுதான் காதலா” படத்தைத் தயாரித்து வருகிறார்கள். இதில் கதையின் நாயகனாக சரண், […]

வண்டி விமர்சனம்
டுட்டூ (Duttu) எனும் மஞ்சள் நிற யமஹா RX 135-இன் மூன்று பயணங்களைப் பற்றிய கதை இது. வேலைக்குச் செல்ல கிருஷ்ணாவிற்கு ஒரு டூ-வீலர் தேவைப்படுகிறது; செயினை அறுத்து நகையைக் கொள்ளையடிக்க டிக்ஷனிற்கும் செளகத்துக்கும் ஒரு பைக் தேவைப்படுகிறது; காதலி ரீத்தாவை ஷாப்பிங் கூட்டிச் செல்ல தீபக்கிற்கு ஒரு வண்டி தேவைப்படுகிறது. டுட்டூவில் நடக்கும் இந்த மூன்று பயணங்களையும், வேலைப் பயணம், சாகசப் பயணம், காதல் பயணம் என மூன்று அத்தியாயங்களாய்ப் பிரித்து, ஒரு நேர்க்கோட்டில் இணைக்கிறது […]

சிங்கம்புலி @ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு இசை வெளியீட்டு விழா

‘மீல் டிக்கெட்’ எனும் அட்சய பாத்திரம்
இந்த வருடம் வந்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான திரைப்படம், The Ballad of Buster Scruggs 2018 (பஸ்டர் ஸ்க்ரக்ஸுடைய பிரபலமான பாடல்). கோயன் சகோதரர்கள் எழுதி இயக்கியது. கோயன் சகோதரர்கள் சம கால ஹாலிவுட்டின் தனித்துவமான படைப்பாளர்கள். Fargo, No country for old man போன்ற என்றும் நினைவில் தங்கும் படங்களை அளித்தவர்கள். இந்தத் திரைப்படம் Western ஜானரில் Anthology வகையைச் சார்ந்த திரைப்படம். Western ஜானர் என்றாலே பரந்த வறட்டு நிலங்கள், […]

டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்
தமிழகத்தைச் சூறையாடிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக உயிர் பலிகளையும், பொருளாதார சேதங்களையும் செய்துள்ளதை அடுத்து, அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில், தங்கவும் பொங்கவும் வழியின்றித் தவித்து வருகின்றனர். அறுந்து விழுந்த மின் கம்பங்கள்; அழிந்துபோன கால்நடைகள்; உடைந்துபோன ஓடுகள்; சிதிலமடைந்த குடிசைகள்; இடிந்துபோன வீடுகள்; சிதைந்துபோன செல்வங்கள் என விவசாய பூமியான டெல்டாவைச் சுரண்டியெடுத்துள்ளது கஜா புயல். சென்னையைப் போல் பெருநகரங்களில் மரபு சாரா மாதச் சம்பள வேலைகளைப் பணிபுரிபவர்கள், சென்னை வெள்ளத்திற்கு பிறகு […]

சீதக்காதி – ட்ரெய்லர்

காற்றின் மொழி விமர்சனம்
‘தும்ஹாரி சுலு’ எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக வந்துள்ளது ‘காற்றின் மொழி’ திரைப்படம். சுலோச்சனாவாக நடித்த வித்யாபாலனின் பாத்திரத்தில் விஜயலக்ஷ்மியாக ஜோதிகா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு. ஒரே மாதிரியான அம்சம் பொருந்திய கதைகளிலேயே உழலாமல், ஜோதிகாவைப் போல், முன்னணி நாயகர்களும் படத்தைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? பன்னிரெண்டாம் வகுப்பு தேறாத விஜியலக்ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக ஹலோ எஃப்.எம்.-இல் ஆர்ஜே-வாக (RJ – Radio Jockey) வேலை கிடைக்கிறது. அதனால் அவர் […]

திமிரு புடிச்சவன் விமர்சனம்
விஜய் ஆண்டனி முதல் முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஆனால், ஒரு போலீஸ் படமாக இல்லாமல், 2018 இல் வந்த மிகச் சிறந்த பக்திப் படமென்ற புகழையே திமிரு புடிச்சவன் பெறும். படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தின் பெயர் முருகவேல். இயக்குநரின் பெயர் கணேஷா. நம்பியார் எனும் படத்தை இயக்கியவர். படத்தின் தொடக்கமே கொஞ்சம் அதிர வைக்கிறது. பிளேடைக் கொண்டு மிகக் கொடூரமான கொலை ஒன்றைப் புரிகிறார் […]

உத்தரவு மகாராஜா விமர்சனம்
ரவியின் காதுக்குள், ‘நிற்காமல் ஓடிக்கொண்டே இரு’க்கும்படி உத்தரவிடுகிறார் இரண்டாம் இராஜராஜச் சோழன். அந்த உத்தரவை ரவி மீறினால், செவிப்பறையை அலறச் செய்யும் பலமான ஒலி எழுந்து, ரவியை நிலைகுலையச் செய்துவிடும். மகாராஜாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர ரவிக்கு வேறு மார்க்கம் இல்லை. ஏன் அந்த ஒலி எழுகிறது, யார் அந்த ஒலியை எழுப்புகின்றனர், எப்படி அதிலிருந்து ரவி மீண்டான் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதியில், இரண்டாம் ராஜராஜச் சோழனும் அவனது வீரர்களும் குதிரையில் வருகின்றனர். அஸெல் […]
