32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 30)
ரெட்ரோ | படக்குழுவிற்கு வைர மோதிரம் பரிசளிப்பு சினிமா

ரெட்ரோ | படக்குழுவிற்கு வைர மோதிரம் பரிசளிப்பு

2டி என்டர்டெய்ன்மென்ட், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்தியேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் […]

11/05/2025 Dinesh R
கஜானா விமர்சனம் | Ghajaana review சினிமா

கஜானா விமர்சனம் | Ghajaana review

நாகமலையில் புதையுண்டிருக்கும் பொக்கிஷத்தை யாளி எனும் மிருகம் காவல் காக்கிறது. அப்பொக்கிஷத்தை அடைய நினைக்கும் மனிதர்கள் அனைவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். காசியப முனிவர்க்கு ஆரி, சூரி என இரண்டு மனைவிகள் என ஒரு கிளைக்கதை பிரிகிறது. ஹிந்துப் புராணத்தின்படி, காசியப முனிவர், தக்ஷனின் எட்டு மகள்களை மணம் புரிந்தவர். அதில், கத்ரு எனும் மனைவியின் மூலமாக 1000 நாகர்களும், கத்ருவின் இளைய சகோதரி வினதா மூலமாக அருணன், கருடன் என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்தப் […]

09/05/2025 Dinesh R
நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review சினிமா

நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். நிழற்குடையின் அருமையோ வெயில், மழை என இரண்டிலும் தெரியும். நிழற்குடையை மனித உறவுகளுக்கான குறியீட்டுத் தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். நிரஞ்சனும் லான்சியும் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலா என்றொரு குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர்-டேக்கரை நியமிக்கிறார்கள். ஆனால் கேர்-டேக்கர் ஒத்து வராததால், ஆசிரமத்தில் இருந்து ஜோதிம்மாவை அழைத்து வருகின்றனர். திடீரென நிலா காணாமல் […]

09/05/2025 Dinesh R
Bison: Kaalamaadan | தீபாவளி 2025 சினிமா

Bison: Kaalamaadan | தீபாவளி 2025

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம் வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின் ஆழமான கதையைச் சொல்ல வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், […]

08/05/2025 Dinesh R
எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் | Dr. Sangeetha – Kauvery Hospital மருத்துவம்

எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் | Dr. Sangeetha – Kauvery Hospital

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிறுநீர் கட்டுப்பாடின்மை காரணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து அசௌகரியத்தை அனுபவித்த எட்டு வயது சிறுமிக்கு, ஒரு தனித்துவமான பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Reimplantation Surgery) அறுவைs சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எக்டோபிக் யூரிட்டர் (Ectopic Ureter) எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சையினால் இறுதியாக முழு நிவாரணம் பெற்றுள்ளார். அவர், இன்று குணமடைந்து வருவது விடாமுயற்சி, கருணைகூர் பராமரிப்பு, மற்றும் முழுமையான மருத்துவ நிபுணத்துவத்தின் […]

07/05/2025 Dinesh R
தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review இது புதிது

தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review

தானோஸ் மார்வெலில் ஏற்படுத்திய வெறுமைக்குப் பிறகு, மீண்டும் மார்வெலின் மேஜிக் இப்படத்தில்தான் துளிர்ந்துள்ளது. ‘பன்னண்டம்’ என இடியாப்ப குழப்பம் இல்லாத எளிமையான நேரடிக் கதையென்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சி.ஐ.ஏ.-வின் இயக்குநர் வேலன்டினா, அவெஞ்சர்ஸ் இல்லாத குறையைப் போக்குவதற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், “சென்ட்ரி” எனும் சூப்பர் பவர் மிக்க ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில், O.X.E. எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சட்டவிரோதமான முறையில் மனிதர்களைக் கொண்டு பல சோதனைகளை நடத்தி, அதில் தோல்வி காணும் […]

06/05/2025 Dinesh R
“அலப்பறை செய்யும் கவர்ச்சி மாம் நான்” – கஸ்தூரி | DD Next Level சினிமா

“அலப்பறை செய்யும் கவர்ச்சி மாம் நான்” – கஸ்தூரி | DD Next Level

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16 Aம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிகழ்வில் பேசிய நடிகர் நிழல்கள் ரவி, “சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் […]

06/05/2025 Dinesh R
மிஷ்கின் @ DQ 40 படப்பூஜை| I am Game அயல் சினிமா

மிஷ்கின் @ DQ 40 படப்பூஜை| I am Game

Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 ஆவது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் […]

05/05/2025 Dinesh R
HIT: The Third Case விமர்சனம் | Hit 3 review அயல் சினிமா

HIT: The Third Case விமர்சனம் | Hit 3 review

விசாரணையை மையமாகக் கொண்ட முதலிரண்டு பாகங்களைப் போலல்லாமல், கொஞ்சம் விசாரணை — பக்கா ஆக்‌ஷன் த்ரில்லராக ஹிட் 3-ஐ இறக்கியுள்ளார் இயக்குநர் சைலேஷ். தலைக்கீழாகத் தொங்க விட்டு, ஒரு மனிதரின் கழுத்தை அறுத்துக் கொள்ளும் வழக்கினை அர்ஜுன் சர்க்கார் விசாரிக்கிறார். இந்தியா முழுவதும் இந்த பாணியில் பல்வேறு கொலைகள் நடப்பதைத் தெரிந்து கொள்கிறார். டார்க் நெட் மூலமாக, இந்தக் கொலைகாரர்களை இயக்குபவனைக் கண்டறியக் களமிறங்குகிறார் அர்ஜுன் சர்க்கார். மிருதுளா எனும் ASP பாத்திரத்தில், KGF நாயகி ஸ்ரீநிதி […]

02/05/2025 Dinesh R
ரெட்ரோ விமர்சனம் | Retro review இது புதிது

ரெட்ரோ விமர்சனம் | Retro review

ரெட்ரோ எனும் சொல் பின்னோக்கிய காலத்தைக் குறிக்கிறது. கதையின் காலகட்டம் செல்ஃபோன்கள் பரவலாகாத தொண்ணூறுகளின் இறுதியாகும். தூத்துக்குடியில், ஒரு டானால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்படுகிறார் பாரிவேல் கண்ணன். அடிதடியே வாழ்க்கையென வாழும் பாரிக்கு சுமார் 35 வயதானதும், அவரது காதலி ருக்மிணியின் விருப்பத்திற்கிணங்க வன்முறையைக் கைவிட முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகத் அவரது திருமண நாளன்றே, ருக்மிணியை வெட்ட வரும் வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டி விடுகிறார் பாரி. பாரி சிறைக்குச் செல்கிறார், மனம் நோகும் ருக்மிணி தலைமறைவாகிறார், மகனிடம் […]

01/05/2025 Dinesh R
Eleven | D.இமான் இசையமைக்கும் முதல் த்ரில்லர் படம் சினிமா

Eleven | D.இமான் இசையமைக்கும் முதல் த்ரில்லர் படம்

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் உருவாகியுள்ள ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ‘லெவன்’ பத்தின் ட்டிரெய்லரை உலக நாயகன் கமல்ஹாசன் […]

30/04/2025 Dinesh R
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review இது புதிது

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் […]

30/04/2025 Dinesh R
“இந்த நூற்றாண்டின் சிறந்த படம்” – சமுத்திரக்கனி | Tourist Family சினிமா

“இந்த நூற்றாண்டின் சிறந்த படம்” – சமுத்திரக்கனி | Tourist Family

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் பேசிய லப்பர் […]

28/04/2025 Dinesh R
“இரத்தக்களறி இல்லாத சசிகுமார் படம்” – புஷ்கர் காயத்ரி | Tourist Family சினிமா

“இரத்தக்களறி இல்லாத சசிகுமார் படம்” – புஷ்கர் காயத்ரி | Tourist Family

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் […]

28/04/2025 Dinesh R
“போரின் வலியைச் சிரிப்பில் மறைத்துள்ள படம்” – த.செ.ஞானவேல் | Tourist Family சினிமா

“போரின் வலியைச் சிரிப்பில் மறைத்துள்ள படம்” – த.செ.ஞானவேல் | Tourist Family

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் […]

28/04/2025 Dinesh R