32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 149)
தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் விமர்சனம் அயல் சினிமா

தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் விமர்சனம்

அமிதாப் பச்சனும், அமீர் கானும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம். 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படம். ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ போல ஒரு இந்தியப் படம் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தது படத்தின் ட்ரெய்லர். தக்ஸ் என்பது கொலை, கொள்ளையில் ஈடுபடும் கும்பலுக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். அப்படி இந்துஸ்தானின் விடுதலைக்காகப் புரட்சி செய்யும் ஒரு குழுவிற்கு, தக்ஸ் என முத்திரையிட்டு, அதை அடக்கி ஒடுக்க […]

15/11/2018 Dinesh R
ஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர் அயல் சினிமா

ஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர்

மில்லினியம் சீரிஸ் என்பது, ஸ்வீடன் எழுத்தாளர் ஸ்டீக் லார்ஸனால் தொடங்கப்பட்ட 10 பாகங்களுடைய க்ரைம் நாவல் தொடர். ஆனால், அவரது எதிர்பாராத மரணத்தால், இது மூன்று பாகங்களோடு நின்றது. அந்த மூன்று பாகங்களுமே கூட அவரது மரணத்திற்குப் பின்பே வெளியானது. மில்லினியம் என்பது ஒரு பத்திரிகையின் பெயர். அதன் புலனாய்வு பத்திரிகையாளர் மிகேல் பிளான்க்விஸ்ட், மற்றும் லிஸ்பெத் சலாண்டர் ஆகிய இருவரும் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். இந்த சீரிஸின், நான்காவது பாகத்தை டேவிட் லாகர்கிரான்ட்ஸ் தொடர்ந்து எழுதி […]

14/11/2018 Dinesh R
ட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா சினிமா

ட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இரண்டாவது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்த ’36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றிப் போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டுமெனக் கவனமாக இருக்கிறார். […]

14/11/2018 Dinesh R
மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி சினிமா

மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி

ஸ்டூடியோ க்ரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். […]

14/11/2018 Dinesh R
விருதுக்குத் தயாராய் அழியாத கோலங்கள்- 2 சினிமா

விருதுக்குத் தயாராய் அழியாத கோலங்கள்- 2

நட்பையும் காதலையும் இதை விட புனிதப்படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தும் அழியாத கோலங்கள் – 2 திரைப்படம் படத்தில், ஓர் எழுத்தாளராக வாழ்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்; போலீஸ் வேடத்தில் காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்துள்ளார் நாசர்; பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற மாதிரியான காதாபாத்திரத்தில் ரேவதி அழகாக நடித்துள்ளார். இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து அழுத்தமான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் […]

13/11/2018 Dinesh R
செய் – பட வெளியீட்டில் என்ன குழப்பம்? சினிமா

செய் – பட வெளியீட்டில் என்ன குழப்பம்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் “செய்”. இந்தப் படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]

11/11/2018 Dinesh R
தயாரிப்பாளர் சங்கத்துக்கு ’96 தயாரிப்பாளரின் எச்சரிக்கை சினிமா

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ’96 தயாரிப்பாளரின் எச்சரிக்கை

விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்குப் படம் வெளியிடுவதற்கு முன்பே விஷால் அவர்களுக்கு பணம் செட்டில் செய்யப் பட்டு விட்டது. ‘96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஊதிய பாக்கி இருப்பதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நந்தகோபால், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதுவரை நான் […]

11/11/2018 Dinesh R
KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை அயல் சினிமா

KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

தென்னியாவில், கோலிவுட், டாலிவுட், மாலிவுட் போல் சாண்டல்வுட் தனது பிராந்தியத்தைத் தாண்டிப் பெரிதும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. விதிவிலக்கான சில படங்களைத் தவிர்டத்து, சாண்டல்வுட் தத்தித் தத்தியே நடை பழகி வந்தது. தற்போது, கன்னடத் திரையுலகமும் தனது பிராந்தியத்தை விட்டுத் தாவிப் பாயத் தொடங்கியுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தாலே அது தெரியும். கே.ஜி.எஃப் (KGF) என்பது கோலார் கோல்ட் ஃபீல்ட் (கோலார் தங்க வயல்) என்பதன் சுருக்கமாகும். அக்டோபரில் வெளியான, வில்லன் எனும் கன்னடத் திரைப்படம் தான் […]

10/11/2018 Dinesh R
சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம் சமூகம்

சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையைக் கிளப்பித் திரையரங்கப் பதாகையைக் கிழித்துப் போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினார். இது வன்முறையான கண்டிக்கத்தக்க அநாகரிகச் செயலாகும்.   சர்கார் திரைப்படம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டுத் தணிக்கைக் குழுவின் ஆட்சேபணையின்றி வெளிவந்த வேலையில் அத்திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்கச் சொல்லிப் போராடுவது சட்டவிரோதச் செயலாகும். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பியடிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதைத் […]

09/11/2018 Dinesh R
களவாணி மாப்பிள்ளை விமர்சனம் சினிமா

களவாணி மாப்பிள்ளை விமர்சனம்

எந்த வாகனமும் ஓட்டத் தெரியாத தேவாவிற்கு, பைக்கில் பறக்கும் துளசி மீது காதல் வந்துவிடுகிறது. துளசிக்கும் தேவாவைப் பிடித்துப் போய் விட, கல்யாணப் பேச்சை எடுக்கின்றனர். துளசியின் அம்மாவான பணக்கார ராஜேஸ்வரிக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். மாப்பிள்ளைக்குக் காரோட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே அது. அங்குத் தொடங்கும் மாப்பிள்ளையின் களவாணித்தனம் எங்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. படம் ஸ்பூஃப் படம் போல் தெரிகிறது. நாயகியின் அம்மாவாக நடிக்கும் தேவயாணியின் பெயர் ராஜேஸ்வரி. மாப்பிள்ளை […]

08/11/2018 Dinesh R
பில்லா பாண்டி விமர்சனம் சினிமா

பில்லா பாண்டி விமர்சனம்

அஜீத்தின் தீவிர ரசிகர் பில்லா பாண்டி. அவரும், அவரது அத்தை மகள் சாந்தினியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, பாண்டியை ஒருதலையாகக் காதலிக்கும் இந்துஜாவால் பாண்டிக்கு மிகப் பெரும் பிரச்சனை எழுகிறது. சூழ்நிலைகள்மிக மோசமாகி, ‘தல’ச்சாமியின் அருள் அவரை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதை இடைவேளையில் தான் தொடங்குகிறது. அதுவரை, மேஸ்திரியாக வரும் தம்பி ராமையாவின் ‘மீ டூ’ அத்தியாயங்கள் கொலையாகக் கொல்கிறது. ‘கருப்பட்டி மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் போதும். யாரை வேண்டுமானாலும் சம்மதிக்க […]

06/11/2018 Dinesh R
சர்கார் விமர்சனம் சினிமா

சர்கார் விமர்சனம்

தனது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் போட்டு விடுவதால், செக்‌ஷன் 49 P-இன் படி, மீண்டும் சட்டத்தின் உதவியோடு பேலட் ஓட்டைப் போடுகிறார் சுந்தர் ராமசாமி. கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் சுந்தரைச் சீண்டி விட, தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார் சுந்தர். செங்கோலினை நிறுவ நல்லதொரு சர்க்கார் அமையவேண்டுமென விரும்புகிறார் சுந்தர் ராமசாமி. செங்கோல் என்றால் நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி. […]

06/11/2018 Dinesh R
2.0 எனும் அதி பிரம்மாண்டம் சினிமா

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, […]

04/11/2018 Dinesh R