32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 166)
“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல் சினிமா

“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்

ஹன்சிகா மோத்வானி பிரதான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை அறிவித்திருக்கிறது ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ். இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சவாலான அக்கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார். நாயகியை மையப்படுத்திச் சுழலும் இந்த த்ரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் […]

06/05/2018 Dinesh R
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம் அயல் சினிமா

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

இந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் விருப்பப்பட்ட எல்லைக் காவல் வேலை, சூர்யாவிற்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ‘கோபம் வந்துச்சு. அடிச்சேன்’ என்ற சூர்யாவின் அறிமுக அத்தியாயமே தூள். ‘இவன் தான் சூர்யா’ எனப் பார்வையாளர்களை முழுப் படத்திற்கும் தயாராக்கிவிடுகிறார் இயக்குநர் வம்சி. முறுக்கேறிய உடலுடம் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன், சூர்யா பாத்திரத்திற்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறார். கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் […]

05/05/2018 Dinesh R
காத்திருப்போர் பட்டியல் விமர்சனம் சினிமா

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

‘வெயிட்டிங் லிஸ்ட்’ என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப் புரிந்து கொள்ளலாம். படம் இரயில்வே ஸ்டேஷனில், அதாவது இரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்கிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். காதலைச் சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் என்றும் தலைப்பிற்கு ஓர் உபப்பொருளை ஒரு பாடலின் வரியில் அளித்துள்ளனர். சத்யாவும் மேகலாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாளன்று தாம்பரம் இரயில்வே போலீஸாரினால் கைது செய்யப்படுகிறான் சத்யா. அவர்களின் […]

04/05/2018 Dinesh R
இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன் சினிமா

இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்

திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்” என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும் கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்? இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் […]

02/05/2018 Dinesh R
“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர் சினிமா

“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர்

நடிகர் பாண்டியராஜின் மகன் ப்ரித்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள படம் “தொட்ரா”. ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில், டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்த ஜெய்சந்திரா சரவணக்குமார் எனும் பெண்மணி தயாரித்துள்ளார். “ ‘என் மகனுக்குத் திரைப்படங்களில் நடிக்க மிகவும் ஆசை. அவனை ஒரு படத்திலாவது நடிக்க வைத்துவிடு’ என்றார் என் மாமியார். அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாகவும் எனது கணவரை நடிகராகப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன். என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே […]

02/05/2018 Dinesh R
“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ் சினிமா

“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

ஆணவக்கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் “தொட்ரா”. இயக்குநர் பாக்கியராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி நாயகனாக நடித்துள்ளார்.  அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டியராஜன், “ப்ரித்வி இவ்வளவு நண்பர்களைச் சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல […]

02/05/2018 Dinesh R
“தொட்ரா என்றால்?” – இயக்குநர் பேரரசு சினிமா

“தொட்ரா என்றால்?” – இயக்குநர் பேரரசு

“ரசிகர்களும் தியேட்டர்களும் கணவன் மனைவி போலத்தான். கணவனை விட்டுவிட்டு மனைவி கோபித்துக் கொண்டு சில நாட்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் சீக்கிரமே திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையென்றால் மனைவி இல்லாமல் எல்லா வேலைகளும் செய்வதற்குக் கணவனுக்குப் பழகிவிடும். அப்படித்தான் போராட்டம் என்கிற பெயரில் திரையரங்குகளை நீண்ட நாட்கள் மூடி வைத்திருந்தால் போகப் போக ரசிகர்களுக்கு சினிமா பார்ப்பது என்கிற ஒன்றே மறந்துவிடும். நல்லவேளையாக சீக்கிரமே வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது” எனக் கூறினார் ‘தொட்ரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு […]

02/05/2018 Dinesh R
சில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம் சினிமா

சில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம்

விமர்சன ரீதியாகக் கவனிக்கப்படும் படங்களைக் கொடுக்கும் பிரியதர்ஷன், கலையம்சம் பொருந்திய படங்களைத் தருவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரைப் பயணத்தில், இன்னொரு வைரக்கல்லாகச் சேர்ந்திருக்கிறது அவர் இயக்கிய ‘சில சமயங்களில்’ திரைப்படம். இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் […]

30/04/2018 Dinesh R
“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர் சினிமா

“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி வகை சேர்ந்த படம் என்பதாலும், ஹர ஹர மஹாதேவகி இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கியுள்ளதாலும், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது. படத்தின் இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில், “நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்? கருத்துச் சொல்லும் […]

28/04/2018 Dinesh R
பக்கா விமர்சனம் சினிமா

பக்கா விமர்சனம்

விக்ரம் பிரபு முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அரசன்குடியைச் சேர்ந்த ஜமீன்தாரின் மகளான நதியாவிற்கு, திருவிழாவில் பொம்மை கடை வைக்கும் பாண்டி மீது காதல் வருகிறது. தனது அந்தஸ்தினை நினைத்துத் தயங்கும் பாண்டியை ஊர் ஊராய்த் தேடிச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார் நதியா. தாம்பரம் ரயில் நிலையத்தில் நதியாவை உட்கார வைத்து விட்டுச் செல்லும் பாண்டி திடீரெனக் காணாமல் போவதால், தற்கொலை புரிந்து கொள்ள தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார் நதியா. அச்சமயம், குடித்து […]

27/04/2018 Dinesh R
தியா விமர்சனம் சினிமா

தியா விமர்சனம்

‘கரு’ உருமாறி ‘லைக்காவின் கரு’வாகி, தியாவாக ஜனித்துள்ளாள். பக்தொன்பது வயதான துளசி கர்ப்பமடைந்து விடுகிறாள். துளசியின் வீட்டினரும், அவளது காதலனான கிருஷ்ணாவின் வீட்டினரும், சிறு சச்சரவிற்குப் பின், இவர்கள் காதலை ஏற்றுக் கொண்டு, துளிசியின் கருவைக் கலைக்கச் சொல்கின்றனர். 24 வயதில் இருவருக்கும் சொன்னபடி திருமணமும் செய்து வைக்கின்றனர். அதன் பின் அவர்கள் வீட்டில் தொடர் மரணங்கள் நிகழ்கிறது. எதனால் ஏன் என்பது தான் படத்தின் கதை. ‘ப்ரேமம்’ படப் புகழ் மலர் டீச்சரான சாய் பல்லவி […]

27/04/2018 Dinesh R
தங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா சினிமா

தங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா

நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா, மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். “என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள். என்னை இயக்குநர் வசந்த் அழைத்து ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்க வைத்தார். தம்பியை ஞானவேல்ராஜா தான், ‘நான் பார்த்துக்கிறேன்’ எனச் சொல்லி நாயகன் ஆக்கினார். அதே போல், பிருந்தாவிற்கும் தயாரிப்பாளர் […]

25/04/2018 Dinesh R
அல்லு அர்ஜுனின் – என் பெயர் சூர்யா சினிமா

அல்லு அர்ஜுனின் – என் பெயர் சூர்யா

ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘என் பெயர் சூர்யா – என் வீடு இந்தியா’. அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கின்றனர். “அல்லு அர்ஜுன் கேரியரில் இது ஒரு சிறந்த படம். இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் பெயர் ஸ்ரீதர், என் வீடு இந்தியா என்று தான் சொல்லத் தோன்றியது. பாகுபலி, பாகமதி உட்பட தெலுங்குப் படங்களைத் தமிழ்நாட்டில் முழுமனதோடு வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் […]

24/04/2018 Dinesh R
ஐல – ஹாரர் த்ரில்லர் படம் சினிமா

ஐல – ஹாரர் த்ரில்லர் படம்

சினிமாவைப் பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும். மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத் தருவதால் அறிமுக இயக்குநர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தைத் திருப்புகின்றனர். அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி. ரியங்கா ஃபிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி […]

23/04/2018 Dinesh R